Jump to content

அடிப்படை வசதிகளுக்கே அவதியுறும் வன்னி மாணவர்கள்.


Recommended Posts

பதியப்பட்டது

08.07.2011 அன்று நேசக்கரம் தொடர்பாளர்கள் ஊடாக செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி தற்காலி முகாமிற்குள் வதியும் மாணவர்களில் ஒருபகுதியினருக்கான கற்கை உபகரணங்களை வழங்கியிருந்தோம்.

தொடர்புபட்ட செய்தியைப்பார்க்க இந்த இணைப்பில் அழுத்துங்கள்.

தரம் 5 , தரம் 11, தரம் 12,13ஆகிய வகுப்புகளில் கற்கும் 244மாணவர்களுக்கான உதவிகள் மட்டுமே வழங்கியிருந்தோம். ஆனால் இம்முகாமில் 2031 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 55ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். உயர்தர மாணவர்களுக்கான ஆசியர்கள் பற்றாக்குறை போன்ற பல அவசியத்தேவைகளை இவர்கள் இழந்து நிற்கிறார்கள்.
2.jpg
முகாமில் வதியும் குடும்ப மற்றும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை:-

மொத்த குடும்ப எண்ணிக்கை – 1827 (ஆண்கள் =2268, பெண்கள் =3153)
மாணவர்கள்: 5வயதிலிருந்து 10வயதுவரை = 837 (ஆண்கள்: 369, பெண்கள் : 468)
11வயதிலிருந்து 18வயதுவரை = 1194 (ஆண்கள்: 587, பெண்கள் : 607) மொத்த மாணவர்கள் எண்ணிக்கை : 2031.

இந்த மாணவர்களுக்கான அடிப்படைக் கல்விக்கான புத்தகம் கொப்பிகள் முதல் சீருடைகள் சப்பாத்துகள் வரை யாவும் தேவைப்படுகிறது. குடும்பங்களுக்கு எதுவித வருவாயும் இல்லாத தொடர்ந்த முகாம் வாழ்க்கை. பிள்ளைகளின் கல்வியைத் தொடர உதவ முடியாத நிலமையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

இந்தப்பிள்ளைகளின் உலகம் முகாம் மட்டுமே. அவ்வப்போது சில தேவைகள் நிமித்தம் வெளியில் சிலர் சென்று வருவது மட்டுமே வெளியுலகத் தொடர்பு. இது தவிர வேறெதுவும் தெரியாது இவர்களுக்கு. கிட்டத்தட்ட 2ஆண்டுகளுக்கு மேலாக இந்தச்சுற்றுக்குள் வாழ்வதில் அவர்கள் எதிர் நோக்குகிற பிரச்சனைகள் வெளியில் தெரிவதில்லை.

நாம் பெருமை கொள்ளும் கலாசார விழுமியங்கள் பண்பாடு எல்லாம் இங்கு இன்னொரு உலகத்தின் மாற்றங்களாகியிருக்கிறது. இலகுவாக பிள்ளைகள் இளவயதினர் தீய பழக்கங்களுக்கு ஆட்படுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.
3.jpg
யுத்தத்தின் பின்னரான மனரீதியான தாக்கங்கள் , உளநிலைப்பாதிப்புகள் , கண்முன் சந்தித்த உயிரிழப்புகள் , இரத்தம் சதைகளுக்கு நடுவிலான உயிர்காத்தலில் அடைந்த அதிர்ச்சி இம்மாணவர்களை இன்னும் அந்த நாட்களிலிருந்து விடுவிக்கவில்லை.

பல மாணவர்கள் அதிர்ச்சியால் மனப்பாதிப்புகளுக்கு ஆளாகி கல்வியில் கவனமின்மை பயம் ,தனிமை என தங்களுக்குள் ஒடுங்கியுள்ள நிலமையையும் அவதானிக்க முடிகிறது.

இந்தக் குழந்தைச் சமூகம் சரியான கல்வியைப் பெறாமல் சரியான உதவிகள் கிடைக்காது போகுமாயின் எங்கள் இனத்தின் இருப்பு இல்லாது போய்விடும். இந்தப் போரால் நலிந்த சந்ததியை நாம் தைகதூக்கிவிடாமால் அடுத்த கட்ட எதுவிதி பாதைக்கும் முன்னேற்றம் எட்டப்போவதில்லை.

எங்கள் குழந்தைகளுக்கு கல்விக்கு நல்ல ஆடைகளுக்கு நல்ல உணவுகளுக்காக எவ்வளவு செய்கிறோம். ஆனால் இந்தப்பிள்ளைகளையும் மிஞ்சிய உயிர்களையும் அவர்களது அடிப்படை வாழ்வாதாரத்தினையும் ஏன் இன்னும் அடைமானம் வைக்க முனைகிறோம்…?

ஒரு சிறந்த கல்விச்சமூகத்தை உருவாக்கி அதற்கான அத்திவாரத்தை உகந்த முறையில் போடாமல் வெளிநாடுகளில் இருந்து நாங்கள் முரண்பாடுகளை வளர்த்து துரோகிப்பட்டங்கள் வழங்கி எங்களுக்குள்ளேயே அழிந்து போகப்போகிறோம்.
6.jpg
இந்நாடுகளில் நாங்கள் வாழும் வரை பஞ்சமின்றி வாழ்ந்துவிடுவோம். ஆனால் எங்கள் கனவுகளுக்காக எல்லாவற்றையும் தாரைவார்த்துத் தந்துவிட்டு இன்று தனித்துப்போயிருக்கிற மண்ணின் குழந்தைகளுக்கும் அந்த மனிதர்களுக்கும் உதவுவது எங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். எங்கள் வீட்டுப்பிள்ளைக்கு ஊட்டுகிற உணவில் ஒருபகுதியை இந்தக் குழந்தைகளுக்காக இழப்போமா ?

