Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனிமொழிக்கு ED சம்மன்; கருணாநிதி தீவிர ஆலோசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழிக்கு ED சம்மன்; கருணாநிதி தீவிர ஆலோசனை

புதுடெல்லி, மே 4,2011

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக நாளை (மே 5) நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முதல்வர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை திமுக எம்.பி.யுமான கனிமொழிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனிமொழியுடன், இதே வழக்கில் தொடர்புடைய கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளரும், உஸ்மான் பல்வாவின் சகோதரர் ஆசிஃப் பல்வா, குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவன இயக்குநர் கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளது.

பணப் பரிவர்த்தனைகள், வருவாய் ஆதாரங்கள், சொத்துகள் பற்றிய ஆவணங்களையும் கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேரிடமும் அமலாக்கத்துறை கேட்டுள்ளதாக தெரிகிறடு.

முன்னதாக, சிபிஐ கடந்த ஏப்ரல் 25-ம் தேதி தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில், 2ஜி முறைகேட்டில் கூட்டுச் சதியாளராக கனிமொழி மீது குற்றம்சாட்டியது. சரத்குமார், மொரானி உள்ளிட்ட 5 பேரின் பெயர்களும் அதில் இடம்பெற்றிருந்தன.

இவர்கள் 5 பேரும் வரும் 6-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி அப்போது உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இவர்கள் 5 பேருக்கும் அமலாக்கத்துறையும் சம்மன் அனுப்பியியுள்ளது.

சி.ஐ.டி. காலனியில் ஆலோசனை...

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி வரும் 6-ம் தேதி ஆஜராகவுள்ள நிலையில், இந்த விவகாரத்தை எவ்வாறு அணுகுவது குறித்து அமைச்சர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் முதல்வர் கருணாநிதி தீவிர ஆலோசனை நடத்தினார்.

முதல்வரின் சி.ஐ.டி. காலனி வீட்டில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த ஆலோசனை மதியம் 1.20 மணி வரை நடந்தது.

இந்த ஆலோசனையில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்ட நிபுணர்கள் பி.எஸ்.ராமன், சண்முகசுந்தரம், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். வீட்டில் இருந்த கனிமொழியும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டார்.

இந்தத் தகவல் பரவியதும் சி.ஐ.டி. காலனி வீடு அருகே பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் குவிந்தனர்.

ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியில் வந்த கி.வீரமணியிடம் இதுபற்றி கேட்டபோது,

"இது வழக்கமான சந்திப்பு தான், வேறு ஒன்றுமில்லை'' என்றார். அவரைத் தவிர, வேறு எவரும் பேச மறுத்துவிட்டனர்.

vikatan.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழி நாளை கைது?

ஜெ. வெங்கட்ராமன்

First Published : 05 May 2011 02:29:32 AM IST

புது தில்லி, மே 4: 2 ஜி அலைகற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி, வெள்ளிக்கிழமை (மே 6) கைது செய்யப்படலாம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களான கனிமொழி, சரத் குமார் ரெட்டி, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீம் மொரானி ஆகியோர் தவிர மற்றவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மே 6 ஆம் தேதி ஆஜராவதற்காக கனிமொழி, சென்னையிலிருந்து புதன்கிழமை காலையில் தில்லி வந்தார். அவருடன், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரும் தில்லி வந்தனர்.

ஆலோசனை: தில்லி சாணக்கியபுரியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு கனிமொழி சென்றார். அங்கு சட்ட நிபுணர்களுடனும், தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய வண்ணம் இருந்தார்.

பிரபல சட்ட நிபுணர்களான ராம் ஜேட்மலானி, முகுல் ரோத்தகி ஆகியோருடனும் தொலைபேசி மூலம் கனிமொழி ஆலோசனை நடத்தியதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசின் சார்பாக பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வரும் பிரபல சட்ட நிபுணர் பராசரனின் ஆலோசனையையும் பெற்றதாகத் தெரியவந்துள்ளது.

