Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் பழிவாங்கப்படுகிறாரா? - வாசன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பழிவாங்கப்படுகிறாரா? - வாசன்.

03 ஜூன் 2011

ஏன் இந்த பழிவாங்குதல்? - சீமான் எதிர்காலம் என்ன?

சீமான் பழிவாங்கப்படுகிறாரா? - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக -வாசன்.

சீமானின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் அவர் மீது திருமணமோசடி, பாலியல் மோசடி, பெண் வதை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குகளை சென்னை போலீஸ் பதிவு செய்திருக்கிறது. அவர் தலைமறைவாகி விட்டதாகவும் அவரைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் போலீசார் செய்திகளை ஊடகங்களுக்கு கசிய விடும் அதே நேரத்தில் அவர் எங்கும் தலைமறைவாகவில்லை. நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோர முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. நேற்றைய முன் தினம் விஜயலெட்சுமி என்னும் நடிகை சென்னை போலீஸ் கமிஷனரிடம் சீமான் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக புகார் கொடுக்க அந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு சென்னை வளசரவாக்கம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட சில மணி நேரங்களில் விஜயலெட்சுமியிடம் புகாரைப் பெற்ற போலீசார் சீமானை விசாரிக்காமல் 6 பிரிவுகளில் வழக்கைப் பதிவு செய்து கைது நடவடிக்கையை தீவீரப்படுத்தியிருக்கின்றனர். ஈழ மக்கள் தொடர்பான அரசியல் போராட்டங்களில் மட்டுமே இதுவரை கைதான சீமான் இப்போது முதன் முதலாக ஒரு பாலியல் வழக்கில் கைதாக உள்ளார். தமிழகப் போலீசின் இந் நடவடிக்கையைக் காணும் போது இது அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கை போல் உள்ளது.

ஏன் இந்த பழிவாங்குதல்?

...............................................

கருணாநிதி ஆட்சியில் இருந்த போது அவர் மீதான ஈழம் தொடர்பான வருத்தங்கள் கோபமாக மாறி அனைவரையுமே ஜெயலலிதாவின் பக்கம் சாய்த்தது. தேர்தலில் ஜெயலிதாவுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தார் சீமான். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் சீமான் அத்தோடு ஈழ விவாகாரத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. தமிழக சட்டமன்றத்தில் இனப்படுகொலை தொடர்பாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியவர். ஈழ விஷயத்தில் ஜெயலலிதாவுக்காக பிரச்சாரம் செய்த உரிமையில் கூடுதலான கோரிக்கைகளை அறிக்கைவாயிலாக வைத்தார். சமீபத்தில் இலங்கையின் எதிர்கட்சித்தலைவர் ரணில் இந்தியாவின் அழைப்பில் பேரில் இந்தியா வந்தார். அப்படி வந்தவர் ஜெயலலிதாவையும் சந்திக்கும் திட்டத்தோடு வந்ததாகத் தெரிகிறது. ரணில் வந்த அன்றே சீமான் இவ்வருகை தொடர்பாகவும், இந்தியாவின் அரசியல் தீர்வு தொடர்பாகவும், ஒரு அறிக்கையை விட்டிருந்தார். ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் பொறுத்தவரையில் ஈழப் பிரச்சனை என்பது இருவருக்குமே ஊறுகாய் மாதிரிதான். இருவருமே ஆதாயம் கிடைக்கும் வரை அதை கோஷமாக வைப்பதும். ஆதாயம் கிடைத்து பதவிக்கு வந்த பின்னர் அதையே தொல்லையாகப் பார்ப்பதுமான போக்குமே இருவருடமும் உள்ளது. இந்நிலையில்தான் ஜெயலிதா ஆட்சிக்கு வந்ததும் இனி ஈழ விடுதலை ஆதரவாளர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என எண்ணியிருக்கலாம். முதன் சட்டமன்றக் கூட்டத்தொடர் கூடுகிற நிலையில் ஈழ விடுதலை ஆதரவாளர்களிடையேயிருந்து இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் ஒன்றை முதல் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து விடக் கூடாது என்பதை ஒரு எச்சரிக்கை மணியாகச் செய்வதும், புதிய நாயகானாக உருவாகி வரும் சீமானை அடக்கி வைப்பதுமான நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கை ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் செய்யப்பட்டுள்ளாதாகத் தெரிகிறது.

சீமான் எதிர்காலம் என்ன?

..............................................

இவ்விதமான பல் வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை வி.ஐ.பிக்களை நோக்கி வீசுவதற்கென்றே சில பெண்களை அரசியல் கட்சிகள் உருவாக்கி வைத்திருப்பார்கள். சீமானுக்கும் விஜயலெட்சுமிக்கும் தொடர்பில்லை என்பதல்ல விஷயம். விஜலெட்சுமியும் சரி சீமானும் சரி பரஸ்பர புரிதலூடாக மட்டுமே நடபாக பழகியிருப்பது மட்டுமே சாத்தியம். விஜயலெட்சுமி கூறும் குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் புவனேஸ்வரி மு.க.ஸ்டாலின் மீது சொன்னக் குற்றச்சாட்டும். ஜெயலலிதா முன்னாள் கவர்னர் சென்னாரெட்டி மீது சொன்ன குற்றச்சாட்டும் உண்மை என்பது போலாகி விடும். ஆக சாதக பாதகங்களுக்கப்பால் சீமானின் அரசியல் எதிர்காலம் இதனால் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. அடுக்கடுக்காக அவர் மீது பல் வேறு பெண்களை வைத்து பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை மீள முடியாத் துயரில் ஆழ்த்துவதும் இவர்களின் திட்டங்களாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் உலகெங்கிலும் உள்ள ஈழ விடுதலை ஆதரவாளர்களால் ஈழத் தாய் என்று வர்ணிக்கப்பட்ட ஜெயலலிதாவால் ஈழ விடுதலை ஆதர்வாளர்கள் மீதான பழி வாங்கல் நடவடிக்கையில் முதல் எச்சரிக்கையே சீமான் கைது. இப்போது அவரது எதிர்காலம் அவரது கையில் இல்லை. வழக்கம் போல போடப்படும் அரசியல் வழக்கல்ல இது. வாழ்வையே சூறையாடி விடும் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு. கருணாநிதி ஒரு போதும் இதைச் செய்ய மாட்டார் ஜெயலலிதா எப்போதுமே செய்வதைத்தான் இப்போதும் செய்திருக்கிறார். இன்று ஜூன் 3 முதல் சட்டப்பேரவைக் கூட்டம் துவங்குகிறது. முதல் கூட்ட நாளிலேயே சீமான் மீது வழக்கும் பதியப்பட்டிருக்கிறது.

சீமான் பழிவாங்கப்படுகிறாரா? - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக -வாசன்.

gtbc

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் மட்டுமல்ல அவர்களுக்காக ஆணித்தரமாகக் குரல்கொடுப்போரது குரல்வளையை நசிப்பதில் சிங்கள அரசுகளுக்கு நிகராகத் தமிழக, கிந்திய அரசுகள் காலத்துக்குக் காலம் நரபலியாடுவது தொடர் நிகழ்வாகவே செல்கிறது. தமிழக உறவுகள் இது தொடர்பாக அறிவுபூர்வமாக அணுக வேண்டியது அவசியம். இல்லையேல் தமிழீழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் தமிழினம் அழிந்துவிடும் அபாயம் உள்ளது.

நெருப்பு இல்லாம புகையாது என்று யாரும் சொன்ன செருப்படி தான் விழும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.