Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் சிறிலங்காப் படையினருக்கு எதிராக பொதுமக்கள் போர்க்கொடி - கோத்தாபய கடும் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் சிறிலங்காப் படையினருக்கு எதிராக பொதுமக்கள் போர்க்கொடி - கோத்தாபய கடும் எச்சரிக்கை [ சனிக்கிழமை, 13 ஓகஸ்ட் 2011, 03:08 GMT ] [ கார்வண்ணன் ] STF.jpgகிழக்கில் சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படையினருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் குதித்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை கையில் எடுத்துக் கொள்ளும் பொதுமக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது நேற்று பொத்துவிலில் சிறிலங்கா காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு நேற்றிரவு 8 மணிக்கு ஊரடங்குச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இன்று காலை 6 மணிவரை ஊடரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று சிறிலங்கா காவல்துறையினர் நேற்றிரவு அறிவித்திருந்தனர்.

ஊறணிப் பகுதியில் யானைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளை கிறிஸ் பூதங்கள் என்ற தவறான நினைத்துக் கொண்ட கிராமமக்கள் தாக்கியுள்ளனர்.

கிராம மக்களிடம் சிக்கிக் கொண்டவர்களை சிறிலங்கா படையினரும், காவல்துறையினரும் படைபலத்தை பிரயோகித்தே மீட்டெடுத்தனர். இந்தச் சம்பவத்தில் சிறிலங்காப் படையினர் மூவர் காயமடைந்தனர்.

இந்தநிலையில் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்களைத் தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 6 பேரை விடுவிக்கக் கோரி பொத்துவில் நகரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா காவல்துறையினரும், படையினரும் கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதலை நடத்தினர்.

இதையடுத்து சிறிலங்காப் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். கொல்லபட்டவர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டவராவார்.

காத்தான்குடியிலும் பதற்றம்

மட்டக்களப்பு காத்தான்குடியிலும் இன்று காலை தொடக்கம் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மர்ம மனிதன் விவகாரத்தினால், சிறிலங்கா காவல்துறையினருக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் ரயர்களை எரித்து போராட்டம் ஒன்றை நடத்தினர்.

kathankudy%20tens.jpg

இதையடுத்து பொல்லுகள் சகிதம் அங்கு சென்ற சிறிலங்கா படையினர் பொதுமக்களை தாக்கியுள்ளனர். இதனால் காத்தான்குடியிலும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

சம்மாந்துறையில்

சம்மாந்துறையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் சந்தேகநபர்கள் சிலரை கைது செய்யச் சென்ற சிறிலங்கா காவல்துறையினரை பொதுமக்கள் சுற்றிவளைத்து தாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் சம்மாந்துறை காவல்நிலையப் பொறுப்பதிகாரி உட்பட 4 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.

புதிய வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் நடமாடிய மர்ம மனிதர்களைத் தாக்கியவர்களைக் கைது செய்யச் சென்ற போதே சிறிலங்கா காவல்துறையினர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பின்னர் அங்கு சிறப்பு அதிரடிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருக்கோவிலில்

விநாயகபுரத்தில் மர்மமனிதர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இருவரை திருக்கோவில் காவல்துறையினர் கொண்டு சென்றனர்.

அவர்களைத் தம்மிடம் ஒப்படைக்கக் கோரி திருக்கோவில் காவல் நிலையத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

பொதுமக்களை கலைக்க சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டனர். இதனால் இரு பொதுமக்கள் காயமடைந்தனர்.

மர்ம மனிதர்களின் பின்னணியில் சிறிலங்கா படையினர்?

பொத்துவில் பாக்கியவத்தை பகுதியில் உள்ள சில வீடுகளை நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் மர்மனிதர்கள் தட்டியுள்ளனர்.

இதனையடுத்து பிரதேச மக்கள் இரண்டு மர்ம மனிதர்களைத் துரத்தி சென்ற போது மேலும் இரண்டு மர்ம மனிதர்கள் இவர்களுடன் இணைந்து ஓடியுள்ளனர். நான்கு மர்ம மனிதர்களும் அங்கிருந்த பாழடைந்த வீடொன்றுக்குள் புகுந்து விட்டனர்.