ஜாமீன் மனு: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிறையில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஐவரும் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர். இவர்களது ஜாமீன் மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்தது. இந்த மனுமீது கடந்த இரு தினங்களாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை புதன்கிழமையும் நடைபெற்றது. மேலும் இரண்டு நாள்களுக்கு ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 6 ஆம் தேதிக்குள் 5 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை முடிந்து, தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் பட்சத்தில் கனிமொழியும் அதே நடவடிக்கையைப் பின்பற்றலாம் என்ற நிலை மாறிவிட்டது. இந்த நிலை கனிமொழி தரப்புக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாகவும் தெரிகிறது.

செம்மொழி விருது: குடியரசுத் தலைவர் மாளிகையில் செம்மொழிக்கான விருது வழங்கும் விழாவுக்கு மே 6 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செம்மொழி மாநாட்டை மிக சிறப்பாக நடத்திய தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விழாவில் கலந்து கொள்வார் என தமிழ் ஆர்வலர்கள் மிக ஆவலுடன் உள்ளனர்.

ஆனால் அதே நாளில் முதல்வரின் மகள் கனிமொழி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தில்லி வரும் முதல்வரின் கவனம் முழுவதும் அரசியல் ரீதியாக கனிமொழிக்கு ஆதரவாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தே இருக்கும் என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.

இந்த முறைகேடு விவகாரத்தில், குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளவர்களின் தனிப்பட்ட வருமான வரி, அவர்கள் சார்ந்த நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வருமான வரி தொடர்பான விவரங்களை சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்ய இருக்கிறது.

இதன் அடிப்படையில் 5-ஆம் தேதிக்குப் பதில் மே 12 ஆம் தேதி கனிமொழி உள்ளிட்ட நான்கு பேரும் அமலாக்கப் பிரிவு முன் ஆஜர் ஆகவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படலாம் எனவும் தெரிகிறது.

dinamani.com

முன் பிணை கோர மாட்டேன்: கனிமொழி

புதுடெல்லி , வியாழன், 5 மே 2011

2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி நாளை கைது செய்யப்படலாம் என கூறப்படும் நிலையில், தாம் முன் பிணை கோரி மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில், சிபிஐ கடந்த 25 ஆம் தேதியன்று தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயரும் இடம்பெற்றிருந்தது.2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி கூட்டுச் சதிகாரர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை கனிமொழி உள்ளிட்டோரை மே 6 ஆம் தேதி(நாளை) நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்காக கனிமொழி இன்று டெல்லி வந்தார். இந்நிலையில் நாளை அவர் சிபிஐ-யால் கைது செய்யப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்று கனிமொழியிடம் கேட்டபோது, சிபிஐ தன்னை கைது செய்ய விரும்பினால் அதை சட்டரீதியாக எதிர்க்கப் போவதாகவும், முன் பிணை கோரி மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என்றும் பதிலளித்தார்.

மேலும் தன்னை சுலபமாக வீழ்த்திவிடலாம் என யாரும் நினைக்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1105/05/1110505024_1.htm

2ஜி: கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜர்

இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் ஒருவருமான கனிமொழி வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கனிமொழியை காவலில் வைக்க உத்தரவிடக்கூடாது என்று அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வாதிட்டார்.

டி.பி. ரியாலிடி நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் கொடுத்ததாகவும், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெற்ற சலுகைக்காக அந்தத் தொகை லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.

ஆனால், கனிமொழியைப் பொறுத்தவரை, அதில் 20 சதம் பங்குகளை வைத்திருக்கிறாரே தவிர, அவர் அதில் இயக்குநராக இல்லை என்றும், அந்தத் தொகையை தொலைக்காட்சிக்குப் பெறுவதில் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ராம்ஜெத்மலானி வாதிட்டார்.

இயக்குநர்கள் கூட்டம் எதிலும் அவர் கலந்துகொண்டதில்லை என்றும் ஜெத்மலானி சுட்டிக்காட்டினார்.

கனிமொழி, திமுக தலைவரின் மகள் என்ற காரணத்தினால் அவர் மீது குறிவைக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டிய ராம்ஜெத்மலானி, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்றும், சட்டத்தை மதித்து நடப்பவர் என்றும் எங்கும் தப்பியோடிவிட மாட்டார் என்றும் வாதிட்டார். மேலும், அவர் பெண் என்கிற காரணத்தினாலும் அவரை காவலில் வைக்கக் கூடாது என்று வாதிட்டார்.

