Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினக்குரல் பிரதம ஆசிரியர் உதவி ஆசிரியர்கள் தினக்குரல் அலுவலகத்திற்குள் பிரவேசிக்க தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தினக்குரல் பிரதம ஆசிரியர் உதவி ஆசிரியர்கள் தினக்குரல் அலுவலகத்திற்குள் பிரவேசிக்க தடை!

Published on September 12, 2011-1:04 pm ·

தினக்குரல் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம் உட்பட செய்தி ஆசிரியர், உதவி ஆசிரியர்கள், உட்பட 25க்கும் மேற்பட்ட ஆசிரிய பீட உறுப்பினர்களையும் நாளை மறுதினம் செப்;டம்பர் 14ஆம் திகதியிலிருந்து தினக்குரல் நிறுவனத்திற்குள் பிரவேசிக்க முடியாது என தினக்குரல் வெளியீட்டு நிறுவனத்தை வாங்கி வீரகேசரி நிறுவனம் தற்போது உருவாக்கியிருக்கும் ஏசியன் மீடியா பப்ளிகேசன் நிறுவனம் அறிவித்துள்ளது.

தினக்குரல் பப்ளிகேசன் நிறுவனத்தை வாங்கிய வீரகேசரி நிறுவனம் தினக்குரல் பத்திரிகையை யூன் 30ஆம் திகதியிலிருந்து நடத்தி வருகிறது. இதேவேளை தினக்குரல் பப்ளிகேசன் நிறுவனத்திலிருந்து தாம் பதவி விலகுவதாக கடிதங்களை தருமாறு தினக்குரல் நிறுவனத்தை நடத்தி வந்த சாமியும் அவரது மகன் கேசவராசாவும் ஊழியர்களை கட்டாயப்படுத்தி வந்தனர்.

தினக்குரலின் ஏனைய பிரிவு ஊழியர்கள் இராஜினாமா கடிதங்களை வழங்கிய போதிலும் ஆசிரிய பீட ஊழியர்கள் இராஜினாமா கடிதங்களை வழங்க மறுத்து வந்தனர். தாம் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து இராஜினாமா செய்ய முடியாது என மறுத்து வந்தனர்.

இந்நிலையில் நாளை மறுதினம் முதல் தினக்குரல் நிறுவனத்திற்குள் பிரவேசிக்க கூடாது என வீரகேசரி நிறுவனமான ஏசியன் மீடியா நிறுவனம் அறிவித்தல் ஒன்றை தினக்குரல் அலுவலக அறிவித்தால் பலகையில் போட்டுள்ளனர்.

இது தொடர்பாக தினக்குரல் ஆசிரிய பீடத்துடன் நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது இந்த அறிவித்தலை கண்டு தாம் அதிர்ச்சியும் கவலையும் அடைந்திருப்பதாகவும், இதனால் இன்றிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் ஆசிரிய பீட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தாம் நாளை தினக்குரல் பத்திரிகையை வெளியிடப்போவதில்லை என்றும் அவ்வாறு நாளை தினக்குரல் வெளிவருமாக இருந்தால் அது வீரகேசரி நிறுவனமே வெளியிடும் என்றும் தினக்குரல் ஆசிரிய பீட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தினக்குரல் பத்திரிகை வெளிவராமல் தடுப்பதற்காக அதனை வாங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சி செய்தது. பின்னர் வீரகேசரி நிறுவனம் ஊடாக தினக்குரல் பத்திரிகையை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்திருந்தது. தினக்குரல் பத்திரிகை தமிழ் மக்களின் குரலாக வெளிவரக்கூடாது என்ற சிறிலங்காவின் திட்டம் இப்போது நிறைவேறியிருக்கிறது.IMG_3643-1.jpg

http://www.thinakkathir.com/?p=18335

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளியேற்றப்பட்ட தினக்குரல் பத்திரிகையாளர்கள்

கொழும்பில் இயங்கி வரும் தினக்குரல் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் நேற்று புதன்கிழமை அவர்களின் கடமைகளுக்காக அலுவலகத்தினுள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.நிர்வாகத்தினரின் அறிவுறுத்தலின்படி அலுவலகத்துக்குச் சென்றவர்கள் முன் கேற்றடியில் வைத்து தடுக்கப்பட்டனர்.

