Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவின் தீர்மானத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றி!

Featured Replies

இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பதாக கூட்டடைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களாகிய நாம் எமது சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக போராடி வருகிறோம் இலங்கை அரசு எமக்கு பல தடவைகள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை மாறாக எமது உரிமைகளை நசுக்கிக்கொண்டே வருகின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற உக்கிரமான யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் பல இலட்சம் பேர் இடம்பெயர்ந்தார்கள் அவர்களின் வாழ்விடங்கள் தரைமட்டமாகி சொத்துக்கள் அழிக்கப்பட்ட நிலையில் இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னும் அந்த மக்கள் இருப்பிடங்கள் இன்றி தங்களது மண்ணில் சுதந்திரமாக வாழ முடியாமல் இருப்பதைக் காணலாம்.

விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்ததன் பிற்பாடும் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்புகள் தமிழர் பகுதிகளில் தொடர்வதுடன் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிபோய்க்கொண்டேதான் இருக்கின்றன. இந்த நேரத்தில் ஐநா சபையும் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் படி கோரி அறிக்கை இட்டுள்ளது. இந்த அறிக்கையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

அத்துடன் தற்போது தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ‘இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்ற தீர்மாத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பதுடன் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றது மேலும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும் தமிழக மக்களும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர தொடர்ந்தும் பாடுபடவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்க்கதக்கது, தொடர்ந்தும் இப்படியான வேலைகளை செய்யவும்.

to : cmcell@tn.gov.in

Subject: TN assembly passes special resolution seeking economic sanctions on Sri Lanka

Hon. Selvi. Jeyalalitha Jeyaram

Chief Minister of Tamilnadu

As a member of world Tamil community, I am profoundly proud and grateful for this motion by your government. I am confident with your leadership 80 millions of Tamils will once again feel that they have a leader to voice for them in this world.

Please continue your efforts until Tamils in Sri Lanka have the rights and freedom that most of the world take for granted.

Sincerely,

to: to : cmcell@tn.gov.in

இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

செல்வி. ஜெயலலிதா ஜெயராம்

தமிழக முதலமைச்சர்.

மாண்புமிகு முதலைமைச்சர் அவர்களுக்கு,

இன்று தமிழக சட்டசபையில் ஏகமனதாக சிறிலங்கா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படல் வேண்டும் என தங்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உலக தமிழினம் பாராட்டி நம்பிக்கை கொண்டுள்ளது.

ஒரு பாரிய இனப்படுகொலைக்கு முகம் கொடுத்து இரண்டுவருடங்கள் கழிந்தும் உரிமைகள், உறவுகள் மறுக்கப்பட்டு அடிமைகளாக தமது சொந்த நிலத்தில் வாழும் ஈழ தமிழர்களின் அவலங்களை துடைத்தெறியும் பலமும், உரிமையும், கடமையும் தங்களுக்கு உண்டு. அதை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை ஒளி இன்று எட்டு கோடி தமிழின மனங்களிலும் ஏற்றப்பட்டுள்ளது.

அந்த நம்பிக்கையுடன் இன்று விடைபெறுகிறேன்,

அன்புடன்,

1. தமிழக சட்டசபை உறுப்பினர்கள், அவர்களின் தொடர்பு கொள்ளும் வழிவகைகள் : List of Tamil Nadu MLAs

http://www.tamilnadumlas.com/index.asp

http://www.tamilnadumlas.com/ministers.asp

2. ராஜபக்ஷேவை இன அழிப்பு குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்ற வேண்டும் என்னும் தீர்மானத்தை தமிழக சட்டசபையில் கொண்டு வரவேண்டும் என முதன் முதலில் அழுத்தம் கொடுத்த CPI MLA தோழர் குணசேகரன் அவர்களுக்கு தயவு செய்து உங்கள் வாழ்த்துக்களை / நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுங்கள் . இந்த இணைப்பில் உள்ள அவர் இணைய தளத்தில் எழுதலாம் அல்லது இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் . கை பேசி எண்: 9443860999 .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.