Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் போர்க்குற்ற அறிக்கை முன்வைக்கப்படும்?

Featured Replies

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாடு எதிர்வரும் 28 ஆம் திகதி சுவிற்சர்லாந்தில் ஜெனிவா நகரில் நடைபெறவிருக்கும் நிலையில், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் "லிபறேஷன்' என்ற பெயரில் இலங்கை அரசுக்கு எதிரான போர்க் குற்ற அறிக்கை மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் 'திவயின' செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டனில் இயங்கும் தமிழ்த் தகவல் மையமே இந்த "லிபறேஷன்' போர்க் குற்ற அறிக்கையை ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கவுள்ளதாகவும் இதனை ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஐந்து முன்னணி உறுப்பினர்களின் ஆதரவுடன் தமிழர் தகவல் மையம் சமர்ப்பிக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த லிபறேஷன் போர்க் குற்ற விசாரணை அறிக்கையில் இலங்கையின் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் அரச படைத்தலைவர்கள் மீது போர்க் குற்றங்களைச் சுமத்தும் வகையில் போலியான தகவல்களை குறித்த தமிழர் தகவல் மையம் முன்வைத்துள்ளதாகவும் அவற்றின் அடிப்படையில் அந்தத் தலைவர்களே அதற்குப் பொறுப்பானவர்கள் எனவும் அவர்கள் மீது சர்வதேச நீதிமன்றம் போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் தமிழர் தகவல் மையம் கோரியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கைத் தலைவர்களுக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இந்தப் போர்க் குற்ற அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான உயர்மட்ட ஆதரவை ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஐந்து முன்னணி உறுப்பினர்கள் வழங்கியிருப்பதாக மேலும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு இலங்கையரசுக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டை முன்வைப்பதற்கான ஆதரவை வழங்கிய ஐரோப்பிய பாராளுமன்ற பிரபல உறுப்பினர்களின் பெயர்கள் இது சம்பந்தப்பட்ட தகவல்களில் தெரிவிக்கப்படாவிட்டாலும் பிரிட்டனிலுள்ள பிரபல மனித உரிமை ஆர்வலர்களே இந்தப் போர்க் குற்ற அறிக்கையைத் தயாரிப்பதற்காக சட்ட ரீதியானதும் நடைமுறை ரீதியானதுமான உதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப மக் போடன், லிஸ் பிபிப்ஸன், ஜெரம் ஏரன் ஆகியோர் இந்தப் போர்க் குற்ற அறிக்கைத் தயாரிப்புக்கான பிரதான பின்னணியாக உள்ளனர் என குறித்த தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் படைத்தலைவர்களுக்கு எதிராக போர்க் குற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருக்கும் தகவலை இலங்கை பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறைகள் குறித்ததொரு இரகசியக்கடிதம் மூலமே பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப பிரிட்டனிலும் லண்டனிலும் மற்றும் வேறு பிரதேசங்களிலும் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளுக்காக ஆதரவையும் உதவிகளையும் வழங்கி வரும் வரதகுமார் என்ற பிரபல நபர் ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் புலிகள் இயக்கத்தினருக்கு அனுப்பிய இரகசிய இணையம் மூலமான கடிதம் பற்றிய தகவல்களை பாதுகாப்புப் புலனாய்வுத்துறை பெற்றுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

இதனை பாதுகாப்புத்துறை அதன் இணையக் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது பெற்றுக்கொண்டதா அல்லது வேறு தரப்பிடமிருந்து பெற்றுக் கொண்டதா என்பது பற்றித் தெரிவிக்கப்படவில்லை.

இதுபற்றி தெரிவிக்கப்படும் பாதுகாப்பு விமர்சனங்களில் இவ்வாறு லண்டன் புலிகள் இயக்க ஆதரவு அமைப்பாகிய தமிழர் தகவல் மையம் ஐரோப்பிய பாராளுமன்ற முன்னணி உறுப்பினர்களின் உயர்மட்ட ஆதரவுடன் ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைத் தலைவர்களுக்கு எதிராக போலியான போர்க் குற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்கவிருக்கும் நிலையில் அரச தரப்பும் புலிகள் இயக்கத்தின் இந்த குறிப்பிடும் படியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராகச் சர்வதேச உயர்மட்ட ஆதரவைப் பெறுவதற்கும் மற்றும் புலிகளின் சர்வதேச செயற்பாடுகளை முறியடிப்பதற்குமான பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் இல்லாதுவிடில் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலர் மற்றும் படைத்தலைவர்களுக்கு எதிராகப் போர்க் குற்றவிசாரணைகள் நடத்தப்படவேண்டுமென்ற புலிகள் இயக்கத்தினரினதும் ஆதரவாளர்களினதும் கோரிக்கைக்கு சர்வதேச ரீதியில் ஆதரவு அதிகரிக்கும் சாத்தியம் ஏற்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.pooraayam.com/mukiaya/769-2011-02-19-01-37-47.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.