Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய நாடாளுமன்ற அரசியலில் நமக்கு இது ஒரு ஆரம்பமே! - ராதிகா சிற்சபேசன்

Featured Replies

கனேடிய நாடாளுமன்ற அரசியலில் நமக்கு இது ஒரு ஆரம்பமே! - ராதிகா சிற்சபேசன்

தமிழ்ப் பெண்ணான ராதிகா சிற்சபேசன் வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளார். கனடாவில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இவர்களது வாக்குகள் தேர்தல் காலங்களில் தமிழ் மக்கள் அல்லாத பலரது வெற்றிகளுக்கு வழிவகுத்துள்ளது. ஆனால் தமிழ்ப் பிரதிநிதித்துவத்திற்கு வழிவகுப்பதாக அமையவில்லை.

இம்முறை தேர்தலில் ஸ்காபுறோ ரூஜ் ரிவர் தொகுதியில் வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் அங்கு வாழ்கின்ற ஏனைய சமூகத்தவர்களுடன் இணைந்து வரலாறு படைத்துள்ளனர்.

கனடா பழைமைவாதக் கட்சியின் கடந்தகால அரசியல் போக்கு குறிப்பாக குடிவரவாளர்களுக்கெதிரான செயற்பாடு மேற்படி தொகுதி மக்களைச் சிந்திக்க வைத்திருக்கலாம்.

எது எப்படி இருந்தபோதும் ராதிகா தனது தேர்தல் பிரசாரத்தின்போது தான் தமிழ் மகளாக நாடாளுமன்றம் செல்வேன் , தமிழர்களின் குரலாக ஒலிப்பேன் அதேவேளையில் எனது தொகுதி மக்களையும் இணைத்து அணைத்து பணியாற்றுவேன் என்று திடமாகக் கூறியதை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் உள்ளார்.

இந்த வெற்றிக்களிப்பிற்குள்ளும் கேசரி வார இதழுக்காகத் தொடர்புகொண்டபோது அவரது பதில்கள் நிதானமாக வந்தன.

இந்த வெற்றியை ஈட்டியமைக்காக நான் பூரணமாக நிறைவுகொள்ள முடியாது. கனேடிய நாடாளுமன்ற அரசியல் கனடா வாழ் தமிழ் மக்களுக்கு இது ஆரம்பமே. இந்த ஆரம்பத்தை களமாகக் கொண்டும் நாம் இன்னும் முயல வேண்டும். எனது அரசியல் பணிகளுக்கு நமது தமிழ் மக்களின் ஆதரவும் ஆசிர்வாதம் எனக்குத் தொடர்ந்தும் தேவை என்று அடக்கமாகப் பதிலளித்தார்.

அவர் கேசரி வார இதழுக்கு வழங்கிய செவ்வி இதோ :

------------------------------------------------------------------------------------------------------

கேள்வி: கனடாவில் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் எனது அரசியல் பணிகளுக்கு தமிழ் மக்களின் ஆதரவும் ஆசிர்வாதம் தொடர்ந்தும் தேவை அவர்களுக்கென்று இதுவரை தமிழர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் தெவு செய்யப்படவில்லை. முதன் முறையாக நீங்கள் தெவு செய்யப்பட்டுள்ளீர்கள். அதுவும் ஒரு தமிழ்ப் பெண்ணாக கனடா நாடாளுமன்றத்தில் அமர உள்ளீர்கள்.

உங்களது இந்த வெற்றி குறித்தும் இந்த வெற்றியை எவ்வாறு நீங்கள் உணர்கின்றீர்கள் என்றும் கூறுங்கள்.

பதில்: இந்த வெற்றியானது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது.

கனடாவில் நான் பல வருடங்களாக புதிய ஜனநாயகக் கட்சியோடு இணைந்து பல பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், இந்த வெற்றியை ஈட்டித் தந்த ஸ்காபுறோ ரூஜ் ரிவர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு எனது நன்றியைத் தெவித்துக் கொள்கின்றேன். அத்துடன் இந்தத் தொகுதியில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் எனது வெற்றியில் அதிகளவு பங்குண்டு என்பதையும் நான் உணருகின்றேன். ஆனாலும் இந்த வெற்றியை ஈட்டியமைக்காக நாம் பூரண நிறைவு கொள்ள முடியாது.