நிர்வாகத்தினர் வற்புறுத்தலுக்கு இணங்க மறுத்த பத்திரிகையாளர்கள் "சட்டவிரோதமாக தாங்கள் பணியில் இருந்து தடுக்கப்பட்டிருப்பதாக'' கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.கடந்த ஜுலை முதலாம் திகதி முதல் தினக்குரல் பத்திரிகை " ஏசியன் மீடியா பப்ளிகேசன் பிரைவேட் லிமிட்டட்'' என்ற பெயரில் வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தால் பிரசுரிக்கப்பட்டு வருகின்றது.இக்காலப் பகுதியில் மேற்குறிப்பிட்ட நிறுவனமே தினக்குரல் ஊழியர்கள் அனைவருக்குமான சம்பளம் உட்பட அனைத்து கொடுப்பனவுகளையும் வழங்கி வருகின்றது.இதேசமயம் தினக்குரல் ஊழியர்கள் கொழும்பு தொழில் திணைக்களத்தில் தம்மீதான ராஜினாமா வற்புறுத்தல் குறித்தும் வேலைக்கு அனுமதிக்கப்படாமை குறித்தும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து இது தொடர்பான விடயத்தில் விளக்கமளிக்க வருமாறு தொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் விக்கிரமசிங்க ஏசியன் மீடியா பப்ளிகேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் பி. கேசவராஜாவை அழைத்த போதிலும் நேற்று தனக்கு நேரம் இல்லை என்று மறுத்து விட்டார் என்று தெரியவருகிறது.இதனையடுத்து இந்தச் சந்திப்பு இன்று நடைபெறவிருக்கிறது. ஆனால் தினக்குரல் நிறுவனத்திலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே ஏசியன் மீடியா பப்ளிகேசன் நிறுவனத்தினால் நியமன கடிதம் வழங்கப்படும் என்ற நிபந்தனையை வீரகேசரி நிறுவனம் விதித்திருக்கிறது.

ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிப்பதற்கு நேற்று புதன் கிழமை வரை காலக்கெடு விதித்திதிருந்த ஏசியன் மீடியா பப்ளிகேசன் நிறுவனம் 25 பத்திரிகையாளர்களும் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்காததால் அவர்களை காரியாலயத்தினுள் நுழைய அனுமதிக்கவில்லை நிர்வாகத்தரப்பு என்று கூறுகிறது.அதேசமயம் செய்தி ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான பதவி வெற்றிட விண்ணப்ப அறிவித்தல்களை ஏசியன் மீடியா பப்ளிகேசன் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

15 செப்ரெம்பர் 2011, வியாழன் 8:10 மு.ப

http://onlineuthayan.com/News_More.php?id=26644559415419446

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினக்குரல் பத்திரிகையின் 27 ஊடகவியலாளர்கள் புதிய நிர்வாகத்தால் தெருவில் விடப்பட்டமைக்கு கண்டனம்

21 செப்டம்பர் 2011

NFR

தினக்குரல் பத்திரிகையின் 27 நிரந்தர ஊடகவியலாளர்கள் புதிய நிர்வாகத்தால் தெருவில் விடப்பட்டமை கண்டனத்திற்குரியது -

இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் தினசரிப் பத்திரிகையான தினக்குரல் பத்திரிகையின் 27 நிரந்தர ஊடகவியலாளர்கள் அப்பத்திரிகையின் புதிய நிர்வாகத்தால் தெருவில் விடப்பட்டமையை புலம் பெயர்ந்து வாழும் இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமையாளர்களின் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஞாயிறு தினக்குரலின் ஆசிரியர், செய்தி ஆசிரியர், பிரதி செய்தி ஆசிரியர், சிரேஸ்ட ஆசிரிய பீட உதவியாளர்கள் போன்ற சிரேஸ்ட ஊடகவியலாளர்களும் அதனுள் அடங்குவர். தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் பாரதி இராசநாயகமும் அதனுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் அதிகளவில் விற்பனையாகும் தமிழ் தினசரிகளில் இரண்டாவது இடத்திலுள்ள தினக்குரல் பல்வேறு நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் தாங்கி கடந்த மூன்று தசாப்தங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

