Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களிற்கு தனிநாடு கிடைப்பதை ஆதரிக்கிறேன்! - கனடிய கொன்சவேட்டிவ் கட்சி பா.உறுப்பினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sep 20, 2011 / பகுதி: செய்தி /

தமிழர்களிற்கு தனிநாடு கிடைப்பதை ஆதரிக்கிறேன்! - கனடிய கொன்சவேட்டிவ் கட்சி பா.உறுப்பினர்

canada-con%20%282%29.jpgகனடாவின் மனித உரிமைகளிற்கான மையம் சிறீலங்கா இனப்பிரச்சினை தொடர்பாக வாட்டர்லூ நகரில் நடத்த மாநாட்டில் மண்டபம் நிறைந்த பேராளர்கள் கலந்து கொண்டதுடன் அனைத்துக் கட்சிக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பேச்சாளர்களும் கலந்து கொண்டனர்.

இம் மாநாட்டில் சிறப்புரையாற்றிய கிச்சினர் மத்திய தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபன் வூட்வோர்த், இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கிடைப்பதை ஆதரிக்கிறேன் எனத் தெரிவித்தார்.

அத்துடன், சிறீலங்கா மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட வேண்டுமென்பதையும் ஐ.நா. சபையினால் போர்க் குற்றவிசாரணை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

canada-con%20%283%29.jpgஇப்படியான ஒரு தமிழ் அமைப்பு கனடியர்கள் அனைவருக்கும் சேவை செய்யும் வகையில் இருப்பதையிட்டு பெருமையடைகிறேன் என்றும் இந்த அமைப்புடன் இணைந்து வேலை செய்வதற்கு விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.

100 பேராளர்கள் இருக்கக்கூடிய இந்த மண்டபத்தில் 147 பேராளர்கள் பதிவு செய்து கொண்டது இந்த மாநாட்டின் வெற்றியைப் பறைசாற்றியது.

இந்த நகரத்தின் மேயர் தனது வரவேற்புச் செய்தியை ஜெப் ஹென்றி என்ற கவுன்சிலர் ஊடாக மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை விவகாரங்களிற்கான தொடர்பாளரான ஜோன் ஆர்க்கியூ அங்கு பேசுகையில், சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளிற்கு யுத்தக் குற்ற விசாரணை தேவை என்பதை வலியுறுத்தினார்.

canada-con%20%284%29.jpgலிபரல் கட்சியின் முக்கிய பிரமுகரான பிரையன் மே அங்கு லிபரல் கட்சியின் தலைவர் பொப் ரேயின் இந்த மாநாட்டிற்கான செய்தியினை வாசித்ததோடு சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக ஒரு தீர்க்கமான விசாரணை இடம்பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டையும் தனது செய்தியில் தெரிவித்திருந்தார்.

கனடிய அமைச்சா் ஹரி குட்யியர் தனது வாழ்த்துச் செய்தியில் இந்த அமைப்பு செய்துவரும் மனிதவுரிமை விவாகரங்கள் தொடர்பான விடயங்களில் மேலும் சிறப்புறச் செய்வதற்கு தான் வாழ்த்து வழங்குவதாகவும் கனடிய அரசு மனிதவுரிமை விவகாரங்களில் நேர்மையான ஒரு நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஒன்ராறியோ மாகாண அரசின் சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் கிறிஸ் பென்றிலி அங்கு பேசுகையில் கனடிய மனிதவுரிமை மையம் மேற்கொண்டு வரும் மனிதவுரிமை தொடர்பான பணிகளிற்கு தமது அரசு எப்போதுமே ஆதரவளித்து வரும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

canada-con%20%281%29.jpgஒன்ராறியோ மாகாணக் கொன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் பேசிய பொப் ஸ்ரான்லி,தமிழர்களிற்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற சில போராட்டங்களால் ஏற்பட்ட பெருந்தெரு மறிப்புப் போன்ற சங்கடத்தைக் குறைக்க கனடிய மனிதவுரிமை மையம் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இம்மாநாட்டில் பேசிய கனடிய மனிதவுரிமை மையத்தின் பேச்சாளரான ரொட் றோஸ் அவர்கள்கனடிய மனிதவுரிமை மையம் தன்னாலியன்றளவு இலங்கையில் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளிக்கொணர்வதில் பங்காற்றும் எனத் தெரிவித்தார்.

http://www.pathivu.com/news/18479/57//d,article_full.aspx

to: woodworth.s@parl.gc.ca

Room 334, Confederation Building

House of Commons

Ottawa ON K1A 0A6

Telephone: 613-995-8913

Fax: 613-996-7329

Subject: Rights and Sri Lanka

Dear Stephen Woodworth,

I would like to thank You for particiaption and expressing solidarity with Tamils. Your support on what Tamils demand, including an independent war crimes investigation to thier right to self determination are in line with Canadian values.

Please continue your voice within the party and let Canada makes real peace with rights & freedom in Sri Lanka.

Sincerely,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.