கனேடிய நாடாளுமன்ற அரசியலில் நமக்கு இது ஒரு ஆரம்பமே. இந்த ஆரம்பத்தை தளமாகக் கொண்டு நாம் இன்னும் முயல வேண்டும்.

என்னைப் பொறுத்தளவில் என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்தப் புதிய பொறுப்புகளை மிகவும் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்ளுகின்றேன். அந்த சிந்தனைகளோடு எனது பணிகளை நான் தொடரவுள்ளேன். எனது அரசியல் பணிகளுக்கு நமது தமிழ் மக்களின் ஆதரவும் ஆசிர்வாதங்களும் எனக்குத் தொடர்ந்தும் தேவை என்பதையும் நான் நன்கு உணர்கின்றேன்.

கேள்வி: கனடாவில் எத்தனை தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். உங்களைப்போல் எத்தனை உறுப்பினர்களை எதிர்காலத்தில் தமிழ் மக்களால் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப டியும் என்று எதிர்பார்க் கிறீர்கள்?

பதில்: கனடாவில் எத்தனை தமிழ் வாக்காளர்கள் இருககின்றார்கள் என்பதை நான் உறுதியாகக் கூறடியாவிட்டாலும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான நமது மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

மேலும் நான் வெற்றி பெற்றுள்ள தொகுதியில் சுமார் 15ஆயிரம் வாக்காளர்கள் உள்ளார்கள். இதைப் போலவே அதிகமாக தமிழ் வாக்காளர்கள் உள்ள பல தொகுதிகள் ஸ்காபுறோ என்று பரந்த பிரதேசத்தில் உள்ளன. அவற்றை நமது மக்கள் நன்கு உணர்ந்து எதிர்காலத்தில் வேலை செய்ய வேண்டும். அவர்களுடைய அரசியல் பிரவேசம் என்பது நிதானமானதும் வேகமானதுமாக அமைய வேண்டும்.

ஆனால் நமது தமிழ் கனேடிய அரசியலில் அதிகளவு வெற்றிபெற வேண்டுமானால் முதலில் பொதுவான சமூக அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடவேண்டும். அதன் மூலமே உறுதியான ஒரு அத்திவாரத்தை நாம் அமைக்கலாம் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு சமூகத்தோடு நம்மை நாம் உறுதியாக இணைத்துக்கொள்ள வேண்டும்.

கேள்வி:கனடா வந்திருந்தபோது உங்களுடைய தேர்தல் பரப்புரைகளை நேரில் காணக் கிடைத்தது. தற்போது வெற்றி பெற்ற நிலையில் உங்கள் முன்னுள்ள பணிகள் என்னவென்று கூறுங்கள்?

பதில்: தேர்தல் பிரசாரப்பணிகளில் நான் ஈடுபட்டபோது இருந்த அதே உற்சாகத்தோடும் நம்பிக்கைகளோடும்தான் நான் இன்றும் உள்ளேன். ஏனெனில் என்னைத் தெரிவு செய்த ஸ்காபுறோ ரூஜ் றிவர் தொகுதியின் வாக்காளப் பெருமக்கள் என்மீது கொண்ட நம்பிக்கையை நான் நிரூபிக்க வேண்டும். அவர்களோடு இன்னும் என்னை நான் இணைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் யதார்த்தமாக்க முடியும்.

என்னைப் பொறுத்தளவில் எனது தொகுதி மக்களுக்கு நான் ஆற்ற வேண்டிய பணிகள், மற்றும் எனது கட்சி தரவிருக்கும் பணிகள் அத்துடன் தமிழ் மக்கள் என்மீது கொண்டிருக்கும் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றை நான் ஏற்று வெற்றிகரமாக இயங்குவதற்கு என்னை நான் தயார்படுத்தியபடி உள்ளேன்.

கேள்வி: நீங்கள் முகம் கொடுக்கவுள்ள சவால்கள் என்னவென்று கூறடியுமா?

