Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் ஓய்வூதியம்

Featured Replies

இலங்கை தமிழர்க்கு ஓய்வூதியம்

தமிழகத்தின் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வீதம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

.

இதன் மூலம் 5500 இலங்கைத் தமிழர் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர்கள் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளார். எனவே தான், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்,அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சட்டமன்றப் பேரவையில் தீர்மானத்தினை முன்மொழிந்து நிறைவேற்றினார்கள்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனான சந்திப்பின் போதும், முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் விரைந்து தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குச் செல்வதற்கான வழிவகை காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் பேசினார்.

தமிழகத்திற்கு அகதிகளாக வந்து, இங்குள்ள முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களின் நலனிலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளார். எனவே தான், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதனை செயல்படுத்தும் வகையில் சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை, தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

ஜெயலலிதா விடுத்துள்ள இந்த உத்தரவின் மூலம் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கைத் தமிழர்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://www.maalaisudar.com/newsindex.php?id=36617%20&%20section=1

  • தொடங்கியவர்

இந்தியாவில் அகதி முகாம்களில் மக்களுடன் புலிகளும் உள்ளனர்' . - கோதாபய ராஜபக்ஷ

அகதிகளாகச் சென்ற இலங்கையர்கள் தங்கியிருக்கும் முகாம்களில் விடுதலைப் புலி உறுப்பினர்களும் இருப்பதாகப் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மனிதாபிமான நடவடிக்கை உண்மை நிலை ஆய்வுகள் ஜூலை 2006மே 2009 அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும் போதே கோதாபய ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வடக்கில் மோதல் பகுதியில் சிக்கியிருந்த மக்களின் எண்ணிக்கை பற்றி குறிப்பிடும் போதே பாதுகாப்புச் செயலாளர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

மோதல் காலத்தில் பெருந்தொகையான மக்கள் சட்டத்துக்கு முரணான வழியில் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றதால் வடக்கிலிருந்த மக்களின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்வது மிகவும் குழப்பமான இலக்காகும் என்று இதன்போது சுட்டிக்காட்டிய பாதுகாப்புச் செயலாளர் இங்கு மேலும் பேசுகையில்;

விடுதலைப் புலிப் போராளிகள் பெருமளவானோர் உட்பட சுமார் ஒரு இலட்சம் மக்கள் படகுகள் மூலம் இந்தியா சென்று முகாம்களில் வாழ்கின்றனர். எவ்வாறிருப்பினும் அவர்களை அடையாளம் காண்பதற்குப் போதுமான தகவல்கள் எம்மிடம் இல்லை.

அதேபோல், இந்தோனேசியா, கிறிஸ்மஸ் தீவுகள், அவுஸ்திரேலியா, கனடா போன்ற இடங்களிலும் அகதிகள் போல பெரும் எண்ணிக்கையிலானோர் வசிக்கின்றனர். அவர்களின் பெயர்கள் எமக்குத் தெரியாது. அத்துடன் அந்த நாடுகளும் இது பற்றிய தகவல்களை வெளியிடுவதில்லை' என்றார்.

http://www.thinakkural.com/news/all-news/india/8099-2011-08-02-02-16-18.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.