Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள் குடியேற்றம் செய்யப்பட்டோர் குறித்து ஐ நா கவலை

Featured Replies

மீள் குடியேற்றம் செய்யப்பட்டோர் குறித்து ஐ நா கவலை

இலங்கையின் வடபகுதியில் போரினால் இடம்பெயர்ந்து மீள குடியேறியுள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை சேவைகள், இருப்பிடம் மற்றும் குடிநீர் போன்ற விடயங்கள் போதுமான அளவவில் கிடைக்கவில்லை என்று ஐநாவின் துணை பொதுச் செயலாளரான கத்தரின் பரக் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை வட பகுதிக்கு சென்று வந்த அவர், வெள்ளிக் கிழமையன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார். வடபகுதியில் மீளக்குடியேறிய மக்கள் இன்னமும் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கின் எதிர்காலம் என்பது அங்கு மக்களில் முதலீடு செய்வது என்பதிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டு நடாத்த அவர்களுக்கு தேவையான திறன்களை வளர்ப்து, வாழ்க்கை வசதிகள் மற்றும் சமூக மேம்பாடு ஆகியன அவசியமானவையாக இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களை வான் மூலமாக தான் பார்வையிட்டதாகக் கூறிய அவர், அந்தப் பகுதிக்கான தனது விஜயம் அங்கிருக்கின்ற பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் கூறியுள்ளார்.

அந்தப் பகுதி மக்களின் நிவாரணத்துக்காக 51 மில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக அவர் கோரியுள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/01/110121_unlankaconcern.shtml

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை

இலங்கைக்கு வந்த ஐ.நா.அதிகாரி தெரிவிப்பு

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-22 09:26:45| யாழ்ப்பாணம்]

வடக்கில் யுத்தத்தால் இடம்பெயர்ந்து மீளக் குடியேறியவர்களில் பெரும்பான்மையானோருக்கு அடிப்படைத் தேவைகளான புகலிடம், நீர் மற்றும் சுகாதார சேவைகள் என்பன மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் அவசர உதவிகளுக்கான பிரதி இணைப்பாளருமான கதரீன் பிரேக் நேற்றுத் தெரிவித்தார்.

தற்போதைய மனிதாபிமான உதவிகளைக் கண்காணிப்பதற்காகவேதான் இலங்கை வந்ததாகவும் தனது கண்காணிப்பின்படி அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கும் அவசர மனிதாபிமான உதவிகள் தேவை எனவும் அவர் கூறினார்.

இலங்கையில் எந்தப் பகுதிக்கும் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருக்கின்றது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஒரு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் அவசர தேவைகளுக்காக 51 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை அரசுக்கு ஐ.நா.வழங்கியுள்ளது.

முதன்மைத் திட்டங்களுக்காக அவசர மத்திய திட்டத்தின் ஊடாக ஆறு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கவுள்ளோம். வடமாகாணத்தை மீளக் கட்டியெழுப்ப ஐக்கிய நாடுகள் சபையும் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களும் இலங்கை அரசுக்கு உதவத் தயாராக உள்ளன என்பதை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ச, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்தபோது தெரிவித்துள்ளேன்.

ஐ.நா. முகவர் நிறுவனங்களுக்கும் உள்ளூராட்சி முகவர் நிறுவனங்களுக்கும் இடையிலான உறவை கட்டியெழுப்பவேண்டும். அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இலங்கையில் பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்ட போதிலும் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்ற அடிப்படையிலும் நேரம் போதாமையின் காரணமாகவுமே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மாத்திரம் என்னால் விஜயம் செய்ய முடிந்தது என்றார்.

மூன்றுநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைவந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் அவசர உதவிகளுக்கான பிரதி இணைப்பாளருமான கதரீன் பிரேக் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்ததுடன் இலங்கை அரசின் பிரதிநிதிகளையும் சந்தித்தார்.

valampurii.com

எமது மக்களுக்காக முதலை கண்ணீர் வடிப்பதே ஐ.நா.வின் தொழிலாகிவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.