Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் சிதைவுகளும் கருச் சிதைவுகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் தேடும் அப்பாவிப் பூக்கள் அனுபவம் மிக்க வண்டுகளின் பசிக்கு இரையாகி

கருகி வீழ்கின்றன. இவ்வாறே நம் சமூகத்திலும் உரசிக் கொண்ட பாவத்திற்காய்

உயிர்விடும் தீக்குச்சிகளாக காதல் என்ற சொல்லில் தொடங்கி தற்கொலைவரை

நீழ்கின்ற துன்பியல் சாகரம் ஏன் இதயத்தில் இடம் தேடிய பறவை சிறைப்படவில்லை

சிதையில் எரிவதா?.

தற்போது பெரிதும் காதல் என்ற உருமறைப்பில் காமம் அரங்கேற்றப்படுவதே

நிகழ்வாகிப் போய்விட்ட சூழலில் கருச்சிதைவுகளும் தற்கொலைகளும் சகஜம் என்று

கூறும் நிலையை நோக்கி நகர்கின்றன.

கருச்சிதைவு மேற்கொள்வது சட்டப்படி தவிர்க்கப்பட்ட விடயமாகும். இதைவிட

நாட்டின் சில பாகங்களில் கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவு உண்டு பண்ணும் மருந்து

வகைகள் பெற முடியாத நிலையே காணப்படுகிறது. (யாழ் குடாநாடு உட்பட) எமது சூழலில்

அண்மைக்கால மாற்றங்களின் பின் அலைபேசிகளின் அதிகரித்த பயன்பாடு அத்துடன்

மட்டுமல்லாது கானொளி ஜஎனைநழ phழநெஸ வசதிகளும் இளம் வயதினரிடையே கவனக்

கலைப்பான்களாகவே காணப்படுகின்றன. இவ்வாறான வசதி தவறுகளின் மீதான ஈர்வையை

அதிகரித்துள்ளது என்றால் மிகையாகாது இவ்வயதினரை உணர்வு ரீதியாக பாதிப்புற

செய்யும் விதத்தில் செல்போன்கள் உச்சக் கட்ட பங்களிப்பை செய்கின்றன..

இணயத்தளங்கள் இவறறோடு சின்னத்திரைகளும் தவறாது தவறுகளையே தினம் தோறும்

காண்பிக்கின்றன. இவ்வாறு ஏற்படும் உணர்வு ரீதியான குழப்பம் காதல் என்ற உருவில்

பரிணமிக்கின்றது. தற்காலத்தில் காதலில் உண்மைத் தன்மை என்பது மிகவும் அருகிப்

போய் விட்ட விடயமாகவே உள்ளது. சுருக்கமாக கூறின் “காதல் ஒன்றும் கடவுள் இல்லை

ஓமோன் செய்யும் கலகம் தானடா” என்பதே நியமாகின்றது.

எமது சமூக அமைப்பின் அந்தஸ்து பேதம், சீதனம் போன்றவற்றாலும் காதலினூடு வாழ்வை

அமைத்துக் கொள்ள எத்தனிக்கும் யுவதிகள் வாழ்வு காதல் வன்முறைகள் என்ற

பக்கத்தில் திருப்பப்பட்டு சிதைவுறுகின்றது.

இவ்வாறே சமூக அந்தஸ்து சமூகத்தின் கோரமாக பார்வையில் இளவயதுக் கர்ப்பம்

வலுவாகவே மாட்டிக் கொள்கின்றது. இந்நிலையில் மேலும் தவறுகளை அனுசரிக்கும்

விதமாக சில வசனம் கையாளப்படுகின்றன. “மருந்து இருக்கு ஒன்றுக்கும் பயப்பட

வேண்டியதில்லை” என்ற நம்பிக்கை ஊட்டல் வாசகங்களை நம்பி தவறுக்கு

ஆட்படுத்தப்படும் யுவதிகளுக்கு தெரிய வேண்டும். அம்மருந்துகள் நாட்டின்

சிலபகுதிகளில் விற்பனையில் இல்லை என்பதும் கருச்சிதைவு மேற்கொள்ளலில்

ஏற்படும் உயிராபத்தும் கட்டாயம் தெரிய வேண்டியதே காலத்தின் தேவையாகும்.

கருச்சிதைவு என்றால் மிகவும் எளியது என்ற எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும்.

குற்றவியல் கருச்சிதைவு என்பதே அதிகமாக கருக்கலைப்பு என்ற பெயரில் சில

சட்டவிரோதமான முறையில் இரகசியமாக நிறைவேறுகின்றது. இறுதியில் இவர்கள்

உயிராபத்துடனும், உயிர் ஆபத்தை அண்மித்த நிலையிலும் அரச மருத்துவமனைகளில்

அனுமதிக்கப்படுகின்றன.

குற்றவியல் கருச்சிதைவை மேற்கொள்ளும் போது தொற்று நீக்கல் என்னும் விடயம்

பொதுவாக கவனிக்கப்படுவதில்லை என்றே கூற வேண்டும். இதனால் குற்றவியல்

கருச்சிதைவுக்கு உள்ளான பெண் சில நாட்களில் கருதிப் பெருக்குடன் காய்ச்சல்

ஏற்பட்டு குருதி முழவதும் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைகின்றனர்.

இதுமட்டுமல்லாது சில குற்றவியல் கருச்சிதைவை மேற்கொள்பவர்கள் கம்பிகள், சில

வகை மரகுச்சிகள் (ஆமணக்கு) போன்றவற்றை பயன்படுத்துவதால் மரணம் என்பது

உறுதியாகவே உள்ளது.

