Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பான் கீ-மூனும் மன்மோகனும் எமக்கு ஏன் ஆலோசனைகளை வழங்க வேண்டும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Saturday, July 9, 2011, 11:37சிறீலங்கா

ஜனநாயகத்தை நிலை நாட்டவும் அவசரகாலச் சட்டத்தை நீக்கவும், வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தவும் பான் கீமூனும் மன்மோகன் சிங்கும் எமக்கு ஆலோசனை கூறவேண்டிய அவசியம் இல்லை. அவற்றை நாமே ஏன் செய்ய முடியாது? என்று கேள்வி எழுப்புகிறார் ஜே.வி.பி. உறுப்பினர் விஜித ஹேரத்.

நேற்று நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளையில், இலங்கையின் பொருளாதார விவகாரங்களில் இந்தியாவின் அழுத்தங்கள் என்ற தலைப்பில் பிரேரணை ஒன்றை விஜித ஹேரத் சபையில் முன்வைத்தார்.இந்தப் பிரேரணையை முன் மொழிந்து உரையாற்றிய விஜித ஹேரத் தொடர்ந்து கூறியவை வருமாறு:இலங்கை விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள தருஸ்மன் அறிக்கை குறித்து இந்தியா இதுவரை தனது கருத்தை வெளியிடவில்லை. ஆனால், இது தொடர்பாக ஆராய ஒரு குழு அமைப்பது என்றும், அந்தக் குழுவின் அறிக்கை பரிசீலனை செய்யப்பட்ட பின்னர் கருத்து வெளியிடப்படும் என்றும் மட்டுமே கூறியது இந்தியா. ஆனால், இன்றுவரை எதுவும் செய்ததாகத் தெரியவில்லை.

இந்தியா ஒரு நேச நாடு; நட்பு நாடு என்று நாம் கூறிக் கொண்டே இருக்கின்றோம். ஆனால், இந்தியா இது வரை எமது நாட்டுக்கு ஆதரவாக ஒரு சொல்லைத் தானும் கூறவில்லை. இந்த லட்சணத்தில்தான் இலங்கை இந்திய கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசமைப்பை மாற்றி அமைக்கவும், அவசரகாலச் சட்டத்தை நீக்கவும், மனித உரிமைகள் மீறல் தொடர்பாக விசாரணை நடத்தவும் நியமித்த தருஸ்மன் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கையும், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையும் இரு வேறு இடங்களில் இருந்து வெளிப்பட்டாலும், அவை இரண்டும் ஒரே மாதிரியானவைதான். எந்த வித்தியாசமும் இல்லை.

அரசமைப்பில் திருத்தம் செய்யவேண்டும்; அவசரகாலச் சட்டத்தை நீக்கவேண்டும்; வடக்கு, கிழக்கில் ஜனநாயகம் பாதுகாக்கப்படவேண்டும்; சிவில் நிர்வாகம் ஊர்ஜிதப்படுத்தப்படவேண்டும் என தருஸ்மன் அறிக்கையில் நேரடியாகக் கூறப்பட்டுள்ளது.

இதே கூற்றுத்தான் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மறைமுகமாக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை.உங்களுடைய ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதையேதான் தருஷ்மன் அறிக்கையும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் அரசமைப்பை திருத்தி அமைக்கவும் அவசரகாலச் சட்டத்தை நீக்கவும், சிவில் நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும் பான் கீமூனும் மன்மோகன் சிங்கும் கூறும்வரை நாம் காத்திருக்கவேண்டியதில்லை. இதை நாம் செய்யத் தவறியதாலேயே இன்று வெளிநாட்டவர்கள் தலையிடவேண்டிய நிலைமையை உருவாக்கிக் கொண்டோம். எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காணவேண்டும்.

http://www.tamilthai.com/?p=21313

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.