கனிமொழியுடன் கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண்மை இயக்குநர் ஷரத்குமாரும் வெள்ளியன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் அஃப்டாப் அகமது ஆஜரானார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி, ஷரத்குமார் தவிர, சினியூக் நிறுவனத்தின் கரி்ம் மொரானி மற்றும் ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ள ஆஸிஃப் பால்வா மற்றும் ராஜீவ் அகர்வால் ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

அவர்கள் அனைவரும் வெள்ளியன்று நீதிமன்றத்தில் ஆரஜாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

உடல்நலக்குறைவு காரணமாக, கரிம் மொரானி ஆஜராகவில்லை.

அதேநேரத்தில், ராஜீ்வ் அகர்வால் மற்றும் ஆஸிஃப் பால்வா ஆகியோர் சார்பில் நடைபெற்ற விவாதம் முடிவடையவில்லை என்பதால் சனிக்கிழமையன்று விசாரணை தொடரவுள்ளது.

அந்த வாதம் முடிந்தபிறகு, சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத்துறை வழக்கறிஞர் தங்கள் நிலைப்பாட்டை எடுத்துரைப்பார். அப்போதுதான், கனிமொழி உள்ளிட்டோரை காவலில் வைக்க வேண்டும் என சிபிஐ வலியுறுத்துமா என்பது தெரியவரும்.

இதுவரை, கனிமொழி சார்பில் ஜாமீன் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/05/110506_kanimozhiappearance.shtml

கனிமொழிக்கு சிறை: சிபிஐ வலியுறுத்தல்

2ஜி வழக்கு தொடர்பாக தம்மைக் கைது செய்யாமலிருக்க கனிமொழி எம்.பி. தாக்கல் செய்திருக்கும் மனுவை தள்ளுபடி செய்துவிட்டு அவரை காவலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் வாதிடப்பட்டது.

இதனிடையே, கனிமொழியின் ஜாமீன் மனு மீதான உத்தரவு மே 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக தாங்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் சார்பில் இந்திய குற்றவியல் சட்டம் (சி ஆர்.பி.சி) 88சி-யின் கீழ் சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுவை சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி நேற்று விசாரித்தார். குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் நேற்று வாதிட்டனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்றும் தொடர்ந்தது. விசாரணைக்கு ஆஜராவதற்காக கனிமொழி இன்று காலை 9.40 மணி அளவில் தமிழ்நாடு பவனில் இருந்து பாட்டியாலா வளாகத்துக்கு வந்தார்.

சிபிஐ சார்பில் வழக்கறிஞர் யூ.யூ.லலித் வாதிட்டார். கலைஞர் டி.வி.யில் அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாரைப் போலவே கனிமொழிக்கும் 20 சதவீத பங்குகள் இருக்கின்றன. கனிமொழி வெறும் பங்குதாரராக மட்டுமே இருந்தார் என்பதை ஏற்க முடியாது. கலைஞர் டி.வி.யின் நிர்வாகத்தில் கனிமொழி முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கும் கனிமொழிக்கும் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது. ராசாவுக்கு தொலைத் தொடர்புத் துறையைப் பெற்றுத் தருவதற்காக அரசியல் தரகர் நீரா ராடியா மூலமாக கனிமொழி பரிந்துரை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.

கலைஞர் டி.வி. தொடங்கப்படும்போது ராசாவுடன் கனிமொழி அடிக்கடி பேசியிருக்கிறார். இவற்றின் காரணமாக எந்த ஆவணமும் இல்லாமல் கலைஞர் டி.வி.க்கு பணம் கைமாறியிருக்கிறது.

கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால் குற்றவியல் சட்டம் 88சியின் அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டு அவரைக் காவலில் வைக்க உத்தரவிட வேண்டும். வழக்கமான ஜாமீன் மனு தாக்கல் செய்ய மட்டுமே அவர் அனுமதிக்கப்பட வேண்டும் என்று சிபிஐ சார்பில் வாதிடப்பட்டது.

http://www.alaikal.com/news/?p=68592

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.