Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மஹிந்தவின் சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்மக்கள் தகர்த்து விட்டனர் - மாவை எம்.பி தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மஹிந்தவின் சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்மக்கள் தகர்த்து விட்டனர் - மாவை எம்.பி தெரிவிப்பு

[Tuesday, 2011-07-26 10:22:56]

நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியுள்ளார்கள். ஊர் மட்டத்தில் சாதாரணமாக நடைபெற்றிருக்க வேண்டிய இந்த உள்ளூராட்சித் தேர்தல் வடக்கிற்கு ஜனாதிபதியும், அவர் அமைச்சரவைப் பட்டாளமும் யாழ்ப்பாணத்தில் பல நாட்கள் தங்கியிருந்து தேர்தல் வெற்றிக்காக அனைத்து வளங்களையும் பாவித்ததிலிருந்து இத்தேர்தல் மிகப்பிரபலமாகவும் பரபரப்பாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மாறியிருந்தது.

இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2009ஆம் ஆண்டு போரில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று சிங்களமக்கள் இடத்திலே எழுச்சியையும் தமிழ் மக்களிடத்திலே ஒரு தோல்வி மனப்பாங்கையும் ஏற்படுத்தி வந்த ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அமைச்சரவையையும், படைபட்டாளங்களும் வடக்கே வந்து ஜனநாயக ரீதியாகவும் தமிழ் மக்களை தோற்கடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தனர்.

ஜனாதிபதியும் அவர் அமைச்சர்களும் தத்தம் அமைச்சுத்துறை அதிகாரிகளையும் உள்ளூர் அரச ஊழியர்களையும் தங்கள் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்களை அழைத்துவருமாறு நிர்ப்பந்தப்படுத்தினர். அரச ஊழியர்களும் அவ்வாறே மாதக்கணக்கிலும் தேர்தல் காலங்களிலும் வேலை செய்தனர். மக்களும் கூட்டங்களுக்கு வருவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். இராணுவ வீரர்களும் ஊர்ஊராக மக்களைக் கூட்டினர் பெரும் கூட்டங்கள் நடந்தன. பல நலத்திட்டங்கள், சலுகைகள், நிதி ஒதுக்கீடுகள், வேலைவாய்ப்புகள், தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு மாறாகவும் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராகவும் அக்கூட்டங்களில் அறிவிக்கப்பட்டன, உதவிகள் வழங்கப்பட்டன.

இதன்மூலம் தமிழ்மக்களின் வாக்குகளைப்பெற்று உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றலாம். அச்சபைகள் ஊடாகவும் அபிவிருத்தி அறிவிப்புகளுக்கு ஊடாகவும் தமிழ்மக்கள் அரசை ஆதரிக்க வைக்கலாம். அதன்மூலம் சர்வதேச சமூகம் அரசுமீது சுமத்தியுள்ள போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பதில்சொல்ல வைக்கலாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சர்வதேச சமூகமும் அரசியல் தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையை செயலிழக்கச் செய்யலாம் என்று ஜனாதிபதி எண்ணினார்.

மறுபக்கத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடித்து விடுவதற்கு வாக்களிக்கும் வீதத்தை வீழ்த்த வேண்டும் என்றும் வியூகம் வகுக்கப்பட்டிருந்தது. இதற்கு இராணுவத்தை தலையிடச்செய்து மக்களை அச்சுறுத்தி வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டன.

இச்செய்கையானது கிளிநொச்சி பிரதேசத்தில் தாராளமாக இடம்பெற்றதாய் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் மத்தியில் தமிழ்மக்கள் இத்தனை காலமும் எமது போராட்டங்களும் தியாகங்களும் வீண்போகாமல் இருக்கவேண்டும். அரசியல் தீர்வே வேண்டும். நாம் எமது வீடுகளுக்குச் செல்லவேண்டும். எங்கள் நிலத்திற்கும், கடலுக்கும் நாம் செல்லவேண்டும். எங்கள் நிலங்களில் ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்தை வெளியேற்றி எங்கள் நிலங்களை அரசு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். நாம் கேட்பது அதுவே எங்கள் இலக்கு வெறுமனே அபிவிருத்தி அறிவிப்புகள் அல்ல என்று தெளிவாகவே இத்தேர்தலில் மக்கள் வாக்களித்து தங்கள் திடசங்கற்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அந்தக் கொள்கை பற்றுள்ள இலட்சிய வேட்கையுள்ள அதன்மீது திடசங்கற்பம் கொண்டு வாக்களித்துள்ள தமிழ் பேசும் மக்களுக்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைவணங்கி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

மேலும் நேரடியாக தீவகத்து மக்களை நாம் சந்தித்து தேர்தல் வேலை செய்யாதிருந்தபோதும் தீவகப்பிரதேச சபைகளில் கணிசமான வாக்குகள் வீட்டுச்சின்னத்திற்கு வழங்கப்பட்டுள்ளமையை அவர்கள் இனப்பற்றையும் நன்றியுடன் மதிப்பிடுகின்றோம். அத்துடன் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகளுக்கும் எம் நன்றிகள் உரித்தாகட்டும்.

தமிழ் மக்களின் தீர்க்கமான திடசங்கற்பம் மிக்க 60 ஆண்டுகள் தொடர்ச்சியான போராட்டங்களையும் தியாகங்களையும் அரசும் ஜனாதிபதியும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்துகின்றோம். தமிழ் மக்களின் திடசங்கற்பம் மிக்க தொடர்ச்சியான போராட்டங்களையும், தியாகங்களையும் ஜனநாயக ரீதியான தேர்தலின் தீர்ப்புக்களையும் சர்வதேச சமூகமும் புரிந்துகொண்டு தமிழ் மக்களுக்கும் அரசுக்கும் உதவக் கூடிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றோம். இவ்வாறு மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=47170&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.