Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலைக்கு கோதாபய ராஜபக்ஷ முற்றாக பொறுப்புகூற வேண்டும் - வாசுதேவ :

Featured Replies

ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ முற்றாக பொறுப்புகூற வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க பாதுகாப்புச் செயலாளர் மேற்கொண்ட தலையீடுகளை பாராட்ட வேண்டும் என்ற போதிலும் யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்னரும் நாட்டில் அமைதியை ஏற்படுத்த பாதுகாப்புச் செயலாளரினால் முடியாது போயுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவரினால்கூட நாட்டில் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் இல்லை என்பது பாரதூரமான விடயம் என வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கொலன்னாவையிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்ற போது அங்கிருந்த அரசாங்கத்தின் பிரதானிகள் சிலருடன் கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வாசுதேவ நாணயக்காரவின் இந்தக் கருத்தை அங்கிருந்த அமைச்சர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படுவதைத் தடுப்பதற்கும், நாட்டில் ஜனநாயகத்தையும், அமைதியையும் நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வாசுதேவ கூறியுள்ளார்.

அத்துடன், அமைச்சர் மேர்வின் சில்வாவின் முட்டாள் தனமான செயற்பாடுகளுக்கெதிராக ஆளும் கட்சியினர் கடுமையாக குரல்கொடுக்க வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

  • 1 month later...

பாரத லக்ஸ்மன் குடும்பத்தினர் கனேடிய அரசை நாடுகின்றனர் - கனடாவில் உள்ள சகோதரி கனேடிய பிரதமரை அணிசேரா மாநாட்டில் இந்த விடயம் பற்றி கேள்வி எழுப்ப கோரினார்.

Bharatha’s Family Approaches Harper

The family of slain politician Bharatha Lakshman Premachandra says they have approached Canadian Prime Minister Stephen Harper, seeking support to ensure that justice is done with regard to Premachandra’s murder.

Swarna Premachandra, Bharatha Lakshman’s sister, told The Sunday Leader from Canada yesterday, that the Canadian Prime Minister’s office has responded positively to a request from the family members for a meeting with the Premier. She said that there were clear indications of the involvement of the underworld in the assassination of Premachandra.

Swarna Premachandra said that her family will also contact the Commonwealth Secretariat and other countries to raise their concerns over the Sri Lankan government’s failure to bring the perpetrators to book. She also said that a group of lawyers will address the media on Tuesday regarding the course of action her family intends on taking over Bharatha’s killing.

http://www.thesundayleader.lk/2011/11/13/bharatha%E2%80%99s-family-approaches-harper/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.