Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு ஆபிரிக்க மக்களுக்கு கிடைப்பது இலங்கை தமிழ் மக்களுக்கும் கிடைக்குமா?

Featured Replies

வடக்கு ஆபிரிக்க மக்களுக்கு கிடைப்பது இலங்கை தமிழ் மக்களுக்கும் கிடைக்குமா?

இந்திய இமயமலையை தாண்டி வட ஆபிரிக்க சுதந்திரச் சூரியன் இலங்கைக்கு வருமா ?

வடக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கு ஆகிய இரு வட்டகைகளிலும் மக்கள் போராட்டங்கள் வெடித்து இன்னமும் மூன்று மாதங்கள் கூட பூர்த்தியாகவில்லை அதற்குள் அங்குள்ள மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கைகளுக்கு நெருங்கிவிட்டன. ஆனால் முப்பது ஆண்டுகாலமாக போராடி பல இலட்சம் மக்களை பலி கொடுத்த ஈழத் தமிழினத்திற்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. வடக்கு ஆபிரிக்காவில் நாளுக்கு நாள் நகரும் ஒவ்வொரு நிகழ்வையும், மக்கள் வெற்றியையும் பார்க்கும்போது:

ஆனந்தச் சேவல்கள் எங்கும் கூவின..

அடிமை வறுமைகள் அந்தாரம் போயின..

ஊனம் தவிர்ந்தது சுதந்திர சூரியன்

உதித்தனன் உதித்தனன் உதித்தனனே..!

என்று நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பாடல் ஈழத்திற்கு பொருந்தாவிட்டாலும் இன்றைய வடக்கு ஆபிரிக்காவுக்கு நன்கு பொருந்துகிறது.

அப்படி என்னதான் பெரிய முன்னேற்றம் வடக்கு ஆபிரிக்காவில் நடைபெற்றுவிட்டது என்று கேட்கிறீர்களா இதோ சில:

01. எகிப்தில் சர்வாதிகாரியான கொஸ்னி முபாரக் பதவியில் இருந்து விரட்டப்பட்டு ஒரு மாதம்கூட ஆகவில்லை முதற்கட்ட வாக்கெடுப்பு முடிந்துவிட்டது. இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாத அதிபர்பதவியுடன் கூடிய அதிகாரப் பரவலாக்கல் கொண்ட தீர்வுத்திட்டம் வாக்களிப்பிற்கு வந்து, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.

ஒரு நாட்டில் போராட்டம் முடிவடைந்தால் அதே சூட்டுடன் தீர்வுத் திட்டமும் வைக்கப்பட்டு, மக்கள் வாழ்வை புதிய பாதையில் திருப்பிவிட வேண்டும். சிறீலங்காவில் போரை நடாத்தி புலிகளை அழித்தொழித்த சிறீலங்காவின் மகிந்த அன் கொம்பனி வடக்கில் ஒரு நகரசபைத் தேர்தலைக்கூட நடாத்தாது இழுத்தடிக்கிறது. போர் முடிந்து இரண்டு வருடங்கள் முடிவடையப் போகிறது. இந்தப் போரை நடாத்திய சிறீலங்கா அரசும், துணைபோன இந்திய அரசும் தமது கையாலாகாத் தனத்தை வடக்கு ஆபிரிக்காவை பார்த்தாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

02. சிரியாவில் உள்ள அதிபர் ஆஸாத் ஏறத்தாழ சிறீலங்காவில் நடப்பது போலவே ஒரு குடும்ப ஆட்சி நடாத்தி வருகிறார். அரச பதவிகளில் உட்கார்ந்திருப்பது இவருடைய குடும்பமே. எங்கு வருமானம் வருகிறதோ அங்கெல்லாம் இவர்கள் குடும்பமே உயர் பதவியில் இருக்கும். மகிந்த குடும்பம் இப்போது கதிர்காமத்து உண்டியலையும் பொறுப்பெடுத்தது போன்ற ஆட்சிதான் இவருடைய ஆட்சியும். சிறீலங்காவில் இருப்பது போலவே 50 வருடங்களாக அவசரகாலச் சட்டத்திலேயே ஆட்சியை நடாத்தி வருகிறது சிரியா. மக்கள் போராட்டம் வெடித்தது, இன்னும் 24 மணி நேரங்களில் அதிகாரப்பரவலாக்கலை அறிவிக்கிறேன் அவசரகால சட்டத்தை எடுக்கிறேன் என்கிறார். ஆனால் சிறீலங்காவிலோ இவ்வளவு இழப்பிற்குப் பின்னும் அவசரகால சட்டத்தை அகற்றி மக்களை இயல்பாக வாழவிட சிறீலங்கா அரசு தயாரில்லை.

03. லிபியாவில் இன்று போராளிகள் அறிவித்திருப்பது சிறீலங்கா அரசாங்கத்தை மட்டுமல்ல போராடிய தமிழர்களைக்கூட சிந்திக்க வைக்கும். மக்கள் ஒரு வாக்களிப்பின் மூலம் எந்த முடிவை எடுத்தாலும் அதில் நாம் தலையிடப் போவதில்லை என்று பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளார்கள் போராளிகள். நாம் மக்களுக்கு ஏகப் பிரதிநிதிகள் அல்ல என்ற தெளிவான குரலை உலக அரங்கில் பதிவு செய்து, தாம் தூக்கிய ஆயுதத்திற்கு பெருமை கொடுத்துள்ளார்கள். சிறீலங்காவில் வெள்ளை வான் ஓடி கட்டப்பஞ்சாயத்து நடாத்தும் உபரி ஆயுதக்குழுக்களும் இவர்களின் குரலை கேட்டாவது திருந்த வேண்டும்.

