Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக கடற்றொழிலாளர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

nevy.jpg

தமிழக கடற்றொழிலாளர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் அனுப்பிய மறுநாளே மீண்டும் நேற்று சிறிலங்கா கடற்படையினர், தமிழக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவுக்கு அருகில் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக கடற்றொழிலாளர்கள் நேற்று, சிறிலங்காக் கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளதாகவும் இத் தாக்குதல் சம்பவத்தில் கடற்றொழிலாளர்கள் எட்டுப் பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களின் பதின்மூன்று படகுகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகக் கடற்றொழிலாளர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்களைத் தாக்கியதுடன், அவர்களின் படகுகளில் உள்ள பாகங்களையும் பெயர்த்துச் சென்றதாகவும் மேலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிறிலங்காக் கடற்படையினர் தம்மை அவர்களின் படகுகளில் ஏற்றி அதன் பின்னர் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக காயமடைந்த முத்துசாமி மற்றும் கணேசன் ஆகிய இரு கடற்றொழிலாளர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்களின் 10 படகுகள் சேதமாக்கப்பட்டன. அதனையடுத்து கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமருக்கு கடந்த திங்கட் கிழமை கடிதம் எழுதியிருந்தார். அதற்கு அடுத்த நாளே இவ்வாறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதம் முதற்கொண்டு கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை 22 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக ஜெயலலிதா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தமது கடற்படையினர் தமிழகக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை எனவும் அவ்வாறு அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அவசியம் தமது கடற்படையினருக்கு இல்லை எனவும் அத்துடன் கடந்த காலங்களில் கூட அவ்வாறானதொரு தாக்குதல்களை தமது கடற்படை மேற்கொள்ளவில்லை என சிறிலங்காக் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்திருந்தார்.

http://www.eeladhesa...ndex.php?option

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.