Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா-பாகிஸ்தான் உறவு கவலையளிக்கிறது

Featured Replies

சீனா-பாகிஸ்தான் உறவு கவலையளிக்கிறது: ஏ.கே.அந்தோனி

சீனா- பாகிஸ்தான் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்புத் துறைசார்ந்த உறவுகள் இந்தியாவுக்கு கவலையளிப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறியுள்ளார். புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்புப் படை உயர் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அந்தோனி செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது:

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பாதுகாப்புத் துறை உறவு வளர்ந்து வருகிறது. இது இந்தியாவுக்கு கவலையளிக்கக் கூடிய விஷயமாகும். இந்த நிலைமையினால் நாமும் நம்முடைய பாதுகாப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. அப்படிச் செய்வதுதான் ஒரே வழி என்றார் அவர்.

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புதிய ராணுவ ஒப்பந்தப்படி, இரு நாடுகளும் இணைந்து உருவாக்க உள்ள ஜேஎஃப் தண்டர் ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் 50 போர் விமானங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் இருந்ததும், அங்கு அவர் கொல்லப்பட்டதும் இந்த பிரதேசத்தைப் பாதிக்கக்கூடிய விஷயமாகும். இந்தியாவையும் இது பாதிக்கும்.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான மறைவிடங்கள் இருப்பது நமக்கு கவைலயளிக்கும் விஷயமாகும். அவை கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் அவ்வாறு செய்தால்தான் இந்தியாவுடனான உறவு மேம்படும் என்றார் அவர்.

அமெரிக்க அதிரடிப் படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒசாமா பின் லேடனின் மறைவிடத்தை தாக்கி கொன்றது போல இந்தியாவாலும் செய்ய இயலும் என இந்திய ராணுவ தளபதி ஜெனரல் வி.கே. சிங் மற்றும் விமானப் படை தளபதி பி.வி. நாயக் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இது குறித்து, அந்தோனியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியது:

பாதுகாப்பு உயரதிகாரிகள் கூறிய அந்தக் கருத்தைப் பற்றி பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கெனவே கருத்து கூறிவிட்டார். இந்நிலையில் நான் எதுவும் இதுபற்றி சொல்வதற்கில்லை என்றார் அவர். ஆனால் இந்தியா அது போன்ற கமாண்டோக்களைக் கொண்டு அதிரடித் தாக்குதல் நடத்தாது என்றார்.

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தற்போது உள்ள நிலைமை குறித்து அமைச்சரிடம் கேட்டபோது அவர் கூறியது: முன்பிருந்ததைவிட இப்போது வன்முறை குறைந்துள்ளது. அவ்வப்போது ஊடுருவல் முயற்சி நடந்து வருகிறது. அதே போல சண்டை நிறுத்த உடன்படிக்கை அவ்வப்போது மீறப்பட்டு வருகிறது என்றார்.

சி-17 ரக அமெரிக்க விமானங்களை வாங்குவது முடிவாகிவிட்டதா என்று கேட்டபோது, பாதுகாப்பு விவகார அமைச்சரவைக் குழு அதைப் பற்றி ஆய்வு செய்து வருகிறது. இதற்காக எந்த காலக்கெடுவும் தீர்மானிக்கப்படவில்லை என்று அந்தோனி கூறினார்.

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=420779&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81:%20%E0%AE%8F.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF

  • தொடங்கியவர்

இந்த பாகிஸ்தான் - சீனா அச்சாணிக்குள் சிங்களத்தையும் சேர்த்து இந்தியா பார்க்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

- India on Friday voiced its concern at the deepening strategic nexus between China and Pakistan, which extends from Beijing extending covert help to Pakistan to build its nuclear and missile arsenals to the two jointly co-producing fighter jets.

- This comes close after reports that China is helping Pakistan to build its nuclear arsenal at a furious pace, as also is all set to provide it with 50 new JF-17 `Thunder' multi-role fighters.

http://timesofindia.indiatimes.com/india/Antony-expresses-concern-over-deepening-China-Pak-strategic-nexus/articleshow/8478165.cms

  • தொடங்கியவர்

பிரச்சனைக்குரிய அண்டை நாடுகளுக்கிடையே இருக்கிறோம்: சிதம்பரம்

உலகிலேயே மிகவும் பிரச்சனைக்குரிய அண்டை நாடுகளுக்கிடையே இந்தியா இருக்கிறது என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

டெல்லியில் எல்லைப் பாதுகாப்புப் படையினரை கெளரவிக்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார்.

“மிகவும் பிரச்சனைக்குரிய அண்டை நாடுகளுடன் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை நான் எப்போதும் கூறி வருகிறேன். இப்படிப்பட்ட பிரச்சனைக்குரிய அண்டை நாடுகள் சிலவற்றில் மிகவும் பலவீனமான அரசுகள் உள்ளன. இவை யாவும் நமது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன” என்று எந்த ஒரு நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் பேசியுள்ள சிதம்பரம், “எனவே நமது நாட்டின் சுதந்திரத்தையும், இறையாண்மையையும், பாதுகாப்பையும் காப்பாற்றுமாறு நமது பாதுகாப்புப் படைகளைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1105/21/1110521040_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.