Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் நேற்று கொட்டித் தீர்த்தது மழை கூடாரங்களில் வசிக்கும் மக்கள் பேரவலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் நேற்று கொட்டித் தீர்த்தது மழை கூடாரங்களில் வசிக்கும் மக்கள் பேரவலம்

  • Monday, August 15, 2011, 10:27

கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் நேற்று கடும் மழை கொட்டித் தீர்த்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். கிளிநொச்சியில் சில பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பித்த மழை சுமார் 3 மணி நேரம் தொடர்ச்சியாகப் பெய்ததாகவும் சில இடங்களில் மழையுடன் பனிக்கட்டிகளும் வீழ்ந்தன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியில் பெய்த மழையால் தறப்பாள் கூடாரங்களில் வாழ்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். இராமநாதன் குடியிருப்பு, பரந்தன், சிவபுரம், மலையாளபுரம், பொன்நகர், பன்னங்கண்டி, சாந்தபுரம், மாயவனூர் போன்ற கிராமங்களில் மக்களில் பலர் தறப்பாள், தகரக் கொட்டகைகளிலேயே வாழ்ந்து வருகிறார்கள் இவர்களுக்கு இன்னும் வீட்டுத் திட்டங்கள் எவையுமே வழங்கப்படவில்லை. இவர்கள் வீடு அமைத்துள்ள தறப்பாள்கள் உக்கிக் கிழிந்த நிலையில் காணப் படுகின்றன.

நேற்றைய மழையால் அந்த மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்தனர். வீடுகளுக்குள் மழை நீர் ஒரேடியாகக் கொட்டியது அவர்கள் கிழிந்த தறப்பாள்களை விரித்துக் கட்டுவதிலும் தமது சிறுபிள்ளைகள் நனைந்து விடாமல் தடுப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சி கைகூடவில்லை. வீடுகளினுள் வெள்ளம் தேங்கி நின்றது. குழந்தைகள் நடுங்கியவாறு கதறினர்.உணவுப் பொருள்கள் உடைகள் உட்பட அனைத்துமே நனைந்து விட்டன. தமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்று அவர்கள் அங்கலாய்த்தனர்.

இனி வரப்போகும் மாரி காலத்தில் தங்களின் நிலைமை குறித்து அதிகாரிகள் கவனம் எடுப்பார்களா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.இது இவ்வாறிருக்க நேற்று அக்கராயன், முறிப்பு, நஞ்சுண்டகாடு, அம்பலப்பெருமாள் குளம் போன்ற பகுதிகளில் பனிக் கட்டி மழை பெய்ததாக மக்கள் தெரிவித்தனர்.

http://www.tamilthai.com/?p=24245

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.