Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் தேசத்தின் பேரன்னையின் இறுதி நிகழ்வுகள்

Featured Replies

தேசத்தின் பேரன்னைக்கு தாயகத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்ற அதேவேளை பிரித்தானியத் தமிழர்களாலும் நேற்று இறுதிவணக்கம் செலுத்தப்பட்டது.

220211parvathiUK4010.jpg

லண்டன் ஈலிங் ரவுண் ஹோல் "பிறின்ஸ் மண்டபத்தில்" நேற்று (22-02-2011) மாலை 6 மணிக்கு இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகின.

முதன்மைச் சுடர்ரேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் முதன்மைச் சுடரை மாவீரர் குடும்பத்தை சேர்ந்த திருமதி. சண்முகசுந்தரம் ( லெப்.கேணல் பாமா மற்றும் லெப். வெங்கடேஸ் ஆகிய மாவீரர்களின் தாயார்) அவர்கள் ஏற்றிவைத்தார்.

முதன்மை சுடரேற்றலைத் தொடர்ந்து இதுவரை காலமும் போரினால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காகவும், தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

220211parvathiUK4007.jpg

அடுத்து "தேசத்தின் பேரன்னை" க்கான ஈகைச்சுடரினை ஈலிங் நகரசபை உறுப்பினர்களின் தலைவர் திரு. யூலியன் பெல் (Mr.Julian Bell - Leader of Ealing Councilors) அவர்கள் ஏற்றிவைக்க, "தேசத்தின் பேரன்னை" திருமதி. வேலுப்பிள்ளை பார்வதியம்மா அவர்களின் உறவினர் திருமதி. இந்திராணி அவர்கள் திருவுருவப் படத்திற்கு மலர்மாலையினை அணிவித்தார். அதைத் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு நகரசபை உறுப்பினர்களான Mr.Ranjith Dheer, Mr.Surinder Varma, Mr.Pada, Mr.Mohamed Cowsher, Mr.Thaya Idaikadar, Mr.Suresh Krishna, Mrs.Sasikala Suresh ஆகியோர் வருகைதந்து "தேசத்தின் பேரன்னைக்கு" மலர்வணக்கம் செலுத்தி தமது இரங்கற் செய்திகளையும் மக்களோடு பகிர்ந்து சென்றனர்.

பெருந்திரளான மக்கள் "தேசத்தின் பேரன்னை" க்கு இறுதிவணக்கம் செலுத்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது வணக்கத்தை செலுத்தியதோடு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

220211parvathiUK4022.jpg

இறுதிவணக்க நிகழ்வு என்பதால் "தேசத்தின் பேரன்னை" யின் நினைவு சுமந்த கவிதைகளும், நினைவுரைகளும் இடம்பெற்றது. தமிழீழத் தேசியத் தலைவரின் சகோதரர் திரு. மனோகரன் அவர்களின் பாடசாலை நண்பர் திரு.ப.சிறிதரன், நாடுகடந்த தமிழீழ அசசுப் பிரதிநிதி திரு. செல்வராஜா, பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த திரு. ராஜா சரவணன், நாடுகடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதி ஜெயவாணி, சுதா, திரு.சிறீகாந்தா ஆகியோர் நினைவுரைகளை வழங்கினர்.

கவிஞர் க சிவசுப்ரமணியம், பாலச்சந்திரன், சிறிகாந்தா, சித்திரா, ரெமீனா, கௌரி, அமுதலிங்கம், மருதீசன் ஆகியோரின் தேசத்தின் பேரன்னையின் நினைவு சுமந்த கவிதைகளும் இடம்பெற்றன.

அத்தோடு நிகழ்வின் சிறப்பாக தமிழகத்தில் இருந்து ஒலிப்பதிவூடாக பெறப்பட்ட உணர்ச்சிக் கவிஞ்ர் காசி ஆனந்தன், மற்றும் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் நினைவுசுமந்த உரைகளும், டுபாயிலிருந்து பாவலர் வித்தியாசாகர், மற்றும் தமிழகத்திலிருந்து சங்கிலியன் ஆகியோரின் கவிதைகளும் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

மாலை 6 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு இடைவிடாது தொடர்ச்சியாகவும், உணர்வுபூர்வமாகவும் சிறந்தமுறையில் நடைபெற்று இரவு 9 மணிக்கு நிகழ்வு நிறைவுபெற்றது.

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.