Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்: கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு தீர்மானம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்: கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு தீர்மானம்!

[Monday, 2011-08-08 11:06:07]

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு,கிழக்குப் பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்தியாவின் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் முடிவக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு ஒன்றை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு உருப்படியான நகர்வையும் மேற்கொள்ளவில்லை என்று இந்தக் கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போர் முடிவடைந்த பின்னர் அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அதனை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் வடக்கு,கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதன் மூலமே தமிழ்மக்கள் கௌரவமாகவும், சமஉரிமையுடனும் ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் வாழ முடியும் என்றும் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும், போரின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து உயர்மட்ட விசாரணைகளை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் தீர்வுத் திட்டம் ஒன்றை தாமதம் இன்றி நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த இந்திய மத்திய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=47922&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இதனை உங்களின் கம்முனிச நாடான சீனாவிடம் கூறியிருந்தால் அவர்கள் இப்போது சீனாவில் நிற்கும் மஹிந்தரிடம் கூறியிருப்பார்கள்.அதன் மூலம் ஈழத்தமிழருக்கு நன்மை கிட்டியிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.