Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு உணவு வழங்க வேண்டாம் என ஆளுநர் உத்தரவு -தமிழர்களை பழிவாங்கும் ஒரு செயல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Thursday, March 10th, 2011 | Posted by thaynilam

வடமாகாண வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு உணவு வழங்க வேண்டாம் என ஆளுநர் உத்தரவு -தமிழர்களை பழிவாங்கும் ஒரு செயல்

வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு உணவு வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். ஆளுநரின் இந்த உத்தரவை வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் வடமாகாணத்தில் உள்ள சகல வைத்தியசாலைகளுக்கும் அறிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் இயங்கும் ஆதார வைத்தியசாலைகள் மாவட்ட வைத்தியசாலைகள் கிராமிய வைத்தியசாலைகள் மற்றும் மத்திய மருந்தகங்கள், பிரசவ வைத்தியசாலைகள் ஆகியவற்றில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு மூன்று வேளையும் வழங்கப்படும் உணவு வழங்கும் திட்டம் ஆளுநரின் உத்தரவையடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் வடமாகாண வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கை முழுவதும் உள்ள மாகாண சபைகளுக்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் வடமாகாண வைத்தியசாலைகளில் மட்டும் உணவு வழங்கும் திட்டத்தை நிறுத்தியிருப்பது தமிழ் நோயாளர்களை தண்டிக்கும் ஒரு நடவடிக்கை என உள்ளுர் மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

போரினால் பாதிக்கப்பட்டு பெரும் இன்னல்களின் மத்தியில் வாழும் வன்னிப்பிரதேச மக்கள் தங்களது உறவினர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது மூன்று வேளையும் வைத்தியசாலைக்கு சென்று உணவு வழங்க முடியாதவர்களாகவே உள்ளனர்.

உணவு வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால் வடபகுதியில் தூர இடங்களிலிருந்து வந்து சிகிச்சை பெறும் நோயாளர்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கி இருப்பதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்பிணி பெண்கள் உட்பட சில நோயாளர்களுக்கு சத்துணவுகளை வழங்க வேண்டியது அவசியமாகும். ஆளுநரின் இந்நடவடிக்கை திட்டமிட்டு தமிழர்களை பழிவாங்கும் ஒரு செயல் என வடமாகாணத்தில் உள்ள உள்ளுர் மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Short URL: http://thaynilam.com/tamil/?p=3603

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.