Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் நெடுந்துயரை முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

Featured Replies

தமிழ் மக்களின் நெடுந்துயரை முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

புனித ரம்ழான் நோன்பு காலத்தில் யாழ்ப்பாணத்து முஸ்லிம் சகோதரர்களுக்கு இக்கடிதத்தை எழுத வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் சிறுபான்மை இனங்கள் என்ற வகுதிக்குள் அடக்கப்பட்டிருந்தாலும் சிறுபான்மை மக்கள் உரிமையோடு வாழவேண்டும் என்பதற்காகப் போராடியவர்கள் தமிழர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதற்காக தமிழ் மக்கள் இழந்தவை ஏராளம் என்பதை முஸ்லிம் சகோதரர்கள் ஒருபோதும் மறுக்கமாட்டார்கள் என்று நம்புகின்றோம்.

தமிழ் மக்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக உரிமைப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்தமையால் முஸ்லிம் மக்கள் பேரினவாதத்தால் நசுக்கப்படாமல் தப்பித்துக்கொள்ள முடிந்தது என்ற உண்மையையும் முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றே எண்ணுகின்றோம்.

சிறுபான்மை இனங்களை, பேரினவாத சக்திகள் நசுக்கினாலும் பரவாயில்லையென்ற நினைப்போடு தமிழ் அரசியல் தலைமைகள் சிங்கள ஆட்சியாளர்களோடு இணைந்துகொண்டிருந்தால், முஸ்லிம்களின் இருப்பு என்பது கேள்விக்குறியாகியிருந்திருக்கும். தமிழரசியல் தலைமைகள் ஒருபோதும் அவ்வாறு நினைத்திலர். பெரும்பான்மை இனம் அனுபவிக்கின்ற அத்தனை உரிமைகளையும் சிறுபான்மை மக்கள் அனுபவிக்க வேண்டும் என மனதார விரும்பினர்.

அவர்களின் இந்த விருப்பில் முஸ்லிம் சகோதரர்கள் ஒருபோதும் பிரித்துப்பார்க்கப்படவில்லை. எனினும் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்ட காலத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஆட்சியாளர்களுடன் இணைந்து செயற்படலாயின.

தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து சிறுபான்மை இனத்தின் உரிமைக்காகப் போராட வேண்டியநேரத்தில், முஸ்லிம் அரசியல் தலைமைகள் பேரினவாத ஆட்சியாளர்களுடன் இணைந்துகொள்ள, தமிழினம் தனது போராட்டத்தை இறுக்கமாகவும் விரைவாகவும் மேற்கொள்ள முடியாத இக்கட்டான நிலையை சந்திக்க வேண்டியதாயிற்று.

உண்மையில் இலங்கையில் சிறுபான்மை இனங்களின் உரிமைப்போராட்டத்தில் தமிழ்-முஸ்லிம் இணைவு இல்லாமல் போனமை, இலங்கைத்தீவில் இன்றுவரை சிறுபான்மை இனம் உரிமைபெற முடியாமல் இருப்பதற்கான காரணங்களில் ஒன்றெனலாம்.

எதுவாயினும் இந்த நாட்டில் முஸ்லிம்மக்கள் தமிழ்மக்களுக்குரிய பதவி நிலைகளையும் தமதாக்கிக்கொண்டு உயர்பதவிகளில் இடம்பிடித்துக்கொள்வதற்கும், அதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை அரசு வழங்குவதற்கும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமே காரணமெனலாம்.

நிலைமை இதுவாக இருக்கும்போது, யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் சகோதரர்கள் யாழ்ப்பாண நிர்வாகங்களுக்கு எதிராகச் செயற்படுவதை பார்க்கும்போது அவர்கள் திட்டமிட்ட ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுவதுபோல தோன்றுகின்றது.

அண்மையில் யாழ்ப்பாண பிரதேச செயலருக்கு எதிராக முஸ்லிம் சகோதரர்கள் செயற்பட்டது மட்டுமன்றி, அதனை ஊடகங்கள் மூலமாக பரப்புரையும் செய்திருந்தனர்.

இத்தகைய சம்பவங்கள் யாழ்ப்பாண மக்களை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் மக்கள் நெடுந்துயரில் வீழ்ந்துள்ளபோது, யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லிம் சகோதரர்கள் தமிழ் நிர்வாகங்களுக்கு எதிராகச் செயற்படுவதை முற்றாகத் தவிர்ப்பதும் நிர்வாக விடயங்கள் தொடர்பில் சுமுகமாக தீர்வு காண்பதுமே சிறந்ததாகும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=21184

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.