Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க ஆணைக்குழு முன் கூட்டமைப்பு சாட்சியமளிக்கலாமா?

Featured Replies

நல்லிணக்க ஆணைக்குழு முன் கூட்டமைப்பு சாட்சியமளிக்கலாமா?

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக் கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்துவருகிறது.வன்னிப் பெருநிலப்பரப்பில் இடம்பெற்ற யுத்தத்தின்போது, நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் விடுத்த கோரிக் கைகளை அடுத்து ஐ.நா.சபை இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை விசாரணை செய்ய முடிபு செய்தது.

ஐ.நா.சபையின் இந்த முடிபை அடுத்து இல ங்கை அரசு அவசரஅவசரமாக நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து விசாரணைகளை மேற்கொள்கின்றது. விசாரணை போர்க்குற்றம் தொடர்பாக மட் டும் இடம்பெறவில்லை.மாறாக தேவையற்ற விடயங்களைக் கூட நல்லிணக்க ஆணைக்குழு விசாரித்து வருகின்றது. என்ன செய்வது இழப்புகளின் தாக்கம் யாருக்கேனும் அந்தக் கொடும் துயரை தெரிவிப் பதன் மூலமாக காணாமல் போனவர்களை மீட்டு எடுக்கலாம் - முகாம்களில் தடுத்து வைக்கப்பட் டுள்ளவர்களை விடுவிக்கலாம் என்ற நம்பிக்கை யில் நல்லிணக்க ஆணைக்குழு முன் அழுது புலம்பி தங்கள் பெருந்துயரை மக்கள் சொல் கின்றனர். இதில் ஆணைக்குழுவின் இயலாமை கார ணமாக எல்லோருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவும் இல்லை.

இலங்கையில் ஆணைக்குழு என்றாலே இப் படித்தானே! அழைப்பார்கள். காத்திருக்க வைப்பார்கள். காலதாமதமாகி வருவார்கள். ஒரு சிலருடன் அவசரஅவசரமாக கதைப்பார்கள். கதையின் இடையிடையே தமக்குள் ஏதோ உரையாடுவார்கள். பின்னர் உங்கள் பிரச்சினை எல்லாம் எங்க ளுக்கு விளக்கமாக இருக்கிறது. நீங்கள் உங்கள் பிரச்சினையை எழுத்து மூலமாக தாருங்கள் என்று அறிவிப்பார்கள். இந்த அறிவித்தலை சிரமேற் கொண்டு ஐந்நூறு ஆயிரம் செலவிட்டு ரைப்பிங் செய்து கொடுப்பார்கள். அம்மட்டோடு எல்லாம் முடிந்துவிடும்.

இலங்கையின் ஆணைக்குழுக்களுக்கு இருக்கக்கூடிய இந்த கலாசாரம் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கும் இல்லாமலா போய் விடும்? ஆக, காவேரியும் சிங்காரியும் ஒன்றென்ற நிலை யில் எல்லாம் அப்படித்தான். பரவாயில்லை.பொது மக்களின் சாட்சியம், நல்லிணக்க ஆணைக்குழுவின் நம்பகத்தன் மையை -அங்கீகரிப்பை ஒரு போதும் உறுதி செய்யாது.ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லி ணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்தால், அது ஐ.நாவின் முயற்சியை முறியடிக்கும்.

எனவே சாட்சியமளிப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதானமாக ஆராய்வது எல்லாம் இழந்த தமிழ் மக்களுக்கு உதவுவதாக இருக்கும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=17686

  • தொடங்கியவர்

"பரந்துபட்ட அதிகாரத்துடன் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவே இலங்கைக்கு தேவை'

1. இலங்கையில் நீண்டகாலம் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதி மாதங்களின் போதான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகரமான முறையிலும் சிறப்பான வகையிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இவை குறித்து ஆராய்வதற்கு சுயாதீனமான சர்வதேச ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு சர்வதேச நெருக்கடிக்குழுவும் இலங்கையில் நியாயமானதும் நீடித்ததுமான சமாதானத்தில் அக்கறை கொண்ட ஏனையவர்களும் அழைப்பு விடுத்து வருவதாக இந்தச் சர்வதேச நெருக்கடிக் குழுவின் இலங்கைத் திட்டப் பணிப்பாளரும் சிரேஷ்ட ஆய்வாளருமான அலன்கீனன் தெரிவித்துள்ளார்.

2. 2010 மே இல் எமது அறிக்கையில் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக எழுதியுள்ளோம். மோதலின் இறுதி நான்கு மாதங்களில் பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாகவும் யுத்தச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கை விதிகள் மீதான தாக்குதல்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விசாரணையுமில்லாமல் ஏற்றுக்கொள்ளவும் படாமல் மிகவும் இலகுவானதாக இவை விட்டுச் செல்லப்பட்டுள்ளன. மோதலுக்குத் தீர்வுகாணும் பரந்துபட்ட இலக்குகளை வென்றெடுக்க பதிலளிக்கும் கடப்பாடு மிக முக்கியமானதாகும். இலங்கையில் வேறுபட்ட இன சமூகங்களுக்கிடையில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான கள ரீதியான வேலைகளை மேற்கொள்வதற்கு அதிகளவிலான அரசியல் வெளியே திறந்து விடுதல் அவசியமாகும். விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனங்களினால் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை தெளிவான விதத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளவும் அதேசமயம், அரசு சார்பு பிரசாரத்தை நிராகரித்துவிட முடியாது என்பதையும் உறுதிப்படுத்தவும் பயங்கரவாதம் தொடர்பான யுத்தத்தில் ஏனைய அரசாங்கங்கள் பாரபட்சமின்றியும் அளவுக்கதிகமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதை தடுக்கவும் இந்த விடயம் முக்கியமானதாகும்.

3. மொழி உரிமைகளை உறுதிப்படுத்துதல், அரச சார்பு தமிழ்த்துணைக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைதல், தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர்களை வெளியிடுதல், வட,கிழக்கில் காணி தொடர்பான கொள்கைகளில் பகிரங்கத்தன்மையை உறுதிப்படுத்துதல் போன்றவை நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்காலப் பரிந்துரைகளில் காணப்படுகின்றன. அவை சிறப்பானவையாகும். எவ்வாறாயினும் மிகவும் மிதவாதத் தன்மையான இந்த மறுசீரமைப்புகளை நீண்டகாலத்துக்கு முன்னரே அமுல்படுத்தியிருக்க வேண்டும், அவற்றை அமுல்படுத்தியிருக்க முடியும். உண்மையில் இந்தப் பரிந்துரைகளானவை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டிய நடைமுறையிலுள்ள சட்டங்களும் ஒழுங்குவிதிகளுமாகும். ஆனால், போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பதிலளிக்கும் கடப்பாட்டை மேம்படுத்துவதற்கான எதனையும் மேற்கொள்ளவில்லை. அல்லது தீர்வுகாணப்பட முடியாத தன்மையைக் கொண்டதாக இந்தப் பரிந்துரைகள் காணப்படுகின்றன என்பது மிக முக்கியமானதாகும்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=10318:q-&catid=51:local&Itemid=85

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.