01.jpg

பின்னர் அந்த வீட்டுக்குள் பொதுமக்கள் சென்றபோது அவர்கள் தப்பிவிட்டனர். அங்கிருந்து சிறிலங்கா காவல்துறையினரின் தொப்பிகள், காலணிகள், அடையாள அட்டை, மற்றும் கடவுச்சீட்டு நிழற்படப்பிரதிகள், உடைகள், வாக்காளர் பட்டியல், சிங்களத்தில் எழுதப்பட்ட கோப்புகள், கத்தி போன்றவற்றை பொதுமக்கள் கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து அங்கு சென்ற சிறிலங்கா காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டதுடன், காவல்துறையினரின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.

சிறிலங்கா படையினரை விலக்குமாறு ஹக்கீம் அழுத்தம்

இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் சீனாவில் உள்ள சிறிலங்கா அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்துள்ளார்.

உடனடியாக அங்கிருந்து சிறிலங்காப் படையினரை விலக்கிக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, காவல்துறை மா அதிபருடனும் அவர் பேசியுள்ளார்.

இதன்போது அவர் சிறிலங்கா படையினரை அகற்றி விட்டு சிறப்பு அதிரடிப்படையினரை நிறுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.

இன்று காலை சீனாவில் இருந்து திரும்பவுள்ள சிறிலங்கா அதிபரை கட்டுநாயக்க விமானநிலையத்தில் சந்தித்து இதுபற்றி பேசவுள்ளதாக கூறியுள்ள ரவூப் ஹக்கீம், அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பொத்துவில் செல்லவுள்ளார்.

இதனிடையே பொத்துவில் பகுதி சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு படையினருக்கு உதவ காவல்துறைக் குழுக்கள் பல அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கில் பரவலாக மர்ம மனிதர்கள் பற்றிய பீதி அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில் சிறிலங்கா படையினரே இருப்பதாக பொதுமக்கள் சந்தேகிப்பதுடன், சிறிலங்காப் படையினரும், காவல்துறையினரும் அவர்களைப் பாதுகாப்பதாகவும் கருதுகின்றனர்.

மர்மமனிதர்களை பாதுகாக்கும் சிறிலங்கா படையினர் அவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிழக்கிலுள்ள மக்கள் சீற்றமடைந்துள்ளனர்.

கோத்தாபய கடும் எச்சரிக்கை

சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் படையினருக்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டம் ஒழுங்கை கையில் எடுத்துக் கொள்பவர்கள் மீதும், காவல் நிலையங்களைத் தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன் சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் படையினர் மீது நம்பிக்கை வைக்குமாறும் அவர் கூறியுள்ளார்.

மலையகத்தில் இரு தமிழர்கள் அடித்துக்கொலை

இதற்கிடையே மலையகத்தில் கிறிஸ் பூதங்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு அப்பாவித் தமிழர்கள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹற்றன் தொட்டலகம தோட்டத்தின் ஊடாக பயணம் செய்து கொண்டிருந்த போதே வியாழக்கிமை இவர்கள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

சோமசுந்தரம் மகேந்தரன் (29), சில்வெஸ்ரர் ஜொனி பீற்றர் (35) ஆகியோரே கொல்லப்பட்டவர்களாவர்.

இதையடுத்து தமக்கு பாதுகாப்பு அளிக்குமாறு அங்குள்ள தோட்டத் தொழிலாளர்கள் கோரியுள்ளனர். அங்கு 50 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படையணி ஒன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குடியியல் நிர்வாகப் பணிகளில் இருந்து முப்படையினர் நீக்கம்

இதற்கிடையே குடியியல் நிர்வாகப் பணிகளில் இருந்து முப்படையினரும் விரைவில் விலக்கிக் கொள்ளப்படவுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு பணிகளில் எதிர்காலத்தில் சிறிலங்கா காவல்துறையினரே ஈடுபடுத்தப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.puthinapp...?20110813104471

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் கொலைக்களம் ஒன்று உருவாக்க கோத்தா திட்டம் தீட்டிவிட்டார் கிழக்கில் உள்ள தமிழ் உறவுகளே கவனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.