பதில்: நான் எனது தேர்தல் பிரசாரத்தின்போது எனது தொகுதியில் உள்ள வாக்காளர்களை நாடி அவர்கள் இல்லங்களின் கதவுகளைத் தட்டியபோது அவர்களில் பலர் தங்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும் தாங்கள் இந்தத் தேர்தலில் பங்கெடுக்கும் எண்ணம் இல்லை எனக் கூறினார்கள். ஆனால் நான் அவர்களை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை அவர்களோடு பகிர்ந்து கொண்டு விடைபெற்றேன்.

அதன் விளைவுதானோ என்னவோ கடந்த தேர்தலில் எனது தொகுதியில் 40 சதவீதமாக இருந்த வாக்களிப்பு இந்தத் தேர்தலில் 55 சதவீதமாக அதிகத்துள்ளது.

எனவே நமது தமிழ் மக்களினதும் ஏனைய இன மக்களினதும் அரசியல் ஈடுபாட்டை நாம் அதிகக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

அத்தோடு பொது மக்களோடு கொள்ளவேண்டிய இறுக்கமான நெருக்கத்தை ஏற்படுத்தி அவர்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும்.அப்போதுதான் எதிர்காலம் அவர்களுக்கும் எனக்கும் வெற்றிகரமானதாக அமையும்.

கேள்வி: நீங்கள் ஸ்காபுறோ ரூஜ் றிவர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றீர்கள். உங்களுடைய தொகுதிக்கான தேவைக்கு அப்பால் கனடாவில் வாழுகின்ற ஒட்டுமொத்த தமிழ் சகத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இதை எவ்வாறு செய்யப் போகின்றீர்கள்?

பதில்: நான் 2004ஆம் ஆண்டு தொடக்கம் கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சியோடு என்னை இணைத்தபடி இயங்கிவந்துள்ளேன்.

அப்போது என்னைக் கட்சியின் தலைவர் ஜேய்க் லேய்டன் தமிழர் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆலோசகராக நியமித்தார். அந்தப் பொறுப்பு எனக்கு பல அனுபவங்களைத் தந்தது. அத்துடன் கட்சித் தலைவரும் ஏனைய எமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கனேடிய வாக்குக் கேட்டுச் சென்றபோது அரசியலில் ஆர்வம் இல்லை என்று கூறிய மக்கள் தேர்தலில் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர் நாடாளுமன்றத்தில் எமது தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும் போதும் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக உரையாற்றும் போதும் அவர்களுக்குத் தேவையான தகவல்களையும் ஆலோசனைகளையும் நான் வழங்கினேன். நான் வழங்கிய தகவல்களை அவர்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார்கள்.

ஆனால் தற்போது நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். எனது குரலையும் கருத்துகளையும் நாடாளுமன்றத்தில் நேரடியாக தெரிவிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துள்ளது.

எனவே நான் நமது ஈழத்தமிழ் மக்கள் தொடர்பாக பல பணிகளை ஆற்றக் கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மூலம் நான் எனது பணிகளைத் தொடரவுள்ளேன்.

மேலும் அடக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்து வரும் எமது புதிய ஜனநாயகக் கட்சிக்கு தமிழர் விவகாரங்கள் தொடர்பான விடயங்கள் அனைத்தும் நன்கு தெரியும் முன்னைய நாடாளுமன்ற அமர்வுகளில் பீற்றர் யூலியன் என்னும் எமது நாடாளுமன்ற உறுப்பினர் அமெரிக்காவின் செனற் சபை கொண்டு வந்த தீர்மானம் போல கனடிய நாடாளுமன்றத்திலும் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரவேண்டும் என்று உரையாற்றினார். அந்த உரைக்குத் தேவையான முழுத் தகவல்களையும் நான் வழங்கியிருந்தேன்.

ஆகவே ஈழத்தமிழர்கள் தொடர்பாகவும் இலங்கை அரசின் மோசமான அரசியல் ஆதிக்கம் தொடர்பாகவும் தேவையான தீர்மானங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நானும் எனது நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து உழைப்போம் என்று உறுதி கூறுகின்றேன்.

கேள்வி: பழைமைவாதக் கட்சி தற்போது ஆட்சியில் மீண்டும் அமர்ந்துள்ளது. பொதுவாகவே குடிவரவாளர்கள் குறித்து கடும் போக்கினைக் கொண்ட கட்சியெனக் கருதப்படுகின்றது. இந்தக் கட்சியின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்குமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.

