Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர் தின சிறப்புக் கட்டுரையும் சிறப்பு கீதை உபதேசமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தின சிறப்புக் கட்டுரையும் சிறப்பு கீதை உபதேசமும்

2011-02-13 02:37:11

கீதை சொன்ன கண்ணன் இன்று இருந்திருந்தால் யாழப்பாணக் காதலருக்கு இவ்வாறு சொல்லியிருப்பான் என பலராலும் கூறப்படுகின்றது.

காதலர் கீதையுபதேசம்

ஓடல் நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

கூடல் நடக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது

வயிறு நிறம்பியதோ, அதுவும் நன்றாகவே நிறம்பியது

கருவைக் கலைக்கப் போகிறியோ, அதுவும் நன்றாகவே கலைக்கப்படும்

உன்னுடைய கற்பை நீ இழந்தாயோ?

எதற்காக நீ அழுகிறாய்?

உன்னை மட்டுமா இவ்வாறு செய்தான், நீ அழுவதற்கு?

நீயும் அவனை மட்டுமா நம்பியிருந்தாய் இவ்வாறு கவலைப்படுவதற்கு

நேற்று அவனுக்கு கொடுத்த கடிதத்தை நாளை இன்னொருவனுக்கு கொடு

இன்று அவளுடன் இருப்பவன் நாளை உன்னிடத்தில் வருவான்

உன்னை ஏமாற்றியவன் நாளை அவளிடத்தில் ஏமாறுவான்

அவனது "பேஸ்புக்" ல் நீ மட்டுமா நண்பி

உன்னுடைய " பேஸ்புக்" ல் அவன் மட்டுமா நண்பன்

கவலைப் படாது இப்போது உன்னிடம் வந்தவனை ஏற்றுக் கொள்

நாளை உன் குழந்தை அவனை அப்பா என்று அழைக்கும்படி நடந்து கொள்

கீதை சொன்ன கண்ணன் இன்று இருந்திருந்தால் இவ்வாறு சொல்லியிருப்பான் என நம்பப்படுகின்றது.

இன்றைய உலகம் பல முன்னேற்றங்களையும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியினையும் அடைந்துள்ளது. குறிப்பாக அச்சு, இலத்திரனிய ஊடகங்களில் அபிவிருத்தி ஏராளமான மாற்றங்களையும் தாக்கங்ளையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த ஊடகங்களின் விரிவாக்கத்தால் நன்மையையும், பயனையும் அடையும் நாம் சீரழிவுகளையும் மற்றும் மனிதநேயம், மனிதாபிமானத்தையும் தொலைத்து நாகரீகம் என்ற வார்த்தையில் அநாகரிகமாய் அடைய விட்டு வைத்து இருப்பதை நடைமுறை வாழ்க்கையில் நாம் காண்கிறோம்.

தவறான வாழ்க்கை முறையிலிருந்து கௌரமான மதிக்கத்தக்க ஒரு சூழலை உருவாக்க வேண்டிய கடப்பாட்டுடனும் கடமையுடனும் இருக்கிறோம்.

இன்றைய காலக்கட்டத்தில் சீர்படுத்த வேண்டிய சீரமைக்க வேண்டிய முக்கியமான ஒன்று நாம் இளைய சமுதாயம். ஆம்.. இன்றைய இளையவயதினர் குறிப்பாக மாணாக்கர்கள் அறிவுபூர்வமாய் ஆக்கப்பூர்வமாய் செயல்படாமல் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் தீய விளம்பரங்களுக்கும் அடிமைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

இதற்கு உதாரணமாய் ஏராளமான விஷயங்களை நாம் காணலாம். அதில் பிப்ரவரி 14 காதலர்களின் களியாட்ட கொண்டாட தினமான காதலர்கள் தினத்தினை (Valentine’s Day) கூறலாம்.

