Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு உறுதிப்பட வேண்டும் என யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புகின்றனர்

Featured Replies

பாதுகாப்பு உறுதிப்பட வேண்டும் என யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புகின்றனர்

பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகளிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவிப்பு

Friday, 18 February 2011 06:05

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தல் வேண்டுமெனவும் அதற்காக அவர்கள் குடியிருப்புகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டுமெனவும் விரும்புவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பிரித்தானிய தூதரக அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.

அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் பிரித்தானிய தூதரக அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பு முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்றபோதே இவ்விடயத்தைக் கவனத்தில் கொண்டு வந்தனர். இச்சந்திப்பில் முன்னணியின் சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராஜா கஜேந்திரன், முன்னணியின் உறுப்பினர்களான சி.வரதராஜன், வி.மணிவண்ணன் ஆகியோர் பங்குபற்றினர்.

இச்சந்திப்புக் குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப் பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் ஆட்கடத்தல்கள்,கொலைகள் என்பன திட்டமிட்ட அடிப்படையில் மக்களை மரண பயத்தில் வைத்திருப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றன. இவை அரசுக்குத் தெரியாமல் இடம்பெற எந்த வாய்ப்பும் இல்லையென்ற நிலையில் தொடர்ந்து மரணபயத்திற்குள் வைத்திருக்க வேண்டிய தேவை அரசுக்கு உள்ளது. யுத்தத்தின் பின்னர் வன்னியில் வாழ்ந்த மக்களை வவுனியா நலன்புரி முகாம்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்ட தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்துக் கொடுமைப்படுத்தியது. அவர்கள் விடுவிக்கப்பட்டு ஒரு வருடங்கள் கடக்கும் நிலையில் சிறிது சிறிதாக தாம் எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள், அரசியல் உரிமைப் பிரச்சினைகள் மனித உரிமைப் பிரச்சினைகள்என்பன தொடர்பாக விவாதிக்கும் நிலையேற்படத் தொடங்கியதையடுத்தே மீண்டும் கொலைகள்,ஆட்கடத்தல்கள் இடம்பெறுகின்றன.

தற்பொழுது இவ்வாறான கொலைகள்,கடத்தல்கள் அதிகரித்துள்ளமைக்குக் காரணம் நடைபெறவுள்ள உள்ளூராட்சிசபைத் தேர்தலித் தமிழ்த் தேசியத்தில் உறுதியுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதனைத் தடுப்பதேயாகும்.

இந்நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாகத் தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும் எனவும் தமது மக்கள் குடியிருப்புகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டுமென விரும்புகின்றனர் என குழுவினருக்கு சுட்டிக்காட்டினோம்.

இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழு வெறும் கண்துடைப்பு நடவடிக்கை,இந்த ஆணைக்குழு இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குமென ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

ஐ.நா. சபையின் விசாரணை என்பது வெறுமனே போர்க்குற்றம் என்ற குறுகிய விடயத்திற்குள் மட்டுப்படுத்தப்படக்கூடாது எனவும் சுட்டிக்காட்டினோம்.

வன்னியிலுள்ள மக்கள் தமது கிராமம் மற்றும் பிரதேசத்தின் நன்மைகருதி எந்தச் செயற்பாட்டிலும் சுதந்திரமாக ஈடுபட முடியாதளவுக்கு இராணுவத் தலையீடு காணப்படுகின்றது. கிராம அபிவிருத்திச் சங்கங்கள்,மாதர் சங்கங்கள்,விளையாட்டுக் கழகங்கள் என்பன சுயமாக சுதந்திரமாக கூட்டங்களைக் கூட முடியாத வகையில் இராணுவக் கெடுபிடிகளும் அச்சுறுத்தல்களும் காணப்படுகின்றன. யுத்தத்தினால் பல்லாயிரக்கணக்கானோர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களது வீடுகளுக்குச் சென்று உளநல ஆலோசனைகள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் இராணுவ முகாமில் கையொப்பமிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பணயக் கைதிகள் போன்று நடத்தப்படாமல் அவர்களது குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து அவர்கள் சுதந்திரமாக இயல்பு வாழ்வில் ஈடுபட அனுமதிக்கப்படல் வேண்டுமெனவும் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=7755:2011-02-18-00-36-19&catid=51:local&Itemid=85

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.