Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேர்தவர்கள் தொடர்பான வழக்கு இன்று!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேர்தவர்கள் தொடர்பான வழக்கு இன்று!

Published on September 15, 2011-3:39 am

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய ஐந்து பேர் தொடர்பிலான வழக்கு ஒன்று, இன்றைய தினம் நெதர்லாந்தில் நடைபெறவுள்ளது. த ரேடியோ நெதர்லாந்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களில், நெதர்லாந்தில் நடைபெற்று வந்த தமிழர்களின் கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளை காவற்துறையினர் கண்காணித்து வந்துள்ளனர். ஒப்பரேசன் கொனிக் என இந்த முன்னெடுப்புக்கு பெயரிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னரும், இந்த நிதி வழங்கல் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன.

இந்த குற்றச்சாட்டின் கீழ் பல நெதர்லாந்து தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 5 பேர் தொடர்பிலான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த குழுவில், நெதர்லாந்தில் இயங்கிய விடுதலைப் புலிகளின் கிளைத்தலைவர் என நம்பப்படும் ஆர்.சிறிரங்கமும் உள்ளடங்குகிறார்.

நெதர்லாந்தின் ஹேக் நகர நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படவுள்ளது. ஏற்கனவே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என, சிறிரங்கத்தின் சட்டத் தரணி, விக்டர் கொபே ஐரோப்பிய சங்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.saritham.com/?p=34492

மூன்று வாரத்தில் தெரியவரும் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா இல்லை விடுதலை வீரர்களா என்று - நெதர்லாந்து

Tamil Tigers: Terrorists or Freedom Fighters – Dutch court to decide

http://www.yarl.com/forum3/index.php?showtopic=91699

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sep 19, 2011 / பகுதி: செய்தி /

நெதர்லாந்தில் தமிழர்களின் வழக்கு விசாரணை

கடந்த 16 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்ட 5 மனிதநேயச் செயற்பாட்டாளர்களின் வழக்கு விசாரணை கடந்த 15ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

டென்காக் நகரில் நடந்துகொண்டிருக்கும் இவ்வழக்கின் 2ம் நாள் அமர்வில் ஐரோப்பிய நாடுகளால் தடை செய்யப் பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கையில் சிறுவர் படை சேர்ப்பு கரும்புலிகள் தாக்குதல் சர்வதேச ரீதியில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டார்களா? இல்லையக? என்ற விடையங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன.

இந்த அமர்வில் ஐரோப்பிய நீதிமன்றில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை நீக்கக் கோரி வழககுத்ததாக்கல் செய்திருக்கும் பிரபல வழக்கறிஞர் திரு. விக்ரர் கொப்பே அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நீதிபதியின் அனுமதியுடன் அண்மையில் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான இலங்கையின் கொலைக்களம் ஆவணக்காட்சி திரையிடப்பட்டது.

இக்காட்சியினை அங்கு வருகை தந்த வழக்கறிஞர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் பார்வையிட்டனர். இக்காட்சியினைப்பார்த்து அதிர்ந்துபோன பல வழக்கறிஞர்கள் இவ் வழக்கினை இன்று மேற்கொண்டு நடத்த வேண்டாம் என்றும் இவ்வழக்கினை அடுத்த வாரம் நடத்த வேண்டும் என்றும் இது எம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனவும் கூறினர்.

இதைக்கேட்ட நீதிபதியவர்கள் இன்று ஒத்திவைக்க முடியாது எனவும் ஆனால் போதிய அளவு இடைவேளை விடுவதாகவும் கூறி, உடனடியாகவே இடைவேளையை அறிவித்தார்.

அதன் பின்னர் போதிய அளவு இடைவேளை பெற்று மீண்டும் வழக்கு தொடர்ந்து இடம் பெற்றன. ஆயினும் வழமையான நேரத்திற்கு முன்பாகவே நீதிபதி அவர்களால் இன்றைய அமர்வு முடிவிற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/news/18474/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.