Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொறன்ரோவில் இன்று ‘பொங்கு தமிழ்’ - கனடியத் தமிழர் பேரெழுச்சியுடன் விழாக்கோலம்

Featured Replies

பொங்கு தமிழ் என்று சங்கே முழங்கு!

கனடியத் தமிழர்களால் நிகழ்த்தப்படும் மூன்றாவது பொங்கு தமிழுக்கான இறுதி ஏற்பாடுகள் யாவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழர்கள் பெருமளவில் வாழும் கனடிய நகரங்கள் எங்கும் பொங்கு தமிழ் பற்றிய செய்திகள் பரவலாகி களைகட்டியுள்ளது.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னரே இங்குள்ள பொது நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்திலும் பொங்கு தமிழை எழுச்சியூட்டும் சுவரொட்டிகள் அலங்கரித்திருந்தன. காலமும் நேரமும் இதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாயினும், எங்கே நடைபெறும் என்பதை அப்போது அறிவிக்கப்படாததால், இது எங்கே நடைபெறுகின்றது என்ற கேள்வி தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவரிடமும் எழும்பியிருந்தது.

வாராவாரம் வித்தியாசமான சுவரொட்டிகளை வௌ;வேறு இடங்களில் காணக்கூடியதாக இருந்தது. ஆர்வமுள்ள பல தொழிலதிபர்கள் தாமே முன்வந்து இது தொடர்பான துண்டுப் பிரசுரங்களையும் பல்லாயிரக்கணக்கில் அச்சடித்து விநியோகித்தார்கள்.

2004ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில், கனடாவின் முதலாவது பொங்கு தமிழ் எந்த இடத்தில் நடைபெற்றதோ, அதே குயின்ஸ் பார்க் திடலில் (ஒன்ராறியோ மாகாண அரசின் கட்டடத்துக்கு முன்னால்) இன்று சனிக்கிழமை சரியாக பகல் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கு தமிழ் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்குக் கட்டியம் கூறுவதுபோல இங்குள்ள சமூக வர்த்தகர்கள் பொங்கு தமிழ் பொறிக்கப்பட்ட மஞ்சள்-சிவப்பு வர்ணத்தினாலான பிளாஸ்டிக் பைகளில் தமது விற்பனைப் பொருட்களை வழங்கி தங்களுடைய தார்மீக ஆதரவைக் காட்டினர்.

இந்த வாரத்தில் வௌ;வேறு விதமான துண்டுப் பிரசுரங்களை சமூக நிறுவனங்கள் பிரசுரித்து விநியோகம் செய்தன.

முள்ளிவாய்க்கால் பின்னடைவுக்குப் பின்னர் ‘நாம் தோற்றுப் போனோமோ’ என்ற கவலையில் துயருற்றிருந்த கனடியத் தமிழர்கள் பொங்கு தமிழ் அறிவிப்புக் கண்டு உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். இதனை ஏற்பாடு செய்துள்ள கனடியத் தமிழர் சமூகத்துக்கும் தமிழ் இளையோர் சமூகத்துக்கும் இங்குள்ள பொது அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், பழைய மாணவர் மன்றங்கள், ஊர்ச் சங்கங்கள் என்பன ஒன்றுபட்டு முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றன.

போக்குவரவு ஏற்பாடுகளை இந்நிகழ்வு ரொறன்ரோ நகரின் மையப்பகுதியில் நடைபெறுவதால், பொதுப்போக்குவரவுச் சேவையையே அனைவரும் பயன்படுத்த விரும்புகின்றனர். ஆனாலும், முதியோர், நடமாட்ட வசதி குறைந்தவர்கள் சேர்ந்து வருவதற்கு உதவியற்றவர்களின் வசதி கருதி ரொறன்ரோ பெரு பெருநகரில் ஐந்து மையங்களிலிருந்து விசேட போக்குவரவு ஏற்பாடுகளை சமூக வர்த்தகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். மல்வேர்ன் சென்டர், ஜீ.ரி.ஏ. ஸ்குயார், எஸ்.பி.இம்போட்டர்ஸ் மற்றும் இரா.சுப்பர் மார்க்கட் ஆகிய இடங்களிலிருந்து புறப்படும் பேருந்துகளில் பயணிக்க விரும்புபவர்கள் 416 450 9661 என்ற இலக்கத்துடனும், மிசிசாகாவில் டன்டாஸ்-ஹியுரொன்ராறியோ (ர்றல 10) பகுதியிலிருந்து புறப்படும் பேருந்துகளில் பயணிக்க விரும்புவர்கள் 905 290 3000 என்ற இலக்கத்தை அழைக்கவும்.

மேற்குறிப்பிட்ட இடங்களிலிருந்து பேருந்துகளில் வருவதற்கு கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. சமூக வர்த்தகர்களே இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளனர்.

பொங்கு தமிழ் நிகழ்வை முழுமையாக வெற்றியடையச் செய்வதற்காக பெரும்பாலான தமிழர் வர்த்தக நிறுவனங்களும் அன்று நண்பகலுடன் மூடப்படுமென உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

மொன்றியலில் இருந்து பொங்கு தமிழுக்கு வருகை தருவதற்கு பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

1 514 558 4235 அல்லது 1 514 605 9870 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப் பெறலாம்.

கனடா பொங்கு தமிழ் சிறப்பாக நிகழ்வதற்கு கனடிய தேசிய மட்டத்திலான 180இற்கும் அதிகமான பொது அமைப்புகளை உள்ளடக்கிய கனடிய சமாதானப் பேரவை தனது பூரண ஆதரவை வழங்கியுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள பல்வேறு தமிழர் அமைப்புகளும் இதனை வாழ்த்தி வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தங்கள் அரசியல் கட்சியின் சார்பில் வாழ்த்தினை வழங்கியுள்ளார். 2001ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட வேளையில் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இருந்த கஜேந்திரனே அதன் பிரதான ஏற்பாட்டாளராக இருந்தவர்.

பொங்கு தமிழில் கலந்துகொள்பவர்கள் வழமையான நடைமுறைகளை பின்பற்ற முடியும். இதில் எந்த மாற்றமும் இருக்காது. பொதுமக்கள் தங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்துக்கு எந்தத் தடையும் இருக்காது. எனவே, தவறான முறையில் சிலர் தெரிவிக்கும் விடயங்களை நம்ப வேண்டாம் என்று நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மிகப் பெருந் தொகையான மக்கள் நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கான வேண்டிய வசதிகளும் பொது அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கு தமிழ் எங்கும் தங்கட்டும்

பொங்கு தமிழ் என்றும் நிலைக்கட்டும்

http://www.pathivu.c...ticle_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.