Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா தனது முடிவை மீளாய்வு செய்யுமாறு அவுஸ்திரேலியா கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Wednesday, 06 July 2011 06:07

ஐ.நா தனது முடிவை மீளாய்வு செய்யுமாறு அவுஸ்திரேலியா கோரிக்கை!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு விளைவிக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக ஆழமான ஆய்வு செய்யப்படவேண்டும் என அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் கெவின் றட் தெரிவித்துள்ளார்.

இதுவரைகாலமும் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் மௌனம் காத்துவந்த அந்நாட்டரசு அண்மையில் மீள்ஒளிபரப்பு செய்யப்பட்ட காணொளியை தொடர்ந்து இக்கருத்தை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் சபையினால் 2009 ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசின் போர்நடவடிக்கை பாராட்டப்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர் சிறிலங்கா அரசு சொல்லிவருகின்ற காரணங்கள் போதுமானவை அல்ல எனவும் மனிதஉரிமைகள் சபை இவ்விடயத்தை மீள ஆய்வு செய்து தமது முடிவை தெரிவிக்கவேண்டும் எனக் கேட்டுள்ளார்.

ருவிட்டர் எனப்படும் சமூக இணையத்திலும் தனது கருத்தை பதிவு செய்துள்ள அவர் ஏபிசி தொலைகாட்சியில் காண்பிக்கப்பட்ட காணொளி மனதை வருத்துவதாகவும் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் சிங்கள இனத்தை சேர்ந்தோர் அதிகம் வசித்துவருவதால் வேண்டும் என்றே அந்நாட்டரசு இவ்விடயத்தில் மௌனம் காத்துவருவதாக தமிழர் தரப்பில் பரவலாக குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi.com/news/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.