Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவருக்கு இராணுவ முகாம்களில் பயிற்சி வழங்குவதை நிறுத்துங்கள்;

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாணவருக்கு இராணுவ முகாம்களில் பயிற்சி வழங்குவதை நிறுத்துங்கள்; கூட்டமைப்பு வலியுறுத்து

பிரசுரித்தவர்: Sukkran May 21, 2011Add a comment

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதை உடன் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்த பொது நிர்வாக உள்ளூராட்சி அதிகாரசபைகள் அமைச்சர் ஜோன் செனிவிரத்தினவிடம் இந்தக் கோரிக்கையை நேரில் வலியுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் இணைச் செயலாளருமான மாவைசேனாதிராசா.பல்கலை. மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கான பயிற்சிகள் கண்டி, ரன்தம்பே இராணுவ முகாமில் வைத்து வழங்கப்படவுள்ளது. இந்த முகாமில் மாணவர்களுக்குப் பயிற்சிகளை வழங்கவென யாழ். மாவட்டத்தில் இருந்து 26 ஆசிரியர்கள் செல்கின்றனர். மேலும் 6 பேர் வடக்கின் ஏனைய மாவட்டங்களில் இருந்து செல்கின்றனர்.பயிற்சிகளை வழங்குவது தொடர்பான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் இவர்களுக்கு கடந்த ஆண்டே வழங்கப்பட்டிருந்தன.

சுமார் 1,750 தமிழ் மாணவர்களுக்கு இந்த வருடம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. அவர்களில் 1,300 பேருக்கு ரன்தம்பே இராணுவ முகாமில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. ஏனைய சுமார் 450 பேருக்கு பொலிஸ் நிலையங்களில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே பல தரப்புகளில் இருந்தும் இந்தப் பயிற்சிக்குக் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கூட்டமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“மாணவர்களுக்கு தலைமைத்துப் பயிற்சி அளிப்பதை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் அப்பயிற்சிகள் கல்வி அமைச்சின் மூலமோ, பொது நிர்வாக உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் மூலமோ வழங்கப்படவேண்டும் அதுவே உண்மையான தலைமைத்துவப் பயிற்சியாகும். ஏன் இராணுவ முகாம்களில் வைத்து அதனை வழங்குகிறீர்கள். பொறுப்புள்ள அமைச்சர்கள் என்ற வகையில் எமது மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் பயிற்சி வழங்கும் திட்டத்தை இரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார் மாவை சேனாதிராஜா.

My kathiravannews .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.