Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் நடந்த 10 கொலைகள் சர்வசாதாரணமான விடயம்! : சிறிலங்கா பிரதமர் அலட்சியப் பதில்

Featured Replies

குடாநாட்டில் அசம்பாவிதம்; நாடாளுமன்றில் காரசாரம்

யாழில் நடந்த 10 கொலைகள் சர்வசாதாரணமான விடயம்!

பிரதமர் அலட்சியப் பதில்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-21 09:39:38| யாழ்ப்பாணம்]

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று காரசாரமான விவாதம் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் ஜனவரி 8ஆம் திகதி வரையான காலப் பகுதியில் பத்துக் கொலைகள் இடம்பெற்றுள்ளமை குறித்து எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபையின் கவனத்தையீர்த்தார்.

கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் யாரும் இதுவரை கைது செய்யப்படாமை கவலைக்குரிய விடயமாகும் எனவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிகளிலும் கூட இவ்வாறான சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், யாழ்ப்பாணத்தின் 30 வீதமான நிலப்பரப்பு அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான கொலைச் சம்பவங்கள் மற்றும் கொள்ளைகள், பாலியல் வல்லுறவு முயற்சிகள் நடைபெறுவது எங்ஙனம் என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பிரதமர் டி.எம்.ஜயரட்ண ஒட்டுமொத்த நாட்டையும் எடுத்துபார்க்கும் போது யாழ்ப்பாணத்தில் நடைபெறும் விடயங்கள் சர்வசாதாரனமானவை என்று கருத்துத் தெரிவித்தார். எனினும் அதனை அலட்சியப்படுத்திவிட முடியாது என்றும் அரசாங்கம் என்றவகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் ஜனநாயகம் நிலவுகின்றதா என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய அமர்வில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் சம்பவங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர யாழ்ப்பாணத்தில் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளுக்குப் பாதுகாப்புச் செயலாளரின் அனுமதியைப் பெற வேண்டியுள்ள நடைமுறையைக் கடுமையாக விமர்சித்தார். விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிபுக்கு வந்தபின் வடக்கில் ஜனநாயகம் மலர்ந்துள்ளதாக அரசாங்கம் பிரசாரம் செய்கின்றது. ஆனால் யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாயின் பாதுகாப்புச் செயலாளரிடம் அதற்கு அனுமதி பெற்றாக வேண்டும்.

கோத்தபாய ராஜபக்சவின் அனுமதியுடன் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை எவ்வாறு ஜனநாயகச் செயற்பாடுகள் என்று கருத முடியும்? இவற்றை நாங்கள் சுட்டிக்காட்டினால் எங்களை தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்றார். யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கவனயீர்ப்புப் பிரேரணையைக் கொண்டு வந்து உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அண்மையில் வடமராட்சியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற இளம் பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்திச் சென்றனர் எனக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த அரசின் நாடாளுமன்ற அவைத் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

குறித்த இளம் பெண்ணின் சைக்கிள் காற்றுப்போய்விட்டது. அதனால் அந்த பெண்பிள்ளை மோட்டார் சைக்கிளில் ஒய்யாரமாக ஏறிச்சென்றுள்ளார். இது பற்றி நீங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என ஏளனமாகப் பதிலளித்தார். யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்களில் சிலர் மனநோயாளிகள் என்றும் அவர்கள் கொல்லப்படவில்லை மாறாக அவர்கள் மரணமடைந்துள்ளனர் என்றும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் குறித்து நேற்று எதிர்க்கட்சிகள் காரசாரமான விவாதம் நடத்திய போதிலும் அரச தரப்பில் அளிக்கப்பட்ட பதில் வேடிக்கையாக இருந்ததாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=15345

இப்ப நடக்கும் கொலைகளுக்கும் புலிகள் செய்தவை தான் காரணம் எண்டு நிறுவி துணை போக எங்களுக்கை தெளிவாய் ஆக்கள் இருக்கும் மட்டும் அவனுக்கு என்ன கவலை...???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.