Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மாலைதீவு கடல் ஒப்பந்தமும் விளைவுகளும்

Featured Replies

மாலைதீவுடன் இலங்கை ஒப்பந்தம்

இலங்கை புதிய கடல் மார்க்க உடன்படிக்கையொன்ற மாலைதீவுடன் செய்துகொண்டுள்ளது.

இலங்கை மீனவர்கள் அரபிக் கடல் பகுதிக்கு தொழிலுக்குச் செல்வதற்கு வசதியாக மாலைதீவு கடற்பரப்பூடாக பயணிப்பதற்கு அனுமதியளிக்கும் விதத்தில் இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறைக்கான துணை அமைச்சர் நியோமால் பெரேரா பிபிசிக்குத் தெரிவித்தார்.

வழமையில் மாலைதீவு கடற்பரப்பை தவிர்த்து, அந்நாட்டு எல்லையைச் சுற்றிக் கடந்து இந்தியாவுக்கு மேற்காக சென்றே அரபிக்கடலை அடைய வேண்டியிருப்பதால், இலங்கை மீனவர்கள் எரிபொருள் செலவு, காலவிரயம் மற்றும் இயற்கை ஆபத்துக்கள் என பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.

ஆனால் இனிமேல், மீனவர்கள் 48 மணிநேரத்துக்கு முன்பதாக, மாலைதீவிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு ஃபெக்ஸ் மூலமாக அறிவித்து விட்டு பயணிப்பதன் மூலம் மாலைதீவு கடலூடாகவே சிரமமின்றி பயணிப்பதற்கு ஏற்பாடு செய்துகொடுக்கப்படும் என அண்மையில் மாலைதீவு சென்று உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு வந்துள்ள துணை வெளியுறவு அமைச்சர் நியோமால் பெரேரா கூறினார்.

மீனவர்களின் குடும்பத்தினர் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சுக்கும் மாலைதீவிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கும் ஃபெக்ஸ் மூலமாக அறிவிக்க முடியும் என்றும். அவ்வாறே, யூஎச்எஃப் ரேடியோ தொடர்பாடல் கருவி மூலம் மீனவர்களும் கடலில் இருந்தபடி, இலங்கைத் தூதரகத்துடனும் அமைச்சுடனும் பேசி பயணத்தை உறுதி செய்துகொள்ளவும் முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால், அரபிக் கடல்நோக்கி செல்லும் போதோ அங்கிருந்துவரும் போதோ மாலைதீவு கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க அனுமதியில்லை என்ற நிபந்தனையும் இந்த உடன்படிக்கையில் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இன்னும் சில பொருளாதார மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு உடன்படிக்கைகளும் மாலைதீவுடன் செய்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் பிபிசியிடம் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/08/110806_lankamaldives.shtml

  • தொடங்கியவர்

இலங்கையுடனான கடல்சார் ஒப்பந்தத்திற்கு மாலைதீவு எம்.பி. எதிர்ப்பு

இலங்கை மீனவர்கள் மாலைத்தீவு கடற்பரப்பிற்கூடாக அரபுக் கடலுக்குப் பயணம் செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் இலங்கை - மாலைதீவுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கைக்கு எதிராக மாலைதீவு நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற  உறுப்பினர் மொஹமட் முஸ்தபா கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் மாலைதீவு கடலில் உள்ள மீன்களை திருடுவதற்கு வாய்ப்பளிக்கும் என முஸ்தபா கூறியுள்ளார். இவர் ஆளும் மாலைதீவு ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தீர்மானத்தை மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அஹ்மட் நஸீமிற்கு எஸ்.எம்.எஸ். மூலம் அறிவித்துள்ளாதாகவும் முஸ்தபா எம்.பி கூறியுள்ளார். மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் நஸீம், அந்நாட்டு ஜனாதிபதி மொஹமட் நஷீட்டுடன் தற்போது சீசெல்ஷுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/25975-2011-08-07-17-58-02.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.