விதைகளைச் சரியாக விதையிடாமல் வெறும் உணர்வு ரீதியான கதைகளால் இச்சமூகத்தைக் காப்பாற்ற முடியாது. தென்னிந்திய சினிமாபோல எங்களது மக்களின் வாழ்வை உணர்வு மேலீட்டால் மீட்க முடியாத யதார்த்த்தை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சப்பாத்துகள் அணிதல் நல்ல உடுப்புகள் அணிதல் எல்லாப்பிள்ளைகளும் விரும்புகிற விடயம். இப்பிள்ளைகள் செருப்பேயில்லாத கால்களுக்கு சப்பாத்து அணிய விரும்புகிறார்கள். நல்ல ஆடைகளை அணிய விரும்புகிறார்கள். தங்களை அழகாக படம்பிடிக்கமாறு ஆளாளுக்கு தள்ளுப்பட்டு படத்தில் முகம்காட்டுகிறார்கள். தங்களது இந்த விருப்பங்களை தங்களது எதிர்பார்ப்புகளை புலம்பெயர் தமிழர்களாகிய எங்களிடம் வேண்டுகிறார்கள்.

பசி பட்டினி ஒரு மனிதனின் எல்லா உணர்வுகளையும் போராடும் வலுவையும் அழித்துவிடுகிற தீ. உணர்ச்சி ரீதியாய் பார்க்காமல் யதார்த்தமாகப் பாருங்கள். ஒரு இனத்தின் சந்ததியின் வாழ்வு நூற்றாண்டுகள் கடந்தது. இதை உணர்ந்து கொள்ளுவோம்.

இப்பிள்ளைகளுக்கு மேலும் சீருடைகள் சப்பாத்துகள் வீட்டில் அணியும் ஆடைகள் என எம்மிடம் வேண்டுகிறார்கள். கருணையுள்ளம் படைத்தவர்களிடம் கையேந்துகிறோம். இவர்களுக்காக ஒவ்வொரு சட்டை ஒவ்வொரு சோடி சப்பாத்துகள் தாருங்கள். சிறுதுளி பெருவெள்ளம்.

தொடர்புகளுக்கு:-

Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

Shanthy Germany – 0049 6781 70723

Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Posted

இம்மாணவர்களிற்கான சப்பாத்துகள் சீருடைகள் வழங்க வேண்டியுள்ளது. உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள்.

Posted

இம்மாணவர்களில் முதற்கட்டமாக தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையுள்ள - 800 மாணவர்களுக்கு உடனடியான உதவ வேண்டியுள்ளது.

ஒரு மாணவருக்கான தேவை.

1. சப்பாத்து : 800.00/=ரூபா

2. சீருடை : 1700.00/=ரூபா

ஒருவருக்கான உதவி தொகை : 800.00/=+1700.00/ = 2500.00/=ரூபா

மொத்தமாக தேவைப்படும் தொகை 2500.00 x 800 = 2,000,000.00/= (அண்ணளவாக யூரோவில் 13000,00€.

இரண்டு மில்லியன் ரூபாய்கள் ஒரு பெரிய தொகைதான் முயற்சி எடுப்போம். வெற்றியடையலாம் என்ற நம்பிக்கையுடன் இச்செய்தியை புலம்பெயர் தமிழர்களிடம் எடுத்து வருகிறோம்.

முதற்கட்டமாக 200மாணவர்களுக்கான உதவியை செய்யலாமென முடிவெடுத்துள்ளோம்.

25000/= x 200 /= =500000/= (ஐந்துலட்சம் ரூபா)

அண்ணளவாக யூரோவில் 3250,00€

உதவ விரும்புவோரின் தொடர்புகளுக்கு :-

Nesakkaram e.V.

Hauptstrasse 210

55743 Idar-Oberstein

Germany

Telephone: +49 (0)6781 70723

nesakkaram@gmail.com

www.nesakkaram.org

Skype – Shanthyramesh

Skype – Srigowripal

  • 2 weeks later...
Posted

இத்திட்டத்தில் உதவி வேண்டும் 800மாணவர்களில் 10மாணவர்களுக்கான உதவியாக 25000ரூபாவினை டென்மார்க் திரு.தர்மகுலசிங்கம் , திருமதி.பவானி தர்மகுலசிங்கம் குடும்பத்தினர் வழங்க முன் வந்துள்ளனர்.

இன்னும் 790மாணவர்களுக்கான உதவிகள் வேண்டுகிறோம்.

  • 3 weeks later...
Posted

இம்மாணவர்களில் முதல் கட்டம் 100மாணவர்களுக்கான உதவிகளை வழங்க முடிவு செய்து மாணவர்களையும் தெரிவு செய்துள்ளோம்.

திரு.திருமதி.பவானி தர்மகுலசிங்கம் குடும்பத்தினர் 10 மாணவர்களுக்கு 25000ரூபா வழங்க முன் வந்துள்ளனர்.

90 மாணவர்களுக்கான 225000ரூபா உதவியினை உறவுகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.