பதில்: ஆமாம். கொன்சர்வேர்ட்டிவ் கட்சி என்னும் முன்னைய ஆளும் கட்சி தான் மீண்டும் பதவியேற்றுள்ளது. முன்னைய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர்தான் மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்கவுள்ளார்.

அந்த அரசும் அமைச்சரும் முன்னைய ஆட்சியில் C-49 என்னும் கடுமையான சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்கள். அந்தச் சட்டத்தின் மூலம் கனடாவிற்கு அகதிகளாக வரும் அனைவருமே கடுமையாகப் பாதிக்கப்படவுள்ளார்கள் என்பதை எமது கட்சித் தலைவர் முன்னர் பல தடவைகள் நாடாளுமன்றத்தில் எடுத்துக் கூறியுள்ளார்.

கனடாவிற்கு பல்வேறு வழிகளில் வரும் அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவே இந்த C-49 சட்டம் அமுல் செய்யப்படுகின்றது என்று கூறப்பட்டாலும் கனடாவின் குடிவரவு அமைச்சர் ஜெய்சன் கென்னி பல தடவைகள் தனது உரைகளில் கப்பல்கள் மூலம் பல ஆபத்துக்களைக் கடந்து சட்டவிரோதமாக கனடாவிற்கு வந்து குவியும் ஈழத்தமிழர்களைக் கட்டுப்படுத்தவே இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டிய ஒரு தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது என்று பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

எமது கட்சித் தலைவரும் அவரது நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னர் பல தடவைகள் நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை எதிர்த்துப் பேசியுள்ளனர். கனடாவிற்கு அகதிகளாக வருவதற்கு எவருக்கும் பூரண உமை உண்டு என்பதையும் அவர்கள் மீது பலாத்காரமோ அன்றி அவர்களை இழிவுபடுத்தும் நடவடிக்கையோ எடுக்கக் கூடாது என்பதை எமது கட்சி வலியுறுத்தி வந்துள்ளது.

எனவே இனிவரும் நாடாளுமன்ற அமர்வுகளிலும் எமது கடசியும் அதன் தலவரும் அதனையே தொடர்ந்து செய்வார்கள். அவர்களோடு புதிய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நானும் ஒத்துழைப்பேன்.

கனடாவிற்கு வரும் தமிழ்பேசும் அகதிகள் தொடர்பான விடயங்களில் நானும் எனது கட்சியும் தொடர்ந்து போராடுவோம் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்.

கேள்வி: எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள உங்களால் ஒட்டுமொத்த கனடாத் தமிழர்களின் நலன் குறித்து காத்திரமாக செயற்பட முடியும் என எதிர்பார்க்கின்றீர்களா?

பதில்: ஆமாம் நிச்சயமாக செயற்படமுடியும் என்ற நம்பிக்கை எனக்கும் எனது கடசிக்கும் உள்ளது . காரணம் கடந்த நாடாளுமன்றத்தில் எனது புதிய ஜனநாயகக் கட்சிக்கு ஆக 37 ஆசனங்கள் மட்டுமே இருந்தன. அப்படியிருந்தும் எமது கட்சிதான் ஸ்டீபன் கார்ப்பர் அரசாங்கத்திற்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராகவும் அதிக குரல் கொடுத்தது. எனவே 37 ஆசனங்களை மட்டும் கொண்டிருந்த எமது கட்சி தற்போது 102 ஆசனங்களைக் கொண்டு ஒரு பலமான எதிர்க்கட்சியாக விளங்குகின்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதனை வெற்றிகரமாக ன்னெடுத்துச் செல்வேன் தற்போதை புதிய நாடாளுமன்றத்தில் தான் எமது கட்சி பலமான ஒரு எதிர்க்கட்சியாக வந்துள்ளது. அதுவும் கனடிய நாடாளுமன்ற வரலாற்றில் பலமான ஒரு எதிர்க்கட்சியாக நாங்கள் உறுதியான வகையில் பலம் பெற்றுள்ளோம். இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று கருதுகின்றேன். மேலும் தற்போது 102 ஆசனங்கள் உள்ளன. அதிகமான பலம் உள்ளது. எனவே முன்னைய காலங்களிலும் பார்க்க கனடிய மக்களின் நலன் குறித்து நாம் போராட முடியும். அப்போது நாம் ஈழத்தமிழர்களின் நலன் குறித்தும் காத்திரமாக செயற்பட முடியும் என்ற பூரண நம்பிக்கை எனக்குண்டு.

