Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக நிதி சேகரிப்பதற்கான

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக நிதி சேகரிப்பதற்கான

25 ஜூலை 2011

Bookmark and Share

நடை பயணம் இன்று காலை யாழ்.நகரை சென்றடையவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக நிதி சேகரிப்பதற்கான

யாழ்ப்பாணத்தில் சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலையை நிர்மாணிக்கும் நடவடிக்கைக்காக நிதி சேகரிக்கும் பொருட்டு தென்னிலங்கை தேவேந்திரமுனையில் ஆரம்பமாகித் தொடர்ந்து கொண்டிருக்கும் நடை பயணம் இன்று காலை 9 மணிக்கு யாழ்.நகரை சென்றடையவுள்ளது.

நேற்றையதினம் கொடிகாமத்தில் தங்கிநின்ற இந்த நடை பயணக் குழுவினர் இன்று காலை தமது நடைபயணத்தைத் தொடங்கி யாழ். நகரை சென்றடையும்போது யாழ்.தாதியர் பயிற்சிக் கல்லூரியில் வைத்து அவர்கள் வரவேற்கப்பட உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நடைபயணம் தொடரும் வழியில் இந்தக் குழு வினரை பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அனைவரும் உற்சாகத்தோடு வரவேற்றுத் தம்மாலான நிதி உதவிகளை வழங்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுவரை சுமார் 600க்கும் மேற்பட்ட கிலோமீற்றர் தூரம் கடந்துவிட்ட நிலையில் இன்னும் சுமார் 60 கிலோமீற்றர் தூரத்தை 3 நாள்களில் நடந்து முடிக்கவிருக்கும் இந்தத் தொடரணியில் சுமார் 15 பேர் தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் சுமார் 300 பேர் வரையான பொதுமக்கள் நடைபயணத்தில் கலந்துகொள்கின்றனர்.

200 மில்லியன் ரூபாவை இலக்காகக் கொண்டு தொடரும் இந்த நடைபயணத்தின் மூலமாக இதுவரை சுமார் 127 மில்லியன் ரூபா நிதி பொதுமக்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.இன்று யாழ்.நகரை சென்றடையும் இந்தக் குழுவினர் நாளைய தினம் தமது நடைபயணத்தை ஆரம்பித்து வல்லை வரை தொடர்வர். நாளைமறுதினம் வடமராட்சி முனையை முற்பகலில் சென்றடைவர். அங்கு தமது நடைபயணத்தை நிறைவு செய்வர்.

அங்கு நடைபயணம் நிறைவுபெற்ற பின்னர், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெறும். இந்த இறுதிநாள் நிகழ்வில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர் என நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

குமார் சங்ககார, முத்தையா முரளிதரன், மஹேல ஜெயவர்த்தன, அஞ்சலோ மத்தியூஸ் ஆகிய பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். நிதி சேகரிப்பை உற்சாகப்படுத்தும் முகமாக இவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வர். இவர்களுடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மஞ்சு வன்னியராச்சியும் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.

சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு அரசாங்கத்திடம் இருந்து உரிய நிதி கிடைக்கும் என்பது கடினமானதொரு விடயமாகவே உள்ளது. எனவேதான் இந்த நடைபயணம் மூலம் அதற்கான நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது எனச் சந்திப்பில் கலந்துகொண்ட புற்றுநோய் வைத்திய நிபுணர் என்.ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ் ஸ்ரீபவானந்தராஜா, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், லீனியா அன்னுவாமாஸ், கோல்டிங்ஸ் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி சாந்த உமைபுவ, கலர் ஒப் கரேஞ் நிறுவனப் பணிப்பாளர் நாதன் சிவகணநாதன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64613/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.