Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் உள்ள எண்ணை வளத்தினை அபகரிக்க த.தே.கூ முயற்சி--சிங்கள ஊடகம் விஷம பிரச்சாரம்

Featured Replies

தந்தை செல்வாவினாலும் அதன் பின்னரான புலிகளாலும் முன்வைக்கப்பட்ட தனி நாட்டுக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை. மாறாக ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வினையே வலியுறுத்தி வருகின்றது. எனவே இனவாத சிந்தனையையும் விஷமப் பிரசாரத்தையும் சிங்கள ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உள் நோக்கம் கிடையாது. பொய்யான கட்டுக் கதைகளால் பேரினவாதத்தை மீண்டும் தமிழருக்கு எதிராக திருப்பி விடுவதற்கும் இருக்கின்ற பிரச்சினைகளை உக்கிரமடையச் செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டி யது காலத்தின் கட்டாயமாக இருப்பதாகவும் கூட்டமைப்பு குறிப்பிடுகின்றது.

பொலிஸ் அதிகாரம், வெளிநாட்டு நேரடி உதவி, துறைகங்கள் நீர் விநியோகம், எண்ணெய் வளம், மீன்பிடித் துறை நடவ டிக்கை, வானொலி மற்றும் தொலைக் காட்சி சேவை உரிமம் உள்ளிட்ட 46 யோசனைகளை முன்வைத்து வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைப்ப தற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசி வருவதாகவும் இந்த அனைத்தும் புலிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் என்றும் குறிப்பிட்டுள்ள சிங்கள ஊடகங்கள் புலிகளின் திட்டங்களையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளன.

மேலும் மன்னாரில் இருக்கின்ற எண்ணெய் வளம் மற்றும் புல்மோட்டையில் இல்மனைட் வளம் ஆகியவற்றினைக் குறிவைத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாகவும் குறித்த ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிடுகையி லேயே, கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 1976, மே மாதம் 14 ஆம் திகதி தந்தை செல்வநாயகத்தின் தலைமையில் வட்டுக் கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் சமஷ்டி முறைமைக்குப் பதிலாக தமிழீழம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தந்தை செல்வா தலைமையில் முன்வைக்கப்பட்டு வந்த தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு மறுக்கப்பட்டு வந்ததன் அடிப்படை யிலேயே வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்குப் பிற்பட்ட காலப் பகுதியிலேயே விடுதலைப் போராட்ட இயக்கங்கள் உருவாகின. இந்த விடுதலை இயக்கங்கள் தந்தை செல்வா முன்வைத்த தனி ஈழக் கோரிக்கையை நியாயப்படுத்தி தமது போராட்டங்களை முன்னெடுத்தன. இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடு சற்று அதிகரித்துக் காணப்பட்டது. தற்போது போராட்டங்களும் முறியடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழர் பிரச்சினைக்கு விடிவினைத் தேடியும் தமிழ் மக்களது உரிமைகளைப் பெற்றெடுப்பதற்குமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது ஜனநாயக வழிப் போராட்டங்களை நடத்தி வருகின்றது.தந்தை செல்வாவினால் அல்லது விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட தனி நாட்டுக் கோக்கையை தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன் வைக்கவில்லை. இதனை பெரும்பான்மைச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களின் அபிவிருத்தி, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றை முழுமையான அளவில் முன்னெடுத்துச் செல்லக் கூடிய முழு அளவிலான அதிகாரப் பகிர்வினையே வேண்டி நிற்கின்றோம். மாறாக நாம் தனி நாடு கேட்கவில்லை.இவ்வாறான திரிபுபடுத்தப்பட்ட, மிகைப் படுத்தப்பட்ட செய்திகளை சிங்கள ஊடகங் கள் வெளியிடுவதானது அடிப்படையற்றது. மேலும் வடக்கில் எண்ணெய் இருப்பதாகவும் அதனைக் குறி வைத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாகவும் கூறுவதானது மிதமிஞ்சிய கற்பனையாகும்

எண்ணெய் வளம் என்பது வடக்கில் கிடையாது. இதனை சிறிமா காலத்து ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இந்நிலையில் உண்மைக்குப் புறம்பான விடயங்களைக் கட்டவிழ்த்து விடுகின்ற அடிவருடிகள் மீண்டுமொருறை பேரினவாதத்தை தமிழர்கள் மீது திருப்பி விடுவதற்கான செயற்பாடுகளில் இறங்கியிருக்கின்றனர்.

இது இந்நாட்டுக்கும் இங்கு வாழுகின்ற சமூகங்களுக்கும் நல்லதல்ல. உண்மைக்குப் புறம்பான விடயங்களை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு ஊடகங்கள் முனையக் கூடாது. உண்மைக்குப் புறம்பான விடயங்களில் இருந்து மக்களும் தெளிவுபட வேண்டும். விசேடமாக சிங்கள மக்கள் வரலாற்றின் உண்மைகளை புரிந்து அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டும் என்றார்.

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1635:2011-04-11-07-16-24&catid=1:latest-news&Itemid=18

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.