Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸிலிருந்து மகனைக் கடத்தி வந்தவருக்குப் பெரும் சிக்கல்

Featured Replies

வெளிநாட்டவரான முன்னாள் மனைவிக்குத் தெரியாமல் பிரான்ஸில் இருந்து தனது மகனை இலங்கைக்குக் கூட்டிவந்த தற்போது பிரெஞ்சு பிரஜையாக இருக்கும் இலங்கையர் தொடர்பான வழக்கொன்றில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகத்த மேன்றையீட்டு நீதிமன்றம் அந்த

மகனைத் தாயிடம் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது. மகன் பிரான்ஸுக்கு அனுப்பி வைக்கப்படும் வரை அவனைத் தந்தையார் இலங்கையை விட்டு வெளியே வேறு எங்குமே கூட்டிச் செல்லக் கூடாது என்றும் மேன்றையீட்டு நீதிமன்றம் பணித்திருக்கிறது.

பிரெஞ்சுப் பிரஜையாகிவிட்ட பிரஜித் றொசாயோ என்ற இலங்கையர் லிதுவேனிய நாட்டவரான கிறீஸ்டீனா என்ற பெண்மணியைத் திருமணம் செய்து இருவரும் பிரான்ஸில் வசித்து வந்தனர்.

இவர்களுக்கு 2002 அக்டோபர் 7 ஆம் திகதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தாம்பத்திய உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாகத் தம்பதியர் பிரெஞ்சு நீதிமன்றமொன்றை நாடியபோது மகன் தாயின் பராமப்பில் இருக்க வேண்டு மென்றும் பெற்றோர்கள் இருவருக்கும் குழந்தை மேல் சம உரித்து இருக்குமென்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனினும் றொசாயோ தாய்க்குத் தெரியாமல் மகனைக் கடத்தி இலங்கைக்குக் கொண்டு வந்தார். தாயார் இதுபற்றி பிரெஞ்சு நீதிமன்றத்துக்கு அறிவிக்கவே அந்த நீதிமன்றம் இலங்கை நீதியமைச்சின் செயலாளருக்கு தெரியப்படுத்தியது. நீதியமைச்சின் செயலாளர் 2001 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு குழந்தையை பிரான்ஸுக்கு திருப்பியனுப்ப வேண்டும் என்று கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாகக் கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மனுச் செய்தார்.

மேல் நீதிமன்ற நீதிபதி அந்த மனுவை நிராகத்தார். அந்த நிராகப்புக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் மேன் முறையீட்டு நீதிமன்றத்துக்கு மேன்றையீடு செய்தது.

பிரெஞ்சு ஆவணங்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு மன்றுக்குத் தரப்படவில்லை; தாய்க்கும் தந்தைக்கும் சம உரித்து இருப்பதாக பிரெஞ்சு நீதிமன்றம் விளம்பியிருப்பதால் தந்தை தனயனை இலங்கைக்குக் கூட்டிவந்ததில் தவறு ஏதுமில்லை; மேல் நீதிமன்றத்தில் தாயின் சார்பிலான விண்ணப்பம் றொசாயோ மகனை இலங்கைக்குக் கூட்டி வந்த ஒருவருட காலத்திற்குள் செய்யப்பட்டிருக்க வேண்டும்; இது காலந்தாழ்த்திய ஒரு விண்ணப்பமாக இருக்கிறது. குழந்தை தந்தையின் பராமப்பில் மன நிறைவோடு இருந்துவருவதாக உளவியல் நிபுணரான பேராசியர் ஹேமமாலி பெரேராவினால் மன்றுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையின் மூலம் தெந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

புகைப்பிடிக்கும் பழக்கம் உட்பட வேறும் சில நடவடிக்கைகள் காரணமாக குழந்தையைப் பராமக்கும் தகுதியைக் கொண்டவராக தாய் இல்லை என்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டே மேல்நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மனுவை நிராகத்தது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மனுவை விசாரணை செய்த மேன்றையீட்டு நீதிமன்றம் மேற்கூறப்பட்ட காரணங்களைப் பரீசீலனை செய்தது.நீதிபதிகள் சிசிர டி ஆப்ரூ, அனில் குணவர்தன ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணைகளின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டத் தரணிகளான நிர்மலன் விக்னேஸ்வரன், தீப்தி திலகவர்தன ஆகியோரும் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி றொமேஷ் டி சில்வாவுடன் ஹர்ஷா நாணயக்கார, ஷானக ரணசிங்க, சுகத் கல்தேரா, ரணில் சமரசூய ஷாகை கூரே ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.

மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகத்த மேன்றையீட்டு நீதிமன்றம் குழந்தையைத் தாயிடம் பிரான்ஸுக்கு அனுப்புமாறு கட்டளை பிறப்பித்தது. வழக்குச் செலவுகளையும் தாய்க்கு வழங்க உத்தரவிட்ட மேன்றையீட்டு நீதிமன்றம் குழந்தையைப் பிரான்ஸுக்கு அனுப்பும் வரை இலங்கையை விட்டு தந்தை வேறு எங்குமே கூட்டிச் செல்லலாகாது என்றும் பணித்தது.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.