கேள்வி: உங்களைப் பற்றி கூறுங்கள் (பூர்வீகம், கல்வி, அனுபவங்கள், கனடா வாழ்க்கை)

பதில்: நான் சிறுவயதில் கனடாவிற்கு வந்து இங்குதான் முதலாம் வகுப்பில் சேர்ந்தேன். இன்றிலிருந்து சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் கனடாவில் தமிழைக்கற்றுக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருந்ததில்லை. எனவே நான் மூன்று பஸ்களில் பயணம் செய்து தமிழ் மொழியைக் கற்றேன். நான் தமிழ்மொழியை மிகுந்த மயாதையுடன் நேசிக்கின்றேன்.

நான் 7 வயதுடையவளாக இருந்தபோது எனது தந்தை ஆரம்பித்த தமிழ் கனடா வாழ் தமிழ் மக்கள் பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் மேலதிகமாக ஈடுபாட்டைக் காட்ட வேண்டும் பாடசாலையில் அவருக்கு உதவியாக இருந்து செயற்பட்டேன். அத்துடன் தொடர்ந்து தமிழைக் கற்றேன். அத்துடன் திருமதி நிரோதினி பரராஜசிங்கம் அவர்களிடம் பரதநாட்டியக் கலையை கற்று எனது சகோதரிகளோடு சேர்ந்து அரங்கேற்றம் செய்தேன். இவ்வாறான கலையுலக ஈடுபாடு என்னைக் கனடிய தமிழர் சமூகத்தோடு நன்கு இணைத்துக் கொள்ள உதவியது.

இதே போலவே நான் கற்ற பொதுக் கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி என்பன என்னை முழுதான பெண்ணாக மாற்றியுள்ளது. அந்தப் பலத்தைக் கொண்டு எனது பணிகளை நான் செய்து வருகின்றேன்.

கேள்வி: கனடாவில் வாழ்கின்ற தமிழர் சமூகத்திடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: கனடாவில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தொடர்ந்தும் தங்களது பொதுவாழ்க் கையிலும் அதே போல் அரசியலிலும் மேலதிக ஈடுபாட்டைக் காட்ட வேண்டும்.

அது அவர்களுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கு நல்ல பலமாக இருக்கும்.

கனடாவில் தமிழ் சமூகம் கல்வி மற்றும் கலை மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் பல வெற்றிகளை ஈட்டியுள்ளது. இதேபோல அரசியலிலும் வெற்றி பெறவேண்டும்.

கேள்வி: கனடா வாழ் தமிழ் மக்களுக்கான உங்களது செய்தி என்ன?

பதில்: கனடா வாழ் தமிழ் மக்களே நீங்கள் முன்னைய காலங்களைப் போல நமது சமூகத்தோடும் கனடிய ஏனைய இனமக்களோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள். சமூகத்தோடு நாம் தொடர்ச்சியான பிணைப்பை கொண்டிருந்தால் நாம் நிச்சயம் வெற்றி பெறலாம்.

தற்போது எனது நாடாளுமன்றப் பிரவேசம் என்பது ஒரு முடிவல்ல. அதுஒரு ஆரம்பம். ஆந்த ஆரம்பத்தை நன்கு நாம் பயன்படுத்த வேண்டும்.

எனவே நாம் தொடர்ந்தும் சமூகத்தின் மீது கொண்ட கரிசனையோடும் அரசியலில் ஆழமான ஈடுபாட்டோடும் எமது வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும் கடந்த காலங்களில் நமது மக்கள் தாயகத்தில் துன்பக்கடலில் மூழ்கியிருந்த போது வீதிகளுக்கு வந்து நீங்கள் போராடினீர்கள்.

எனவே தொடர்ந்தும் மனதை தளரவிடாமல் போராடுங்கள். வெற்றிகளை நாம் நிச்சயம் ஈட்டலாம்.

மூலம்: வீரகேசரி - வைகாசி 8, 2011

பிரசுரித்த நாள்: May 08, 2011 5:46:17 GMT

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.