Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகாரம்; பாரதீய ஜனதாவுடன் கரம் கோர்க்க தயாராகும் கம்யூனிஸ்ட் கட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விவகாரம்; பாரதீய ஜனதாவுடன் கரம் கோர்க்க தயாராகும்

கம்யூனிஸ்ட் கட்சி

இலங்கைக்கெதிராக ஐ.நா.வில் தீர்மானமொன்றை பிரேரிக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதற்கான கோரிக்கையை இந்தியப் பாராளுமன்றத்தில் விடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியும் கொள்கை ரீதியாக பரம எதிரியுமான பாரதீய ஜனதாவுடன் கரங்கோர்க்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த விவகாரத்தை தேசியமயப்படுத்துவதற்கு இதுவே தருணமாகும். தமிழக சட்டசபையில் ஏக மனதான இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தமிழக சட்டப் பேரவை உள்ளது. மாநிலத்தில் இந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்பு இல்லை. இந்த விடயத்தை தேசிய மட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பிரதிச் செயலாளர் சி.மகேந்திரன் திருச்சியில் நிருபர்கள் மத்தியில் கூறியுள்ளார்.

இந்த விடயத்தை எழுப்பும் போது பாரதீய ஜனதாவுடன் ஒத்துழைத்து கம்யூனிஸ்ட் கட்சி செயற்படும் எனவும் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவின் ஆதரவுடன் இந்த விவகாரம் தொடர்பான தீர்மானத்தை முன்தள்ளுவதற்கு பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கெதிரான தீர்மானத்தை முன்னகர்த்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் முன்வருமா என்ற கேள்விக்கு தமிழக சட்ட சபையில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசாங்கத்தால் புறக்கணிக்க முடியுமா. 7.5 கோடி மக்களின் உணர்வுகளின் விருப்பங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக தமிழக சட்டசபை உள்ளது என்று அவர் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் மக்களின் அபிப்பிராயத்திற்கு மதிப்பளிக்குமாறு மத்திய அரசாங்கத்தைத் தூண்டுவதற்கான ஜனநாயக வழிமுறைகளாக இவை இருக்கின்றன என நாம் கருதுகிறோம். தமிழ் மக்களின் உணர்வுகளை கௌரவிக்க மத்திய அரசு தவறுமானால், 1965 இல் நிலவிய இந்திய எதிர்ப்புப் போராட்டம் போன்றதொரு நிலைமை மீண்டும் வரும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

சனல்4 மற்றும் ஐ.நா.வில் கிடைத்த விடயங்களைத் திரையிடுவதன் மூலம் சகல கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்களின் ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திரட்டிக் கொள்ளுமென அவர் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பயங்கரவாதியாக தான் ஒப்பிட்டிருக்கவில்லையெனத் தெரிவித்த அவர் அது வேறுபட்ட விவாதம் எனக் கூறியுள்ளதாக எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை நேற்று சனிக்கிழமை குறிப்பிட்டுள்ளது.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=8454:

இந்திய ஊடகங்கள் குறைந்த பட்சம் இந்தியாவின் மீதுள்ள கறையை போக்கவாவது கொஞ்சம் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுமானால் இந்த பிரச்சினை இந்தியா முழுவதும் தீப் பிழம்பாக பற்றி எரியும்..... ஊடகங்கள் இந்திய சுயநல ஆட்சியாளர்களின் தாளத்திற்கு ஆடுமேயானால் இந்தியா எனும் பெயர் சர்வதேச அரங்கில் நாற்றமெடுப்பதை தவிர்க்க முடியாது போய்விடும்....இந்த விடயத்தில் சிங்கள விசுவாசி THE HINDU நாளிதழ் மட்டும் சிங்களத்தை காப்பாற்றவே முயற்சி செய்யும்.... இவ்விடயத்தில் ஊடகங்கள் ஆட்சியாளர்களின் வால் பிடிக்காமல் தங்கள் கடமையை செய்யுமானால் இன்றைய பயங்கரவாதி பிரபாகரன் இன மொழி பேதமின்றி ஒரு மாவீரனாகவே மானமுள்ள ஒவ்வொரு இந்தியன் மனதிலும் இருப்பார்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.