Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு சங்கிலிப் பாலத்தில் காணி அபகரிப்பு! – சிவசக்தி ஆனந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு சங்கிலிப் பாலத்தில் காணி அபகரிப்பு! – சிவசக்தி ஆனந்தன்

  • Thursday, November 3, 2011, 12:19

முல்லைத்தீவு சங்கிலிப் பாலத்தில் காணி அபகரிக்கப்பட்டு மண்நிரப்பப்படுவதாகவும், இதனால் அந்தப் பகுதியில் பல்வேறு சூழல் பாதிப்புகள் ஏற்படுவதுடன், விவசாயச் செய்கை மற்றும் தொழில்துறை பாதிப்பும் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் அமைப்புக்கள் முறைப்பாடு செய்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

முல்லைத்தீவு மாவட்டம் முல்லைத்தீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முல்லைத்தீவு தெற்கு கிராம அலுவலர் பிரிவின் முல்லைத்தீவு பரந்தன் வீதியை சின்னகல்லாறு குறுக்கறுக்கும் இடத்தில் அமைந்துள்ள சங்கிலிப் பாலத்துக்கு அண்மையில் அண்ணளவாக ஒரு ஏக்கருக்குக் கூடுதலான பகுதியை முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் மீள்குடியேறியிருக்கும் முகமட் இப்ராஹிம் நிபாரக் என்பவரால் அடாத்தாக வேலியிடப்பட்டு மண்நிரப்பப்பட்டு வருகின்றது.

இவர் அடாத்தாகப் பிடித்திருக்கும் காணிக்கு முன்பாக பேருந்துநிலையம் அமைய இருப்பதால் வியாபார நோக்கில் முன்கூட்டியே காணி அபகரிப்பு நடந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்நடவடிக்கை சட்டம் ஒழுங்கைக் கேலிக்குள்ளாக்கும் பாரதூரமான விடயமாகும். அத்துடன் இந்த ஆற்றுப் பகுதியில் நன்னீர் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் பெருந்தொகையான குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்கு விடப்பட்டிருக்கும் பாரிய அச்சுறுத்தலுமாகும். இத்தகைய ஆக்கிரமிப்பினால் இயற்கை நீரோட்டம் தடைபட்டு நடைபெறும் மாரிகாலத்தில் தீர்த்தக்கரை, சிலாவத்தை, கள்ளப்பாடு தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, செல்வபுரம், வண்ணாங்குளம், மணற்குடியிருப்பு, கோயில் குடியிருப்பு, முல்லைத்தீவு நகரம், வட்டுவாகல் போன்ற இடங்கள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாக நேரிடும் என்பதுடன் முல்லைத்தீவு நகரை அண்டியுள்ள பகுதியில் சுமார் 240 ஏக்கருக்கும் கூடுதலான காணிகளில் பயிரப்படுகின்ற நெற்செய்கை கடும் பாதிப்பிற்குள்ளாகும்.

ஆகவே இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்கத்தினர் உள்ளிட்ட பொது அமைப்புகள் என்னிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக அவர்கள் அரசாங்க அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளனர். அரசாங்க உத்தியோகத்தர்கள் இதுவிடயம் தொடர்பாக காவல்துறையினரிடம் முறையிட்டும் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வெள்ள அணர்த்தம், சூழல் மாசுபாடு மற்றும் வாழ்வாதாரப் பாதிப்புகளை முன்கூட்டியே உணர்ந்து அவற்றைச் சரிசெய்வதற்குப் பொறுப்பான அரச உத்தியோகத்தர்கள் மேற்படி நபரின் விடயத்தில் ஏதும் செய்ய முடியாதவர்களாக இருக்கின்றனர். இவருக்குப் பின்னால் ஒரு அமைச்சர் இருப்பதாகத் தெரியவருகிறது.

எது எப்படியிருப்பினும், சூழல் மாசடைவதையும், மனிதத் தவறால் வெள்ள அணர்த்தம் ஏற்படுவதையும், மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது

http://www.tamilthai.com/?p=29425

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.