இவை இவ்வாறிருக்க மருத்துவமனைகளில் சத்திரசிகிச்சை கூடத்தில் சில

சந்தர்ப்பங்களில் கருச்சிதைவுகள் மேற்கொள்வதற்கு சட்டத்தில் அனுமதி உண்டு.

அவ்வாறான நிகழ்வில் னுரூநு ஜனடையவழைn யனெ நஎயஉரயவழைn ஸசிகிச்சை

மேற்கொள்ளப்படும். இச்சிகிச்சையில் கருப்பையின் வாய் திறக்கப்பட்டு கருப்பை

உள்ள சிசு உறிஞ்சி எடுக்கப்படும்.

இச்செயற்பாடு மயக்க மருந்தேற்றப்பட்டு நிலையில் மேற்கொள்ளப்படும். கருப்பை

வாய் திறக்கப்படும் போது ஏயளழஎயபயட ளாழஉம என்ற நரம்பு சார் அதிர்ச்சி

ஏற்படுவதுண்டு. இந்த நரம்பு சார் அதிர்ச்சி ஏற்படின் உயிராபத்து ஏற்படும்

சாத்தியங்கள் மிக மிக அதிகம். சத்திரசிகிச்சை கூடத்தில் மின்முறை

அவனிப்பான்களின் உதவியுடன் இதன் பாதிப்பை தவிர்த்துக்கொள்ள முடியும்

இங்கே தான் கவனிக்க வேண்டும். குற்றவியல் கருச்சிதைவு மேற்கொள்ளப்படும் போது

மயக்க மருந்து பயன்படுவது மதுசாரத்தால் மயங்கிய நிலையிலேயே

மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் ஏயளழஎயபயட ளாழஉம வரும் வாய்ப்புக்கள்

தாராளமாகவே உண்டு.

இச்செயற்பாட்டை மேற்கொள்பவர் மயக்க மருந்தேற்றும் வைத்தியருக்கான குறைந்த

பட்ச அறிவை கொண்டிருப்பரா என்ற கேள்விக்கு விடை காண முடியாது உள்ளது. இதனால்

ஏயளழஎயபயட ளாழஉம வரும் போது மரணம் சம்பவிக்கப்பட அதிக வாய்ப்புகள் உண்டு

இதைவிட சிசுவின் பகுதிகள்ஜிசழனரஉவ ழக உழnஉநிவழைஸெ முற்றாக அகற்றப்படாவிடன்

கருப்பை சுருங்கி இயல்பான நிலைக்கு வராது கருப்பை சுருக்கும் போது குருதிக்

குழாய்களின் வெளித்தோன்றல் குறைக்கப்படுகின்றது. இதனால் குருதியிழப்பு

குறைகின்றது.

இவ்வாறால்லாமல் சிசுவின் பகுதிகள் கருப்பையில் எஞ்சுமாயின் குருதியிழப்புடன்

இறப்பு; ஏற்படு என்பதே உறுதி.

இவ்வாறு குற்றவியல் கருச்சிதைவை மேற்கொள்ளும் போது பயன்படும் ஆயுதங்களால்

தவுறதலாக கருப்பையின் சுற்றயலில் காணப்படும். நேர்குடல், சிறுநீர்ப்பை என்பன

தாக்கமுறுவதும் இதனால் சில சமயங்களில் பிற்காலத்தில் சிறுநீர், மலம் போன்றன

யோனிப்பாதை விழி வெளியேறவும் சந்தர்ப்பங்கள் உண்டு.

இவ்வாறான மிகை ஆபத்தை ஏற்படுத்தும் கருச்சிதைவு ஒரு விசப்பரீட்சை என்றே கூற வேண்டும்.

மேலும் கருச்சிதைவு மேற்கொள்வதாலும் எதிர்பாராத கர்ப்பத்துக்கு ஆளாவதாலும்

பாலியல் நோய்கள் உருவாகும். வாய்ப்புகள் அதிகம் என்றே கூறலாம்.

எனவே கருச்சிதைவை உண்டு பண்ணும் அளவிற்கு அறிமுகமில்லாத காதல்களும், முகவரியில்ல

நட்பும் கண்வுடன் காதல் இந்த நிலை மாற வெண்டும் காதல் என்பது புனிதமானது. அது

வாழ்வுக்கு தேiவாயனது காமத்தைமட்டும் உள்ளீடாகக்கொண்ட மேற்படி காதல்கள் காதல்

அல்ல. அவை காதல் சிதைவுகளே காதல் காமத்தை அடிப்படையாக கொண்டு அமைவதைவிட

காதல் அன்பை கொண்டு கட்டிஎழுப்பப்படின் வாழ்வின் பிற்காலங்களிலும் இனிமை

குன்றாது. காமத்தின் வாழ்வு ஏறக்குறைய பெண்களில் நாற்பத்தைந்து வயது வரை

என்றுதான் கூறவேண்டும். எனவே காமத்தின் உணர்ச்சியூட்டலில் கர்ப்பம் வரை

சென்று கருச்சிதைவால் உயிர் இழப்பதும் கருச்சிதைவு செய்ய முடியாத சூழ்நிலைகளில்

தற்கொலை செய்வதும் என்று நகர்வதாயின் தொடர்ந்தும் காதல் சிதைவுகளையும்

கருச்சிதைவுகளையுமே சந்திக்க நேரிடும்.

http://sivaajihealthwings.org/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.