Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவர்களைத் தேடிய மீனவர்களை விரட்டியது இலங்கைக் கடற்படை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்களைத் தேடிய மீனவர்களை விரட்டியது இலங்கைக் கடற்படை!

Posted by admin On April 8th, 2011 at 5:05 pm

காணாமல் போன ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை தேடிச் சென்ற மீட்பு குழுவினரை இலங்கை கடற்படை துப்பாக்கியை காட்டி விரட்டியடித்தனர் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் அச்செய்தியில் :-

இவ்வாறு விரட்டியடித்மையினால் ஆத்திரம் அடைந்த மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகத்துக்குள் புகுந்து அலுவலக சொத்துகளை சேதப்படுத்தியுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 2ம் திகதி 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் மறுநாள் கரை திரும்பினர். ஆனால் விக்டர்ஸ் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற விக்டர்ஸ்(40), ஜான்பால்(35), அந்தோணி(52), மாரிமுத்து(38) ஆகியோர் மட்டும் கரை திரும்பவில்லை.

இதனால் இந்திய மீன்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்று மீட்பு குழு மீனவர்களை தேடி 4ம் திகதி கடலுக்கு சென்றனர். இந்திய கடல் பகுதி முழுவதும் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் இலங்கை கடல் பகுதிக்குள் சென்றனர்.

அப்போது இலங்கை கடற்படையினர் அவர்களை தங்கள் எல்லைக்குள் வரக்கூடாது என்று துப்பாக்கியை காட்டி தடுத்து நிறுத்தினார்கள். தாங்கள் மீன்பிடிக்க வரவில்லை என்றும் காணாமல் போன மீனவர்களையும் படகையும் தேடி வந்ததாகவும் கூறினார்கள். ஆனால் இலங்கை கடற்படை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எங்கள் கடல் பகுதிக்குள் உங்கள் மீனவர்கள் வந்திருந்தால் உங்கள் அரசுக்கு தகவல் தந்துவிடுவோம் என்று கூறி திருப்பியனுப்பினர்.

இதனால் ஏமாற்றத்துடன் மீட்பு குழுவினர் திரும்பினர். பின்னர் மறுநாள் அவர்கள் மீண்டும் கடலுக்கு தேடிச் சென்றனர். அப்போதும் இலங்கை கடற்படையினர் அவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி திருப்பி அனுப்பிவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று இலங்கைக்கு சொந்தமான கடல்பகுதியில் 3 உடல்கள் கரை ஒதுங்கி கிடந்தன. அந்த உடல்களை இலங்கை கடற்படையினர் மீட்டு யாழ்ப்பாணம் வைத்தியசலைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலை இராமநாதபுரம் ஆளுனர் ஹரிகரனுக்கும் அனுப்பினார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ராமேஸ்வரம் மீனவர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகத்துக்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். காணாமல் போன மீனவர்கள் 4 பேரையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களை தேடி இலங்கை கடற்பகுதிக்கு செல்ல அனுமதி பெற்று தரவேண்டும் என்றும் கோரி இந்த போராட்டத்தை அவர்கள் நடத்தினார்கள்.

அப்போது சுமார் 50 பேர் திடீரென்று அலுவகத்துக்குள் புகுந்து அங்கிருந்த மேசை, கதரைளை தூக்கி வீசி உடைத்தார்கள். மேலும் ஆவணங்களையும் தூக்கி வீசினார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.

இந்த சம்பவத்தை அறிந்த பொலிஸார் அங்கு சென்று மீனவர்களை அமைதி படுத்தினார்கள். பின்னர் மீனவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் வேர்கோடு பாதிரியார் மைக்கேல், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முருகானந்தம், கருணாகரன், டி.ஆர்.செந்தில், எம்.பி.செந்தில், அ.தி.மு.க. நகர செயலாளர் பெருமாள், முன்னாள் நகராட்சி தலைவர் அர்ஜுனன், தே.மு.தி.க. நகர செயலாளர் முத்துகாமாட்சி, மீனவர் சங்க நிர்வாகிகள் போஸ், ஜேசுராஜா, அருளானந்தம், எமரிட் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது அவர்கள் தாங்கள் இலங்கை கடல் பகுதிக்குள் தேடிச் செல்ல அனுமதி பெற்று தரவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். பின்னர் அவர்கள் மீன்துறை அலுவலர் மார்க்கண்டேயனிடம் அதை கோரிக்கை மனுவாக கொடுத்தனர்.

அதற்கு அவர் கோரிக்கையை ஆளுனருக்கு அனுப்பி இலங்கை கடல்பகுதிக்கு செல்ல அனுமதி பெற்றுத் தருவதாக கூறினார். இதனை அடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.

இலங்கை கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கிய ஒரு மீனவர் மஞ்சள் நீளக்கால் சட்டையும், பச்சை சட்டையும் அணிந்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

காணாமல் போன மீனவர்களில் விக்டர்ஸ் அதேபோல் உடை அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. அரசின் அனுமதி பெற்று மீட்பு குழுவினர் சென்று பார்த்த பின்னர்தான் காணாமல் போன மீனவர்கள் பற்றிய முழுவிவரம் தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

saritham

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.