ஒரு மாதத்திற்கு முன்பதாக தினக்குரல் இலங்கையின் மிகப் பெரிய தமிழ் தினசரியான வீரகேசரியின் உரிமையாளர்களால் வாங்கப்பட்டது. தினக்குரல் ஊழியர்கள் தாமாகவே விலகிக் கொள்வதான ராஜிநாமாக் கடிதங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் புதிய உரிமையாளர்கள் கோரியுள்ளனர். இதற்கான காரணம் எதுவும் தெளிவாக இல்லாவிடினும், புதிய நிர்வாகத்தால் புதிதாக இவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதானது நீண்டகாலமாக பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளான ஊழியர் சேமலாப நிதியம் போன்ற கொடுப்பனவுகளை மறுப்பதற்கு உதவுவதாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த உடன்பாட்டை ஏற்றுக் கொள்ளாத ஊழியர்களை தினக்குரலின் புதிய நிர்வாகம் நிறுவனத்துக்குள் அனுமதிக்காமல் வெளியே விட்டுப் பூட்டியுள்ளது.

தினக்குரல் புதிய நிர்வாகத்தின் இந்நடவடிக்கையை ஜனநாயகபூர்வமற்ற ஒன்றாகவே புலம் பெயர்ந்து வாழும் இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமையாளர்களின் கூட்டமைப்பு கருதுகிறது. அவ்வூடகவியலாளர்கள் உடனடியாக மீளவும் பணியில் அமர்த்தப்படுவதோடு, அவர்களுக்கான நலக்கொடுப்பனவுகள் அனைத்தும் கிடைக்கவும் வழியேற்படுத்தப்பட வேண்டும் எனவும் அது கருதுகிறது.

இப்பிராந்தியத்திலுள்ள ஊடகவியலாளர்களின் கொடுப்பனவுகளோடு ஒப்பிடும் போது இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களின் கொடுப்பனவுகள் மிகக் குறைவானதாகும். அதுவும்; தமிழ் ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் கொடுப்பனவுகள் மிக மிகக் குறைவானதாகும். தவிரவும் தனியார் ஊடக நிறுவனங்கள் எதிலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுவதில்லை.

வீரகேசரி உரிமையாளர்களில் ஒருவரான குமார் நடேசன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் தலைவராக இருக்கிறார். ஸ்கண்டினேவிய நிதி ஆதரவில் இயங்கும் இலங்கைப் பத்தரிகை ஸ்தாபனம் ஊடகவியலாளர் பயிற்சிக் கல்லூரி ஒன்றை நடாத்துவதோடு, ஊடக சுதந்திரத்துக்காகவும் குரல் கொடுக்கும் ஒரு சுயாதீனமான நிறுவனமாகும்.

இதிலுள்ள முரண்நகை என்னவென்றால் சிறந்த ஊடகவியலுக்காக ஊடக சமுதாயத்தில் வலுவான தொழிற்சங்கங்களைக் கொண்ட நாடுகளின் நன்கொடைகளில் தங்கியுள்ள இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தங்கள் சொந்தப் பத்திரிகையில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு அநீதி இழைப்பதாகும்.

இலங்கையில் பெருமளவு ஊடகவியலாளர்கள் அங்கம் வகிப்பதும் ஊடக சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்து வருவதுமான சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் என்பன இவ்விடயம் தொடர்பில் குமார் நடேசனுக்கு கடிதம் எழுதியுள்ளன. இந்த துஸ்பிரயோகத்தை ஊடகவியலாளர்களின் உரிமையை மதித்து மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை ஊடாக சுமுகமாகத் தீர்க்கும்படி அவை கோரியுள்ளன.

தினக்குரல் ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கவேண்டி ஊடக நிறுவனங்கள் கூட்டாக மெற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவளிக்கிறோம். ஸ்கண்டினேவியன் நாடுகளிலுள்ள ஊடக அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தினக்குரல் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்குமாறு புலம் பெயர்ந்து வாழும் இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமையாளர்களின் கூட்டமைப்பு வேண்டிக் கொள்கிறது.

Issued by

Steering Committee, NfR Sri Lanka

Steering committee : Kshama Ranawana ( Canada ) Lionel Bopage ( Australia ), Nadarasa Sarawanan ( Norway ), Nadarajah Kuruparan (UK) Padmi Liyanage ( Germany ), Raveendran Pradeepan ( France ), Rudhramoorthy Cheran ( Canada ), Saman Wagaarachchi ( USA ), Sunanda Deshapriya ( Switzerland )

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/67541/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.