01. மேலை நாடுகளைப் போல மக்கள் நல வாழ்வுக்கான தாபனங்கள் உருவாக்கப்படும்

02. பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும்

03. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை பேணப்படும்

04. கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்பன வழங்கப்படும்

05. வாக்களிக்க அனைவருக்கும் உரிமை வழங்கப்படும் ( இன்று மூன்றரை இலட்சம் பேரின் வாக்குகள் சிறீலங்காவில் பறிக்கப்பட்டுள்ளன )

06. லிபியாவுக்கான புதிய அடிப்படைச்சட்டம் வரையறை செய்யப்படும்

07. மக்கள் அனுபவிக்கும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றை அகற்ற ஆவன செய்யப்படும்.

08. அனைத்துமே மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாலேயே மேற்கொள்ளப்படும் என்றுள்ளார்கள்.

இப்படியாக கடாபியின் 40 வருட சர்வாதிகார ஆட்சி 40 நாட்களுக்குள் திசை திரும்பியிருக்கிறது. நமது சிறீலங்காவில் மட்டும் ஏன் எதுவுமே நடக்காமல் காலம் சீரழிந்து போகிறது.. எகிப்து போல ஓர் அடிப்படைச் சட்டத்தை ஏன் வாக்கெடுப்பிற்கு இன்றுவரை மகிந்த ஆட்சி முன் வைக்கவில்லை ?

சிறீலங்கா அரசுதான் சீரழிந்துவிட்டதென்றால் சிங்கள மக்கள், அறிஞர்கள் எங்கே போய்விட்டார்கள். உதாரணத்திற்கு : தமிழர்கள் பெரும்பான்மையாகவும் சிங்களவர் சிறு பான்மையாக இருந்து, இப்படியொரு சீரழிவு தமிழரால் சிங்களவருக்கு நடாத்தப்பட்டிருந்தால் நிச்சயமாக தமிழர்கள் தமது ஆட்சியின் மீது காறி உமிழ்ந்திருப்பார்கள். ஏனென்றால் இது தப்பு, தவறு, குற்றச் செயல்.

இந்திய தலைவர்கள் இன்று வடக்கு ஆபிரிக்காவில் நடப்பதைப் பார்த்தும் வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்கள் ? வாயைத்திறந்தால் தங்கள் நாட்டிலும் நோய் பிடித்துவிடும் என்று பயப்படுகிறார்கள். கடாபிக்கு ஆதரவாக ஐ.நாவில் வாக்களித்துவிட்டு கமுக்கமாக வீடு திரும்பியிருக்கிறார்கள்.

வடக்கு ஆபிரிக்காவில் விழுந்த விடுதலைச் சூரியன் இலங்கைக்குள் வராது…

நாம் இந்தியாவின் இமயமலை நிழலுக்குள் மறைந்து கிடக்கிறோம் ! நமக்கு என்றுமே இருட்டுத்தான் என்று சிங்களத் தலைவர்கள் கருதுகிறார்கள். தாம் செய்வது உலகிற்கு இதுவரை தெரியவில்லை, இனியும் தெரியாது என்பது மகிந்த சிந்தனை.

அதனால்..

சூரியன் வராதென்று இருட்டுக்குள் கொறட்டை விட்டபடி மகிந்த அன் கொம்பனி ஆழ்ந்த உறக்கத்தில் கிடக்கிறது.

வடக்கு ஆபிரிக்காவில்…

போகிற போக்கு இலகுவானதல்ல…

மேலும் மூன்றே மூன்று ஆண்டுகளுக்கு மேல் உலகில் உள்ள சர்வாதிகார ஜனநாயக மறுப்பு அரசுகள் தாக்குப் பிடிக்க முடியாது போல நிலமையின் பாரதூரம் இருக்கிறது.

ஆபிரிக்காவில் இருந்துதான் மனிதன் என்ற இனம் தென்னாசியாவிற்கு வந்தது. அதைத்தடுக்க அன்றைய சிங்கங்களாலும் கரடிகளாலும் முடியவில்லை. அதுபோல சுதந்திரமும் அந்த வழியால் வந்தால் வாளேந்திய சிங்கங்களால் அதை தடுக்க முடியாது..

சுதந்திரச் சூரியனின் ஒளி பர்மாவிலும், சிறீலங்காவிலும்தான் முதலில் விழக்கூடிய நிலை உள்ளது. அது விழமுன் தீர்வை அமல் செய்தால் சிறீலங்கா அதை சந்திக்காமல் தப்பிக் கொள்ளும். இல்லையேல் சரத் பொன்சேகா சொன்னது போல அது சிறீலங்காவிற்குள்ளும் வந்தால் ஆச்சரியப்பட முடியாது.

தமிழ் மக்கள் தமது முப்பது வருடக் கோபத்தை மறந்து சிரிக்க, அபிவிருத்தி என்று புலம்ப..மனநோயாளிகளோ கூத்தில் வரும் கோமாளிகளோ அல்ல..

இதை அனைவரும் புரிய வேண்டும்.

http://www.alaikal.com/news/?p=63156

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.