Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு கிராண்ட்பாசில் வர்த்தகரைக் கடத்தி; பணத்தை கொள்ளையிட்ட காவற்துறை பரிசோதகர் கைது :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு கிராண்ட்பாசில் வர்த்தகரைக் கடத்தி; பணத்தை கொள்ளையிட்ட

26 ஜூலை 2011

காவற்துறை பரிசோதகர் கைது :

கொழும்பு கிராண்ட்பாசில் வர்த்தகரைக் கடத்தி; பணத்தை கொள்ளையிட்ட

கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று 35 லட்சம் ரூபாவை கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய காவற்துறையின் போக்குவரத்து பிரிவின் பிரதான காவற்துறை பரிசோதகர் ஒருவரை கொழும்பு கோட்டை காவற்துறையினர் நேற்று (25) கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு நகரில் இடம்பெற்ற பல பாரிய கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு தடுத்து, வைக்கப்பட்டுள்ள 4 இராணுவத்தினர் மற்றும் ஒரு காவற்துறை சிப்பாயிடம் நடத்திய விசாரணைகளின் போது, கிடைத்த தகவலை அடுத்து, இந்த காவற்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் 5 ஆம் திகதி இந்த காவற்துறை அதிகாரி தனது சீருடையில், கொள்ளை குழு ஒன்றுடன் சென்று, கிராண்ட்பாஸ் காவற்துறை நிலையத்திற்கு அருகில் உள்ள செல்வந்த வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு புகுந்து, வர்த்தகரை கடத்திச் சென்றுள்ளார். பின்னர், வர்;த்தகரிடம் இருந்த 35 லட்சம் ரூபா பணம் மற்றும் 500 அமெரிக்க டொலர்களை கொள்ளையிட்டு, வர்த்தகரை கைவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.

அதேவேளை கொழும்பு புறக்கோட்டையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி புகுந்த இராணுவ சீருடையை ஒத்த உடையை அணிந்திருந்த நபர்கள், அங்கிருந்த வர்த்தகரை கடத்திச் சென்றது, அவரை சீதுவ பிரதேசத்தில் கைவிட்டு, 70 லட்சம் ரூபாவை கொள்ளையிட்டு சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவற்துறையினர், கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 4 இராணுவத்தினரையும் ஒரு காவற்துறைச் சிப்பாயையும் சில தினங்களுக்கு முன்னர் கைதுசெய்தனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே பிரதான காவற்துறை பரிசோதகர் கைதுசெய்யப்பட்;டுள்ளார். இவர் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64659/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.