Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4இன் புதிய காணொளி: சாட்சியங்களின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தினார் ஜொனாதன் மில்லர்

Featured Replies

சனல் 4இன் புதிய காணொளி: சாட்சியங்களின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தினார் ஜொனாதன் மில்லர்!

சனல் 4 தொலைக்காட்சி கடந்த வாரம் வெளியிட்டிருந்த புதிய காணொளியில் உள்ளடக்கப்பட்டிருந்த நேரடி சாட்சியங்களின் நம்பகத் தன்மையை அந்தப் பிரதிமையை ஆவணப்படுத்திய ஊடகவியலாளர் ஜொனாதன் மில்லர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தப் பிரதிமையில் இரு நேரடி சாட்சியங்களையும் ஊடகவியலாளர் ஜொனாதன மில்லர் செவ்வி கண்டிருந்தார். இந்நிலையில், அவர்களின் நம்பகத்தன்மை தொடர்பாக தமக்கு எவ்வித சந்தேகங்களும் இல்லை என என அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே லீடர் பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய பிரத்தியேகப் பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்திருப்பதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அவர் இச்செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'சாட்சியங்களிடமிருந்து பெறப்படும் விடயங்களின் உண்மைத் தன்மைகளை உறுதிப்படுத்தாமல் அக்குற்றச்சாட்டுகளை நாங்கள் வெளியிடுவதில்லை.</p>

<p>எமது சட்டத்தரணிகள் மற்றும் பிரித்தானியாவின் ஒழுங்கமைப்பு அதிகார சபையான பிரித்தானிய ஒலிபரப்பு ஒழுங்கமைப்பு பிரிவான ஒப்கொம் ஆகியவற்றினால் உறுதிப்படுத்தப்படாமல் இவற்றை நாங்கள் வெளியிடுவதில்லை.

நேரடி சாட்சியங்களின் நம்பகத் தன்மையை ஏனையவர்கள் தீர்மானிப்பது அவர்களைப் பொறுத்த விடயம். சாட்சியங்களின் நம்பகத் தன்மை குறித்து எனது ஆசிரியர்களும் நானும் அதிகளவுக்குத் திருப்தி அடைந்துள்ளோம்.

இந்த நேரடி சாட்சியங்களுடனும் நான் எவ்வாறு தொடர்பைக் கொண்டேன் என்பதை என்னால் வெளியிட முடியாது. அவர்களின் பாதுகாப்புக்கான அச்சத்தினாலேயே விபரத்தை வெளியிட முடியாது உள்ளது. அது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடலாம்.

அத்துடன், இந்தச் சாட்சியங்கள் தமது பாதுகாப்புக் குறித்து அச்சமடைந்துள்ளனர். அவர்களை இனங்காட்டாமல் இருப்பது குறித்து நாங்கள் இணங்கியுள்ளோம்' என ஜொனாதன் மில்லர் இச்செவ்வியில் தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={CA837101-C6AA-4A7D-9A33-4E7EF0BB2D8A}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.