Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலாசார நாள்

Featured Replies

காலாசார நாள்

- பரதன் -

காலம்: 1985 ஆம் ஆண்டு ஆரம்பகாலம்…

ஸ்ரீலங்கா அரசுக்கெதிராக தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் மிகத் தீவிரமடைந்துகொண்டிருந்த காலம்.

இடம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்…

மாணவர்களுடன் பல்வேறு போராட்ட அமைப்புகளும், இயக்கங்களும் சந்திக்கும், விவாதிக்கும் அல்லது தர்க்கிக்கும் இடம் இது.

அப்பொழுது அங்கே கல்வி பயின்ற சில மாணவர்கள் இந்தப் போராட்டத்தை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டுசெல்வது? எவ்வாறு மக்களைப் போராட்டத்துடன் இணைப்பது? போராட்டத்தை எப்படி மக்கள் மயப்படுத்துவது? என்று சிந்தித்தார்கள்.

அதன் விளைவாக கலை இலக்கியங்களை பயன்படுத்தி மக்களிடம் போராட்டத்தை எடுத்துச்செல்ல முனைந்தார்கள்.

1985 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி யாழ் பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் 'கலாசார நாள்" என்ற ஒரு நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டது. இந் நிகழ்ச்சியில் 'மண் சுமந்த மேனியர்" என்ற நாடகம், 'இந்த மண்ணும் எங்கள் நாட்களும்" என்ற கவிதா நிகழ்வு, 'பாவெல்" என்ற குறும்படம் மற்றும் சில கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

மண் சுமந்த மேனியர் என்ற நாடகம், சாதாரண தமிழ் மக்கள் அரச பயங்கரவாதத்தால் எவ்வாறு துன்பங்களை அனுபவிக்கின்றனர், இதற்கு அவர்கள் என்ன செய்யலாம்

என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது.

இந்த மண்ணும் எங்கள் நாட்களும் என்பது இசையுடன் கூடிய பாடல்களும் உரைகளும் நடிப்பும் கொண்டதாக தாயக விடுதலையின் தேவையை வலியுறுத்தும் விதத்தில் நிகழ்த்தப்பட்டது. இது 'கவிதா நிகழ்வு" என்னும் புதிய கலை வடிவமாக அறிமுகமாகியது.

பாவெல் என்பது ஒரு பல்கலைக்கழக மாணவன் அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு எவ்வாறு ஒரு போராளியாகின்றான் என்பது குறித்த ஒரு குறும்படம். இதுதான் தமிழீழத்தின் முதற் குறும்படம்.

பெருமளவு மக்கள் நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர் பலருக்கு இடம் கிடைக்காத காரணத்தால் அடுத்த இரண்டு நாட்களும் மீண்டும் மீண்டும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதன் பின்னர் பலரது வேண்டுதலால் கிராமம் கிராமமாக நூறு தடவைக்குமேல் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நூறு பொதுக்கூட்டங்களைவிட நூறு கருத்தரங்குகளைவிட ஒரு கலைப்படைப்பு காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பது எல்லோராலும் உணரப்பட்டது.

இவற்றின் தொடர்ச்சியாக, தங்களது கருத்தை அல்லது தாங்கள் சொல்ல விரும்பும் செய்தியை வெளிப்படுத்த பலரும் கலைப்படைப்புக்களை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

கலை வடிவங்களின் வல்லமையை அதன் தாக்கத்தை சரியாக உணர்ந்தமையால் தமிழீழ விடுதலைப் புலிகளால் நிதர்சனம், புலிகளின் குரல், கலை பண்பாட்டுக் கழகம் என்பனவெல்லாம் உருவாக்கப்பட்டன. அவை ஆயுதப் போராட்டத்துக்கு மேலும் வலுச்சோர்த்தன.

காலம்: 2009 மேயின் பின்னர்…

இடம்: புலம்பெயர் தேசங்கள்…

இன்று ஆயுதப் போராட்டம் மௌனித்துவிட்டது. எம்மிடம் இருப்பதெல்லாம் கலை என்னும் ஆயுதம் மட்டுமே. அதனை நாம் உச்ச அளவில் பயன்படுத்தினால்தான் நாம் எமது இலக்கை நோக்கி பயணிக்கலாம். நாம் அவ்வாறு உச்ச அளவில் பயன்படுத்துகின்றோமா என்பது கேள்வி.

சில நல்ல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சில குறும் படங்கள் வந்துள்ளன. ஆயினும் இவற்றையெல்லாம் பரவலாக வெளிப்படுத்தவும், புதிதாக கலைப் படைப்புகளை உருவாக்கவும் நாங்கள் மிப் பெரிய அளவில் சிந்திக்கவேண்டும் என்பது எனது கருத்து.

நடன நிகழ்ச்சிகள் பல நடைபெறுகின்றன கண்ணன் குழலூதுவதை மீண்டும் மீண்டும் பார்க்கின்றோம். ஏன் இசைப் பிரியாவைப் பற்றிய ஒரு நடனத்தை எம்மால் நடத்த முடியவில்லை?

முள்ளிவாய்க்கால் அவலத்தை சனல் 4 மட்டும்தான் காட்டமுடியுமா? அதனை ஒரு நடனமாகவோ நாடகமாகவோ அல்லது ஒரு குறும் படமாகவோ எம்மால் காட்டமுடியும். ஆனால் நாம் முயற்சிப்பது குறைவு. இவ்வாறான படைப்புகளை தனி ஒருவரால் செய்வது முடியாது கூட்டு முயற்சி தேவை.

புலம்பெயர் மக்களின் பலம் பெரியது. புலம்பெயர் இளையோரின் பலம் அதனை விடப் பெரியது. நாங்கள் எல்லோரும் நினைத்தால் பல தரமான கலைப் படைப்புக்களை உருவாக்கலாம்.

1985 இல் கலாசார நாள் அமைப்பாளர்களிடம் இருந்ததெல்லாம் நிகழ்ச்சியை வெற்றிகரமாகச் நடாத்தி முடிக்கவேண்டும் என்ற மன உறுதி மட்டுமே, அவர்களிடம் பணமும் இல்லை பலமும் இல்லை. 1985 இல் அவர்கள் இருந்ததைப்போல் பல்லாயிரம் மடங்கு பலத்துடனும் வளத்துடனும் நாங்கள் இப்பொழுது இருக்கின்றோம். எங்களிடம் அறிவும் ஆற்றலும் உள்ள இளையோர் பலர் உள்ளனர், தொழில்நுட்ப வல்லுனர்கள் பலர் உள்ளனர், கலை அனுபவமும் ஆற்றலுமுள்ளவர்கள் பலர் இருக்கின்றனர், இவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு அனுசரனை வழங்கக்கூடிய பலர் இருக்கின்றனர்.

எங்களால் முடியும்! முயற்சித்தால்!!

இவ்வாறான படைப்புகளை தமிழில் மட்டுமல்லாது, மற்றைய மொழிகளிலோ, அல்லது மற்றய இன மக்கள் விளங்கிக்கொள்ளக் கூடியதாகவோ தயாரிப்பதும், மற்றய இனத்தவர் மத்தியில் காட்சிப்படுத்துவதும் முக்கியம்.

நாங்கள் என்ன செய்யப்போகின்றோம?

எங்களுக்கு கண்ணன் குழலூதுவது மட்டும் போதுமா?

அல்லது இசைப்பிரியா பற்றிய நடனமும் தேவையா?

நீங்களே முடிவுசெய்யுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.