Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு எதிரான போரில் சிறிலங்கா செய்த உதவிகள் - நன்றி கூறுகிறது பாகிஸ்தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ சனிக்கிழமை, 11 யூன் 2011, 01:40 GMT ] [ கார்வண்ணன் ]

1971இல் இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கு எல்லாவிதமான உதவிகளையும் வழங்கியதற்காக சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு சென்றுள்ள நிலையிலேயே பாகிஸ்தான் நன்றி கூறியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற சிறிலங்கா – பாகிஸ்தான் வர்த்தக சபையின் கூட்டத்தில் பேசிய போதே, சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் சீமா இலாகி பலோச் இவ்வாறு நன்றி கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் தூதுவர் இலாகி பலோச்,

“ நாங்கள் சிறிலங்காவை நம்புகிறோம். சிறிலங்கா தனது இறைமை விடயத்தில் விட்டுக் கொடுக்காமல் இருப்பதையிட்டு பெருமை கொள்கிறோம்.

எமது பிரதேசத்தில் நிலையான அமைதி ஏற்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்கிறோம்.

காஸ்மீர் விவகாரம் ஐ.நா பிரகடனங்களின் அடிப்படையிலும், அங்குள்ள மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலும் அமைதியாகத் தீர்க்கப்பட வேண்டும்.

1971இல் இந்தியாவுக்கு எதிரான போரின்போது சிறிலங்கா செய்த உதவிகளை ஒருபோதும் மறக்க முடியாது.

பாகிஸ்தானில் இருந்து எம்மால் விநியோகங்கள் மற்றும் அரசியல் உதவியை வழங்க முடியாத போது- சிறிலங்கா உதவ முன்வந்தது.

தனது எரிபொருள் நிரப்பும் வதிகளை எமக்காகத் திறந்து விட்டது.

சிறிலங்கா மக்களின் அமைதியான வாழ்வுக்கு உதவ பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

1971ம் ஆண்டு போரின் போது பாகிஸ்தானிய போர் விமானங்கள் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு சென்று கிழக்கு பாகிஸ்தானில் (இப்போதைய பங்களாதேஸ்) தாக்கதல்களை மேற்கொண்டன.

இந்தியாவுக்கு மேலாக பாகிஸ்தான் போர் விமானங்கள் பறக்க முடியாததால் தான் சிறிலங்காவை எரிபொருள் நிரப்பும் தளமாக பாகிஸ்தான் பயன்படுத்தியிருந்தது.

பாகிஸ்தான் விமானங்கள் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது, ஜேவிபி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து விமான நிலையத்தைப் பாதுகாக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்த இந்தியப் படையினரின் சிறிய பிரிவு ஒன்று அங்கே பாதுகாப்பு அளித்து வந்தது.

எரிபொருள் நிரப்ப பாகிஸ்தானுக்கு இடமளித்ததால் இந்திய- சிறிலங்கா உறவுகளில் கசப்பான நிலை ஏற்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் ஆயுதங்களை வழங்கி தனது கடனைத் தீர்த்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

புதினப் பலகை.

Edited by தமிழ் அரசு

இந்த செய்தியின் ஆங்கில மூலம். இதை பாதுகாப்பாக எடுத்து வைத்து, தேவையான இடங்களில் பின்னூட்டங்களுக்கும், முகநூல் இணைப்புக்களுக்கும் பயன்படுத்தலாம்.

Pak thanks Lanka for help in 1971 war

On a day India's top bureaucrats including the foreign secretary and national security advisor reached Colombo for a series of crucial bilateral meetings, Pakistan thanked Sri Lanka for all the help it provided Islamabad during the 1971 war against India. Further, Pakistan made it clear that the resolving the dispute over Kashmir was essential for peace in the region.

In her speech addressed to a Lanka-Pakistan business council in Colombo on Friday, Pakistani high commissioner, Seema Ilahi Baloch said that Saarc as a regional group could become more effective for economic development if "we resolve our political issues with India including the core issue of Jammu and Kashmir."

"We hope you appreciate that just as Sri Lanka has not compromised on its integral issues of sovereignty, nor can we. We understand that to attain durable peace in our region, the Kashmir dispute must be resolved by peaceful means in accordance with the UN resolutions and the wishes of the Kashmiri people," Baloch said.

http://www.hindustantimes.com/Pak-thanks-Lanka-for-help-in-1971-war/Article1-707988.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.