Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியா சென்று கே.பி.யை பிடிக்க முடியுமானால் ஏன் மர்ம மனிதர்களை பிடிக்க முடியாது?பொது மக்களின் கவனத்தை திசைதிருப்பவே இவ் மாயா ஜால வித்தை என்கிறார் சோமவன்ச அமரசிங்க.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியா சென்று கே.பி.யை பிடிக்க முடியுமானால் ஏன் மர்ம மனிதர்களை பிடிக்க முடியாது?பொது மக்களின் கவனத்தை திசைதிருப்பவே இவ் மாயா ஜால வித்தை என்கிறார் சோமவன்ச அமரசிங்க.

[saturday, 2011-08-13 11:01:55]

somavansa%20jvp%2019.jpg

மலேசியாவிற்கு சென்று கே.பியை பிடித்து வர முடியுமென்றால் உள்ளூரில் நடமாடும் மர்ம மனிதர்களை அரசாங்கத்தால் பிடிக்க முடியாதா? என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கையில் உக்கிரமடைந்து வரும் பல்துறை சார் பிரச்சினைகளை மூடி மறைக்கவும் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பவும் மர்ம மனிதர்களை அரசாங்கம் கைது செய்யாது உலாவ விடுகின்றது என்று குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது..

தற்போது நாட்டில் பல பிரதேசங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்படுகின்றது. இதனால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். பொலிஸார் கைது செய்யும் நபர்களை விட்டு விடுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது. எவ்வாறாயினும் இரவு நேரங்களில் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடமாடும் கிறீஸ் மற்றும் மர்ம மனிதர்கள் தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை.

ஏனென்றால் அரசாங்கம் தமது அதிகாரத்தையும் படை பலத்தையும் மிகவும் வெளிப்படையாக பிரயோகித்து புலிகளின் தலைவர்களில் ஒருவரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை மலேசியாவில் வைத்து கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்தது.

அதே போன்று உள்ளூரில் பல மோசடிக்காரர்களையும் பாதாளக் குழுத் தலைவர்களையும் கைது செய்து சிறையில் இட்டது.

இவ்வாறான வீரதந்திர செயல்களில் ஈடுபட்ட அரசாங்கத்திற்கு உள்ளூரில் நடமாடும் மர்ம மனிதர்களின் பிரச்சினைகளுக்கு முடிவுகாண முடியவில்லை என்றால் வேடிக்கையாகவே உள்ளது.

எனவே அரசாங்கம் உள்நாட்டில் உக்கிரம் அடைந்துவரும் இன்னோரன்ன பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை. சர்வதேச ரீதியிலான மனித உமை மீறல் தொடர்பான அழுத்தங்கள் மேலோங்கியுள்ளன. மேலும் ஊழல் மோசடிகள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன.

பொது மக்கள் அரசாங்கத்தை வெறுக்கும் நிலையில் உள்ளார்கள். ஆகவே தான் அரசாங்கம் மறுபடியும் பொது மக்களின் கவனத்தை திசைதிருப்ப மாயைகளை உலாவ விடுகின்றது.

மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களிலும் திட்டமிட்டு உலாவும் மர்ம மனிதர்களை கைது செய்ய முடியவில்லை என்றால் நாட்டிற்கு பொலிஸ் எதற்கு? பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கமும் பொலிஸாரும் தவறிழைத்துள்ளனர் என்றார்.

http://www.seithy.co...&language=tamil

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.