Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓட்டமாவடியில் மீட்கப்பட்ட சடலம்

Featured Replies

ஓட்டமாவடியில் மீட்கப்பட்ட சடலம்

இலங்கையில் கடந்த வருட முற்பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போன புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான பட்டானி ராசிக் என்பவரது சடலம் என நம்பப்படும் சடலமொன்று மட்டக்களப்பு ஓட்டமாவடி காவத்தைமுனையில் பொலிசாரால் இன்று வியாழக்கிழமை தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

55 வயதான இவர், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 11 ம் திகதி தொழில் நிமித்தம் புத்தளத்திலிருந்து பொலன்னறுவைக்கு சென்றிருந்ததாகவும், அதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல்கள் இல்லை என்றும் உறவினர்களினால் பொலிசில் புகார் செய்யப்பட்டிருந்தது.

மர்மமான முறையில் இவர் காணாமல் போன சம்பவம் புத்தளம் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இவரை கண்டு பிடித்து தருமாறு கோரி அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வந்தன.

சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட விசாரனையின் போது புத்தளம் வாசியொருவரும் காவத்தமுனை வாசியொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரிலேயே கட்டி முடிக்கப்பாடாதிருந்த வீடொன்றிற்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதனால் மரபணு பரிசோதனைக்கு உத்தரவிட்ட வாழைச்சேனை நீதிபதி ஏ.எம்.எம். ரியால், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/07/110728_pattaniraseek.shtml

  • தொடங்கியவர்

போரம் ஏசியாவின் உயர்மட்டக்குழு உறுப்பினரும், சிரிஎப் எனப்படும் சமூக நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளருமான பட்டானி ராசிக் காணாமல் போயுள்ளார்.

http://www.ndpfront.com/?p=1521

பட்டானி ராசிக்கைக் கண்டுபிடித்துத் தரும்படி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/64284/Default.aspx

Sri Lanka: Amnesty International Calls for Action on Disappearance of Pattani Razeekhttp://www.amnesty.org.au/news/comments/26316/

SRI LANKA: 500 Days since the disappearance of Mr. Pattani Razeek! Still no police investigation

http://www.humanrights.asia/news/forwarded-news/AHRC-FST-038-2011

  • தொடங்கியவர்

பட்டாணி ராசிக்கின் ஜனாஸா நல்லடக்கம்

கடத்தி கொலை செய்யப்பட்ட முன்னாள் கிராம உத்தியோகத்தரும் மனித உரிமை ஆர்வளருமான பட்டாணி ராசிக்கின் ஜனாஸா நல்லடக்கம் இன்று புதன்கிழமை மாலை புத்தளம், சமீரகமையில் இடம்பெற்றது.

இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், வட மேல் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.ஏ.எஹியா, ஏ.எச்.எம்.றியாஸ், என்.டி.எம்.தாஹிர், புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ், மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், புத்தளம் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர்கள், புத்தளம் மற்றும் அண்மித்த பிரதேசங்களை சேர்ந்த மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது புத்தளம் மாவட்ட ஜம்இயதுல் உலமா சபையின் தலைவர் அப்துல்லாஹ் மஃமூத் ஆலிம் முக்கிய உரையாற்றியதுடன் புத்தளம் மாவட்ட காதி நீதவான் நெய்னா புகாரி துஆப் பிராத்தனை மேற்கொண்டார்.

ஜனாஸா நல்லடக்கத்தினையடுத்து கலந்துகொண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன்போது, கடத்தலுடன் தொடர்புபட்டவர்களையும் துணையாய் நின்றவர்களையும் கைது செய்யுமாறும் கோசங்கள் எழுப்பினர்.

பட்டாணி ராசிக்கின் ஜனாஸா நல்லடக்கத்தை முன்னிட்டு புத்தளம், பாலாவி, மதுரங்குளி உள்ளிட்ட பல பிரதேசங்களில் இன்று புதன்கிழமை பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் வாகனங்களிலும் வீடுகளிலும் கடைகளிலும் வெள்ளை மற்றும் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

கடந்த வருடம் பெப்ரவரி 11ஆம் திகதி பொலனறுவை பிரதேசத்தில் காணாமல் போன பட்டாணி ராசிக்கின் சடலம் கடந்த வியாழக்கிழமை வாழைச்சேனை, காவத்தமுனை பிரதேசத்தில் தோண்டியெடுக்கப்பட்டது.

பிரேத பரிசோதனைகளையடுத்து  நேற்று செவ்வாய்க்கிழமை சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்தே ஜனாஸா இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

http://www.tamilmirror.lk/component/content/article/87---main/25776-2011-08-03-12-18-25.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.