Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்ற விசாரணை - ஐ.நா.விடம் சர்வதேச மன்னிப்புச்சபை மனு

Featured Replies

போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஐ.நா.விடம் சர்வதேச மன்னிப்புச் சபை மனு கையளிப்பு

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர் நியமங்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச் சபை ஐக்கிய நாடுகள் சபையிடம் மனுவொன்றைக் கையளித்துள்ளது.

நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் வைத்து சர்வதேச மன்னிப்புச் சபையால் கடந்த 22ஆம் திகதி இம் மனு கையளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை தொடர்பான ஆய்வாளரான யூலன்டா பொஸ்டரும், 2006ஆம் ஆண்டு சிறிலங்காப் படையினரால் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தை வைத்திய கலாநிதி காசிப்பிள்ளை மனோகரனும் இணைந்து ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் இம் மனுவைக் கையளித்துள்ளனர்.

52,000 பேர் கையெழுத்திட்டுள்ள இம் மனுவில் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணைகளை காலதாமதம் இன்றி மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற போரின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையை அமெரிக்கா வலியுறுத்த வேண்டும் எனக் கோரி அந் நாட்டின் இராஜாங்க அமைச்சர் கில்லரி கிளின்டனுக்கு வேண்டுகோள்களை அனுப்பும்படியும் சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை சர்வதேச மன்னிப்புச் சபை, மனிதவுரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு மற்றும் சனல் 4 தொலைக்காட்சி ஆகியன வெளியிட்டிருந்தன.

அத்துடன், சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட இப் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இவ்வமைப்புக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

ஆயினும், இப் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இதுவரை காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={6BFBFABA-2307-46AC-BED1-5E4A43F8FB89}

=======================================================

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திர சர்வதேச விசாரணைக்கு UK ஆதரவு அளிக்க வேண்டும்:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81918

Edited by akootha

  • தொடங்கியவர்

Dr. Kasipillai Manoharan, the father of one of the “Trinco 5” students killed by the Sri Lanka security forces in 2006, and two Amnesty officials delivered 52,000 signed petitions to the UN offices in New York Tuesday, Amnesty website reported. The petition, which appeared to have been timed to precede the UN Human Rights Council (HRC) sessions scheduled from February 28 to March 25 in Geneva, was the result from the responses Amnesty received following a call for action campaign demanding international investigations as a first step towards accountability for crimes committed by both protagonists in Sri Lanka's war.

"The U.S. government has not yet joined Amnesty in our call for an international investigation. We could use their support. Please write to Secretary of State Hillary Clinton and ask that the U.S. government encourage the establishment by the UN of an international investigation into war crimes and other abuses in Sri Lanka. For Dr. Manoharan’s sake and that of all the other families of the victims, we cannot stop campaigning until they receive justice," McDonald added.

Sri Lanka's Plantation Industries Minister Mahinda Samarasinghe will lead the Sri Lankan delegation to help to prevent any damage to Sri Lanka's human rights image at the HRC meeting in Geneva, according to reports from Colombo press.

In the past year alone, approximately 60 Members of Congress and 20 Senators have urged the U.S. State Department to take steps towards an independent investigation of gross human rights violations committed during Sri Lanka’s ethnic conflict.

http://tamilnet.com/art.html?catid=13&artid=33598

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.