எந்த காதலரும் மறக்காத மற்றும் மறக்க முடியாத காத்து காத்து தவம் கிடக்கும் தினமாக அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நமக்கு ஜனவரி என்றால் புதுவருடம் பிறப்பது சர்வ சாதாரணம். ஆனால் காதலர்களோ இன்னும் 45 நாள்கள் தான்.. காதலர்கள் தினம் நெருங்கி விட்டது. இனி களத்தில் இறங்க வேண்டியது தான் என்று கொண்டாடத்திற்கான ஆயத்தங்களிலும் கற்பனைகளிலும் திட்டம் தீட்டுவதிலும் மூழ்கி விடுவார்கள்.

இந்த நேரமாக பார்த்து கையிலும் காசு இல்லை பரிசுப்பொருட்கள் புதிய ஆடைகள் பார்ட்டிக்கென்றும் இன்னும் எவ்வளவு தேவைகள் இருக்கிறது என்று அங்கலாய்த்து கொள்வார்கள்.

வீட்டில் கொடுக்கும் பாக்கெட் மணியை மிச்சம் பிடிப்பது, வீட்டில் உள்ள பொருட்களை, பணத்தை திருடுவது நண்பர்கள் உறவினர்கள் என்று எல்லோரிடமும் வெட்கப்படாமல் கடன் வாங்குவது என்று பரப்பரப்பாக சுறுசுறுப்பாக ஒடித்திரிவார்கள். எங்கேடா.. பணம் கிடைக்கும்.. யாருடைய தலையினை தடவுவது என்ற திண்டாடங்களும் கூடவே கொடி பிடிக்கும்.

அடுத்து, இத்தினத்தில் (காதலன் காதலியை) சந்திக்கக்கூடிய இடங்களை பூந்தோட்டம், கடற்கரை, விடுதிகள், காதலுக்கு ஆதரவான நண்பர்கள் உறவினர்கள் வீடுகள், நடுத்தெரு, சந்து பொந்து என்று பட்டியல்கள் நீளமாக போகும். கண்டிப்பாய் சந்திப்பதாக உறுதி மொழியும் எடுத்துக்கொள்வார்கள். இதற்காக பாடசாலை பகுதி நேர வகுப்பு இன்னும் சொந்த பந்தங்களின் வீட்டு விசேஷங்கள் என்று அனைத்திற்கும் கட் அடிப்பார்கள். வீட்டில் உள்ளவர்களிடம் எப்படி சமாளித்து வீட்டை விட்டு வெளியேறுவது, காதலை எதிர்க்கும் நண்பர்களிடம் இருந்து என்னென்ன கதைகள் பொய்கள் சொல்லி அன்றைய தினம் அவர்களிடமிருந்து தனிமை படுவது என்றெல்லாம் திட்டம் தீட்டுவார்கள்.

வேறு எந்த காரியத்திற்கு இப்படி வேகமாய் விவேகமாய் செயல்பட மாட்டார்கள் இதுவெல்லாம் எதற்கு வாழ்க்கையே திண்டாட்டத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் காதலர் தின கொண்டாட்டதிற்கு தான். இளம் வயது பயம் அறியாது அதன் வீனையும் வீபரீதமும் அறியாது. கேட்டால் நாங்கள் நாகரீகம் பெற்றெடுத்த வாரிசுகள் டீன் ஏஜ்கள் என்று திரை கதை வசனம் பேசுவார்கள்.

மேலோட்டமாய் பார்த்தால், இது காதலர்களுக்கு வருடத்தில் ஒரு நாள் மகிழச்சியாய் சந்தோஷமாய் உல்லாசமாய் இருக்க சுதந்திரம் கொடுக்க தான் வேண்டும் என்று தோன்றும். ஆனால் இந்த காதலிக்கு கொடுக்கும் ரோஜா மலருக்காக அல்லது பரிசுப்பொருட்களாக சில சந்தர்ப்பங்களில் திருட, பொய் சொல்ல இளவயதிலேயே கையேந்தி கடன் கேட்க காதலன் தூண்ட படுகிறான். இதனால் எற்படும் அவமானத்தையும் அபகிருத்தியையும் மோசமான கெட்ட பழக்கவழக்கங்களையும் துச்சமென நினைக்கிறான். காதலிக்காக எதையும் செய்வேன் என்று சபதம் எடுக்கிறான். இதனால் பள்ளிக்கூடம் படிப்பும் எதிர்காலமும் பழக்க வழக்கங்களும் பாழ் பட்டு போவதை காதல் போதை எதையும் சிந்திக்க விடுவதில்லை. என் இதயம் உயிர் ஏன்.. நானே அவள் தான் என்ற காதலி கைவிட்டு காதலுக்கு குட்பை சொல்லும் வரைக்கும் பேதையில் கொண்ட போதை இறங்குவதில்லை. புத்தி தெளியும் போது காதலி மட்டும் அல்ல தன்னை தவிர தன்னுடன் இருந்த அனைத்தும் தன்னை விட்டு வேகுதூரம் கடந்து போய் இருப்பதை உணருவான்.

