Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்குச் சமஷ்டி இல்லாத நிலையில் வெளிநாட்டவர்களுக்கு கூறுபோட்டு விற்கப்படும் இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்குச் சமஷ்டி இல்லாத நிலையில் வெளிநாட்டவர்களுக்கு கூறுபோட்டு விற்கப்படும் இலங்கை

[Wednesday, 2011-03-23 03:02:14]

பாராளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி இலங்கையின் மூன்று தீவுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தகவல் வெளியாகியுள்ளது.பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ பதிலளிக்கும் போதே மேற்குறித்த விடயம் வெளியாகியுள்ளது.

கற்பிட்டி பிரதேசத்தில் அமைந்திருக்கும் பிரஸ்தாப தீவுகள் மூன்றையும் மாலைதீவு, இந்தியா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது அமைச்சின் ஊடாக விற்பனை செய்துள்ளார்.

ஆயினும் அது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு இதுவரை அறிவுறுத்தப்படவில்லை என்பதுடன் முறையான அனுமதியும் பெற்றுக் கொள்ளப்படவில்லை.

வருடமொன்றுக்கு கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான குத்தகைக்கு வெள்ளை மற்றும் ஈச்சத்தீவு உள்ளிட்ட மூன்று தீவுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், முப்பது வருடங்கள் வரை அவற்றைத் திரும்பப் பெற முடியாத வகையில் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கையின் பொதுச்சொத்துக்களை ராஜபக்ஷ குடும்பம் தங்கள் சொத்துக்களாக கருதி விற்பனை செய்து வருவதற்கு இச்சம்பவம் இன்னோர் உதாரணம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

seithy.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள தீவு இந்தியாவுக்கு விற்பனை; பசில் ராஜபக்சே தகவல்!

[ பிரசுரித்த திகதி : 2011-03-23 12:39:36 PM GMT ]

இலங்கையில் கற்பிட்டி பிரதேசத்தில் வெள்ளைத் தீவு, ஈச்சத்தீவு உள்பட பல சிறு தீவுகள் உள்ளன. இந்த தீவுகளை அதிபர் ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று இது தொடர்பாக பிரச்சினை கிளப்பப்பட்டது. இலங்கைக்கு சொந்தமான தீவுகள் எந்தெந்த நாடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன என்று கேள்வி கேட்கப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு அதிபர் ராஜபக்சேயின் தம்பியும், பொருளாதார அபிவிருத்தி மந்திரியுமான பசில் ராஜபக்சே பதில் அளித்தார். அப்போது அவர், "கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள 3 தீவுகள் இந்தியா, சுவிட்சர்லாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன`` என்றார்.

பாராளுமன்றத்துக்கு அது பற்றி ஏன் தெரிவிக்கப்படவில்லை என்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது பசில் ராஜபக்சே பதில் சொல்லவில்லை.

இலங்கை பாராளுமன்றத்தில் ஒப்புதலை பெறாமலே இலங்கை தீவுகளை ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு விற்பது இதன் மூலம் உறுதி ஆகி உள்ளது. குத்தகை அடிப்படையில் இந்த தீவுகள் விற்பனை நடந்துள்ளது.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளிடம் இருந்து பல கோடி ரூபாய் இலங்கைக்கு கிடைக்கும். இதற்காக செய்யப்பட்டுள்ள ஒப்பந்தப்படி, 30 ஆண்டுகளுக்கு இந்த தீவுகளை வெளிநாடுகளிடம் இருந்து இலங்கையால் திரும்ப பெற முடியாது.

tamilulakam.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை கூறு போட்டு விற்பனை செய்யும் அரசு கற்பிட்டி பிரதேசம் ஏலம்....

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011 12:08

கற்பிட்டி கடற்பிரதேசத்தில் இருக்கும் மேலும் 10தீவுகளை வெளிநாடுகளுக்கு நீண்டகால குத்தகைக்கு விற்பனை செய்வதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராசபக்ச ஏற்பாடுகளை செய்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே மூன்று தீவுகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்திருக்கும் ராசபக்ச குடும்பம் இப்போது மேலும் 10தீவுகளை நீண்டகால குத்தகைக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரியவருகிறது. இதனை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவும் உறுதி செய்திருக்கிறார்.

நாடாளுமன்ற அங்கீகாரமோ அல்லது அமைச்சரவை அங்கீகாரமோ இன்றி இத்தீவுகளை பசில் ராசபக்ச வெளிநாடுகளுக்கு விற்று வருகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

சுற்றுலாத்துறைக்கென்றே இத்தீவுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள தமிழ் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மீனவர் சங்கங்கள் தெரிவித்துள்ளன

sangamam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.