Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பென்ரைவில் யுத்தக் காட்சிகளைச் சேமித்த வங்கி ஊழியர் இரு வருடங்களாகச் சிறையில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பென்ரைவில் யுத்தக் காட்சிகளைச் சேமித்த வங்கி ஊழியர் இரு வருடங்களாகச் சிறையில்!

news

இறுதிக்கட்ட யுத்தக் காட்சிகளை அரச இணையதளங்களில் பார்வையிட்டு, அதனை டவுன்லோட் செய்து பென் ரைவ்வில் போட்டுக்கொண்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் கைதுசெய்யப்பட்ட வங்கி ஊழியர் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு மேலாக மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தையை வசிப்பிடமாகக்கொண்ட யோகராசா சுதர்ஷன் என்ற தமிழ் அரசியல் கைதியின் கதை இது. இவரது வயது 28. (இவர் 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.)

யோகராசா சுதர்ஷன் வெள்ளவத்தையிலுள்ள வங்கிக் கிளை ஒன்றில் சேவையாற்றும் ஓர் ஊழியர். காலையில் வேலைக்கு சென்று வேலை முடிந்ததும் மாலை நெட்கபேக்கு செல்வது வழக்கம்.அங்கு செல்லும் அவர் இறுதிக்கட்ட சமர் காட்சிகளை அரச இணையதளங்களில் பார்வையிடுவது வழக்கம். என்ற இணையதள முகவரியின் ஊடாக அவர் யுத்தக்காட்சிகளைப் பார்த்துள்ளார். இவை இரண்டும் அரச இணையதளங்களாகும்.

காலம் செல்லச் செல்ல அவர் அந்த வீடியோக் காட்சிகளை டவுன்லோட் செய்து பென்ரை வில் போட்டுக்கொண்டு சென்று வீட்டில் போட்டு பார்வையிடு வதை வழக்கமாகக் கொண்டார்.அவ்வாறு ஒருநாள் நெட் கபே சென்று வீடியோக் காட்சிகளை டவுன்லோட் செய்து பென்ரைவில் போட்டுக்கொண்டு வீடு திரும்பும் வழியில் அவரை இராணுவத்தினர் கைதுசெய்தனர். அவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் இராணுவம் செவிசாய்க்கவில்லை. அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையையும் மேற்கொண்டனர்.

அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குப் படை யினர் திணறினர். எனினும், ஒரு மாதிரி தாக்கல் செய்துவிட்டனர். வழக்கு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன.கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி சுதர்ஷன் தனக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நீதிமன்றில் ஆஜரானார். எனினும், அவரது நம்பிக்கை வீணடிக்கப்பட்டுவிட்டது. அவரை ஒரு வருடத்துக்கு சிறை வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

எதிர்பார்ப்புகளுடன் வெளியே வந்த சுதர்ஷன் மீண்டும் சிறை வாசம் அனுபவிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது. அவர் தற்போது மன உளைச்சலுடன் காணப்படுகின்றார். அரச இணையதளத்தில் வீடியோ பார்த்த ஓர் வங்கி ஊழியருக்கு ஏன் இப்படி தண்டனை. தகவல் அறியும் உரிமை அவருக்கு இல்லையா? சுதர்ஷனின் குடும்பத்துக்கு யார் பதில் கூறுவது? குடும்பத்தை யார் கட்டிக்காப்பது என்றெல்லாம் நாம் இலங்கையர் அமைப்பு கேள்வி எழுப்புகின்றது.

05 ஜுலை 2011, செவ்வாய் 8:25 மு.ப

http://onlineuthayan.com/News_More.php?id=87683397305792023

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.