இந்த ரோஜா மலருக்காக பரிசுக்காக காதலுடன் கொஞ்சிகுலவா வீட்டில் ஆயிரம் அரிய பெரிய பொய்களை சொல்லி ஏமாற்றி விட்டு வரும் இக்கன்னி பெண்களின் நிலைமை தான் முக்கியமாய் சிந்திக்கப்பட வேண்டியது.

பெண்கள் இயற்கையிலேயே இரக்க சுபாவம் அன்புள்ளமும் கொண்ட எதனையும் தூர நோக்கம் இன்றி நம்பி விடும் தன்மை உடையவர்கள். இது ஒரு பலவீனம் என்றே சொல்லலாம். அதனை இந்த ஆண்கள் குறிப்பாக காதலன் இந்த காதலர்கள் தினத்தினை பயன் படுத்தி கொள்கிறான்.

காதலர்கள் தினந்தன்று காதலியின் தலையில் அடித்து நீ தான் இறுதி மூச்சு உள்ளவரை என் மனைவி என்று. இதனை ஏதோ முனிவன் சொன்ன வேத வாக்கு என்று நம்பி இந்த பெண்களும் நம்பி விடுகின்றனர். வார்த்தைகளால் வலைப்பின்னி தந்திரமாய் இப்பெண்களை அதில் சிக்க வைத்து விடுகிறார்கள்.

நண்பர்கள் எல்லோரும் காதலர்கள் தினத்தன்று ஒரு இடத்தில் கூடுவார்கள். அங்கு மேலைத்திய பாணியில் உல்லாச பார்ட்டி நடைபெறும். மதுக்கும் பஞ்சம் இருக்காது. கூட்டத்துடன் குடிப்பார்கள். இதில் கண்றாவி என்னவென்றால் இவன் காதலி அவனுடனும் அவன் காதலி இவனுடனும் சல்லாப்பிப்பார்கள். இது தான் பரஸ்பர நட்பாம். காதலர்கள் தினத்தினை என்ஜாய் பண்ணுகிறோம் என்று சொல்லி பல பெண்கள் கற்பினை தரைவார்த்து விட்டு ஒன்றும் தெரியாத அப்பாவியை போல் வீட்டிற்கு வருவார்கள்.

நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கி இருங்கள். முந்தைய அறியாமைக்காலத்தில் பெண்கள் மறைக்க வேண்டியதை மறைக்காது வெளிப்படுத்தியதை போன்று வெளிப்படுத்தி திரியாதீர்கள்

இந்த வருடம் இவளுடன் கூத்து அடிக்கும் இவர்கள் அடுத்த காதலர்கள் தினத்திற்கு இன்னொருத்தியுடன் இவர்களுக்கு முன்னேலேயே கும்மாளம் அடிப்பதை இந்த கன்னி பெண்கள் கண் கூடாக கண்டும் விளக்காமல் போவது தான் புரியாத புதிராக இருக்கும்.

காதல்..

பொழுது போக்கு,

காதலி..

தேர்வு செய்யும்

சந்தையே

காதலர்கள் தினம்..

என்ற கொள்கையோடு காதலர் தினத்தன்றே காலை மாலை இரவு என்று நேரத்திற்கு ஒரு காதலியோடு கூடிக்கூத்தடிக்கும் காதலர்கள் எத்தனையோ பேர்கள்..!..?

கன்னியருக்கு

காதல் போதை

கற்பு

கரைபடியும் வரை தான்..

