Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையர்கள் 37பேர் இந்தியாவில் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jeil_1-150x150.jpg

ஏர்ணாக்குளம் மாவட்டம் கொத்தமங்களம் பிரதேசத்தில் 37 இலங்கையர்களை கேரள பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இன்று காலை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் 26 ஆண்களும், 7 பெண்களும் மற்றும் 4 சிறுவர்களும் உள்ளடங்குவதாக கேரள பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் மூலமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாடகை வீடொன்றில் குடியிருந்து வந்த நிலையிலேயே குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு அகதி முகாம்களில் இருந்து கொத்தமங்களம் பிரதேசத்துக்கு வந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள புலனாய்வுத் துறையினர் வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக கேரளாவினை இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு செல்லும் ஒரு தளமாக பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு முன்பு இருதடவைகள் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இருகுழுக்கள் கேரளா பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. முதற்தடவை 2010ம் ஆண்டு கொல்லம் பிரதேசத்தில் 36 இலங்கையர்கைள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரண்டாவது தடவை கொச்சி பிரதேசத்தில் 16 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என இந்திய உடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

http://www.saritham.com/?p=35806

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.