Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் பிரசாரத்தில் இராணுவம் ஈடுபடுவது இதுவே முதல் முறை; நாடாளுமன்றில் ரணில் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பிரசாரத்தில் இராணுவம் ஈடுபடுவது இதுவே முதல் முறை; நாடாளுமன்றில் ரணில் தெரிவிப்பு

Friday, July 22, 2011, 10:24

சிறீலங்கா

இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் பேச்சுக்களில் வடக்குத் தேர்தல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இத் தேர்தலை சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இராணுவத்தை தேர்தலுக்குப் பயன்படுத்தக் கூடாது. தேர்தல் பணிகளில் இராணுவம் பயன்படுத்தப்படுவது இதுவே முதன்முறை இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை.இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுக் கோரிக்கை விடுத்தார்.

வடக்குத் தேர்தல் நிலைவரம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றில் விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்கள் உள்ளடங்கலாக இரண்டாவது கட்ட உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது.2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பைத் தோல்வியடையச் செய்தவுடன் பாதுகாப்பு நிலைமை சுமுக நிலையை அடையாத நிலையிலும் வடக்கில் சில பிரதேசங்களில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்றது.

அந்தத் தேர்தல் நடத்தப்பட்ட முறை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. ஆயுதம் ஏந்திய குழுக்கள் வெளிப்படையாக அச்சுறுத்தல் விடுத்தன. எதிர்க்கட்சி வேட்பாளர்களின் முறைப்பாடுகள் சம்பந்தமாக பொலிஸார் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிர்வாக சேவைகள் நேரடியாகத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருந்தன. ஆனால் தேர்தல் பிரசாரங்களில் பாதுகாப்புப் பிரிவு மாத்திரமே ஈடுபடுத்தப்படவில்லை. இவ்வாறான ஒரு கௌரவமான சூழலை பாதுகாத்தமைக்காக நான் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போதைய தேர்தல் ஒரு சுமுக நிலையிலேயே நடத்தப்படுகிறது. அதனால் இத் தேர்தலை முறையாக நடத்துவது தேர்தல் ஆணையாளரினதும் அவரது அலுவலக உத்தியோகத்தர்களினதும் மற்றும் பொலிஸாரினதும் பொறுப்பாகும். ஆயினும், கடந்த சில தினங்களாக இடம்பெற்றுவரும் தேர்தல் சட்ட திட்டங்களை மீறும் செயற்பாடுகள் தொடர்பாக அவதானிக்கும் பொழுது பொலிஸாரின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் இல்லை என்பது தெளிவான விடயமாகும். அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் அரச உடைமை துஷ்பிரயோகம் சம்பந்தமாகத் தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று வடக்கில் மாத்திரமின்றி தெற்கிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. அமைச்சர்களின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக செய்திகள் தினமும் ஊடகங்கள் மூலமும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.உழவு இயந்திரங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள், விவசாய உபகரணங்கள், தையல் இயந்திரங்கள், மீன்பிடி வலைகள் போன்ற உபகரணங்களை அமைச்சர்களும், அவர்களது உத்தியோகத்தர்களும் இலவசமாக வழங்குகின்றனர். இது தேர்தல் சட்டதிட்டத்தை மீறும் பெரும் செயலாகும். அதேபோன்று, இந்த உத்தியோகத்தர்கள் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கும் தடைகளை ஏற்படுத்துகின்றனர். எங்கள் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவருக்கும் யாழ்ப்பாணத்தில் வைத்து அரச உத்தியோகத்தர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரால் தடங்கல் ஏற்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தினர் எதிர்க்கட்சி வேட்பாளர்களின் சுவரொட்டிகளை நீக்கிவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களின் சுவரொட்டிகளை ஒட்டுவதாக நேற்றிரவு எனக்கு அறியக்கிடைத்தது. நான் முன்பு குறிப்பிட்டது போன்று முன்னொருபோதும் இராணுவம் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவில்லை.