பின்னர் வாழ்க்கை நிர்கதியாய் போய் கேள்விக்குறியானப்பின் அழுதும் ஆவேசப்பட்டும் ஆர்ப்பரித்தும் அர்த்தம் இல்லை. நல்லொழுக்கம் இல்லைமாய் தான் இதற்கு தான்.

பெற்றோர்களே..! நீங்கள் அன்பாய்.. ஆசையாய்.. எதிர்கால கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடன் வளர்க்கும் தன் பிள்ளையின் வாலிப பருவத்தை மிகவும் உன்னிப்பாய் அவதானியுங்கள். தீடீரென அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை விசாரியுங்கள். காரணத்தினை ஆராய்ந்து கண்டு பிடியுங்கள்.

இன்றைய அச்சு இலத்திரனியல் ஊடகங்களும், பணத்தாசை பிடித்த வியாபாரிகளும் சேர்ந்து இளம் வயதினரின் வாழ்க்கையினை சீரழிப்பதுடன் சமூக சீர் கெட்டிற்கு வழிகோல்கிறார்கள்.

இளம் வயதினர் இவர்களை போல் உள்ளவர்களால் சரியான பாதை இன்றி நேர்த்தியான வழிகாட்டல் இன்றி இவர்களின் வக்கீர எண்ணங்களுக்கு ஆபாச விளம்பரங்களுக்கும் ஆசைகளுக்கும் அடிமைப்பட்டு போகிறார்கள்.

பெற்றோர்களும், ஆசிரியர்களும், அறிஞர்களும் இக்கயவர்களின் தீய விளம்பரங்களை பற்றியும் விழ்ப்புணர்வுடன் தெளிவுப்படுத்த வேண்டும். மேலும், பெண்களை காதலர் தினத்தன்று வெளியே எங்கும் அனுப்பாமல் வீட்டிலேயே முழு நேரமும் இருக்கப்படியாக பார்த்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் பாடசாலைக்கோ பகுதி நேர வகுப்புக்கோ மற்ற இடங்களுக்கோ போகமாமல் விட்டாலும் பிரச்சனை இல்லை. ஏனென்றால் வெளியே சென்று வீட்டுக்கு கொண்டு வரும் அவமானத்தையும் அசிங்கத்தையும் விட வீட்டிலேயே இருப்பது சிறந்தது. தொலை பேசி உட்பட்ட இவர்கள் தொடர்புக்கொள்ளக்கூடிய வழிகளை பற்றியும் எச்சரிக்கையாக இருங்கள்.

தன் பிள்ளைக்கு கெட்ட வந்து விட்டால், திருமணம் முடித்துக்கொடுப்பது மிக சிரமமாகவும் சிக்கலாகவும் போய் விடும். மானம் போனால் திரும்பி வருமா..? வாழ்க்கை முழுக்க கண்ணீரோடும் ஏக்கத்தோடும் தாக்கதோடும் பிள்ளை வாழாவேட்டியாய் இருப்பது உங்களுக்கு சந்தோஷமா..? சில பெற்றோர் சீதனம் இன்றி திருமணம் முடிப்பது என்றால் காதல் தான் ஒரே வழி என முட்டாள் தனமான முடிவோடு இருக்கிறார்கள். இந்த காதலால் வாழ்க்கையை தொலைத்த எத்தனை பேர்களை நாம் தினம் தினம் சந்திக்கிறோம்.. நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டால் பின்னர் வாம் எதிர் பார்த்து இருந்த நம்பி இருந்த வாழ்க்கையினை அமைந்துக்கொடுப்பது என்பது கானல் நீராகி விடும்.

அதிகமான பெற்றோருக்கு இந்த காதலர் தினம் எப்போது என்றோ, அப்படி என்றால் என்னவோன்றோ தெரிவதில்லை. இன்றைய நாகரீகம் அறிமுகப்படுத்தி இருக்கும் காதலர்கள் தினம் 'இளவயது பெண்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் தினம்'.

ஆதிக்க ஷைத்தான்கள் உங்கள் பிள்ளைகளை வழிகெடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். பிப்ரவரி 14ம் நாள் அன்று.. பெற்றோர்களே.. நீங்கள் விழிப்போடு இருங்கள்.

newjaffna.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.