எந்தவொரு முன்னாள் இராணுவத் தளபதிகளும் இதற்கு அனுமதி வழங்கவும் இல்லை. இது மிகவும் முன்னெச்சரிக்கையான ஒரு பிரவேசமாகும். இராணுவத்தை தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன்னர் இராணுவத் தரப்பு தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை. தற்போது இந்த நிலைமை மாறியுள்ளது. இதற்கும் மேலாக ஆயுதக் குழுக்களும் வெளிப்படையாகத் தமது வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. எதிர்க்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களையும், உறுப்பினர்களையும் அச்சுறுத்துவது, கற்களால் தாக்குவது போன்ற சம்பவங்கள் தினமும் பதிவாகின்றன. ஒரு வேட்பாளரின் வீட்டு வாசலில் மலர் வளையம் ஒன்றை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கொண்ட முறைப்பாடு சம்பந்தமாகவோ அல்லது நாடாளுமன்றத்தில் அவர் கூறிய விடயங்கள் சம்பந்தமாகவோ இதுவரை எதுவிதமான விசாரணையும் நடத்தப்படவில்லை.வேட்பாளர் ஒருவரின் செல்லப் பிராணியான நாயைக் கொலைசெய்து அதனது தலையை வெட்டி வீட்டு கேற்றில் கொழுவிவிட்ட சம்பவம் யாழ். நகரையே துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சைவக் கடவுளான வைரவரின் வாகனமாகக் கருதப்படுவது இதுவாகும். அதனால், எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழர் ஒருவர் இதனைச் செய்யமாட்டார் என்பது அநேகரது கருத்தாகும். அதனால் இந்தக் குற்றச்சாட்டு வேறு ஒரு குழுவினரையே சென்றடைகிறது.

கடந்த 18ஆம் திகதி சுன்னாகத்தில் நடந்த சம்பவம் தொடர்பிலும் எமது கவனம் திருப்பப்படவேண்டும். தேர்தல் பிரசாரம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்துக்குப் பலவந்தமாகச் சென்ற இராணுவம் இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்துவதற்கு இடம் தரமுடியாது எனக் கூறி அங்கிருந்த ஒலிபரப்பு உபகரணங்களை அகற்றியது. பிரசார நடவடிக்கைகளுக்காக இரவு 10 மணிவரையே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மை. ஆயினும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் கூட்டத்தை இடைநிறுத்தும் அதிகாரம் பொலிஸுக்கே அன்றி இராணுவத்துக்கு அல்ல.இந்தத் தேர்தல் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு கட்டத்திலே நடைபெறுகிறது. அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் பேச்சு நடத்திக்கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சுகள் மூலம் எட்டப்படும் முடிவுகளுக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சி ஆயத்தமாகவே உள்ளது. இலங்கையும், இந்தியாவும் வெளியிட்ட கூட்டறிக்கையில் 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை அடிப்படையாக் கொண்ட ஒரு அரசியல் தீர்வு வழிமுறை சம்பந்தமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோன்று, அரசியல் தீர்வொன்றைத் தயாரிப்பது சம்பந்தமாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைப்பது தொடர்பில் அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுகள் நடத்திக்கொண்டிருக்கிறது. இவைகள் அனைத்தினதும் வெற்றி வடக்கில் தேர்தல் நடத்தப்படும் வழிமுறையிலேயே தங்கியுள்ளது. முழு நாடும் எதிர்பார்க்கும் ஒரு தேர்தலாக இது மாறியுள்ளது. வடக்கில் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது மிக மிக முக்கியமாகும்.

அதனால் நான்

தேர்தலுக்கு முன்னர் எஞ்சியுள்ள ஓரிரு தினத்திலாவதுபலவந்தங்கள்,அசௌகரியங்கள் மேற்கொள்வதை தடுப்பதற்காக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

ஜூலை 23ஆம் திகதி சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

என்பதை பிரதமரிடம் அறிய விரும்புகிறேன் இப்படி ரணில் கேட்டுக்கொண்டார்.

http://www.tamilthai.com/?p=22426

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.