Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரபு லீக்கிலிருந்து சிரியா நீக்கப்பட்டது

Featured Replies

அரபு லீக்கிலிருந்து சிரியா நீக்கப்பட்டது

அரபு லீக் அமைப்பு சிரியாவை தனது அமைப்பிலிருந்து நீக்கியுள்ளது. மேலும், சிரியா மீது உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதிக்குமாறும் அது அழைப்பு விடுத்துள்ளது.

அரபு ஒப்பந்தத்தை அதிபர் பாஷர் அல் அஸ்ஸாத் அமலாக்கும் வரை சஸ்பெண்ட் நடவடிக்கை தொடரும் என்றும் அரபு லீக் அறிவித்துள்ளது. மேலும் போராட்டம் நடத்துவோரை ராணுவத்தைக் கொண்டு அடக்குவதையும், ஒடுக்குவதையும் சிரியா கைவிட வேண்டும் என்றும் அரபு லீக் கூறியுள்ளது.

ஆனால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று சிரிய தூதர் யூசப் அகமது கூறியுள்ளார். அரபு லீக்குடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஏற்கனவே சிரியா அமல்படுத்தியுள்ளது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையின் பின்னால் அமெரிக்க அரசு உள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சிரியாவுக்குள் வெளிநாடுகளின் ஊடுறுவலை ஏற்படுத்த அரபு லீக் துணை போகிறது, உதவுகிறது. லிபியாவிலும் அப்படித்தான் அரபு லீக் நடந்து கொண்டது. இப்போதும் அப்படியே நடக்க அது முயலுகிறது என்றார் அவர்.

இதற்கிடையே, அரபுலீக்கின் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஐரோப்பியன் யூனியன் தலைவர் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

சிரியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் மீது படை பலத்தை சிரிய அரசு பிரயோகித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மட்டும் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி மக்கள்.

http://www.alaikal.com/news/?p=87742

Edited by akootha

  • தொடங்கியவர்

பொது மக்களை படுகொலை செய்வதையும், மக்கள் மீது இராணுவத்தை ஏவுவதையும் இதுவரை சிரியாவின் சர்வாதிகார ஆட்சி நிறுத்தவில்லை. இந்தநிலையில் சிரியாவை அரபுலீக்கில் இருந்து இடை நிறுத்தம் செய்வதாக நேற்று அறிவித்தது அரபு லீக். இந்த முடிவானது சர்வதேச சமுதாயம் சிரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான புதிய கதவையும் திறந்துவிட்டது.

சர்வதேச சமுதாயத்தின் வேண்டுதல்களை ஒழுங்குபட நிறைவேற்றாது ஏமாற்றும் ஓர் அரசுக்கு எதிரான சர்வதேச எதிர் நடவடிக்கைகளை அது வரவேற்றும் இருந்தது. இந்த அறிவிப்பு தனது நிர்வாகத்திற்கு பலத்த அடியாக இறங்கப்போவதை உணர்ந்து கொண்ட சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட் அரபுலீக்கை உடனடியாக கூட்டும்படி சற்று முன்னர் வேண்டுகோள் விடுத்தார்.

மறுபுறம் அரபுலீக்கின் முடிவை துருக்கி வரவேற்றதைத் தொடர்ந்து ஆஸாட்டின் ஆதரவாளர்கள் 1000 பேர்வரை டமாஸ்கஸ்சில் உள்ள துருக்கி தூதரகத்தின் மீது தாக்குதலை நடாத்தினார்கள். மேலும் சிரியாவின் லற்றாக்கியா நகரில் உள்ள துருக்கி கொன்ஸ்சலேற் தர தூதராலயமும் தாக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 5000 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். நேற்று சனிக்கிழமை டாமாஸ்கசில் உள்ள சவுதி அரேபியா, கட்டார் நாட்டு தூதரகங்கள் தாக்குதலுக்குள்ளாகின.

சர்வதேச சமுதாயத்தை பகைப்பதைத்தவிர வேறு வழியற்ற சுரங்க வழிக்குள் சிரியா தொடர்ந்து சிக்குப்பட்டுவருகிறது. மேலும் சிரியாவின் அவசர வேண்டுகோள் குறித்து இதுவரை அரபுலீக் கருத்துரைக்கவில்லை. ஆனால் கடந்த காலங்களில் செல்லாக்காவு தாபனமாக இருந்த அரபுலீக்கானது எகிப்து, ரூனிசியா, லிபியாவில் ஏற்பட்ட புரட்சிகளின் வெற்றிக்குப் பின்னர் சக்திமிக்க தாபனமாக மாறிவருகிறது. கிழடு தட்டி பொருக்கேறிக் கிடந்த இந்த பாலைவன ஒட்டகம் தற்போது சொறி கொட்டுப்பட்டு, இளமை பெறுகிறது. இதுபோல ஒரு கிழட்டுத் தாபனம் கூட அயலில் இல்லாத அவலமே இலங்கை தமிழ் மக்களுக்கு இருந்தது கவனிக்கத்தக்கது. 140.000 பேர் குறுங்காலத்தில் கொல்லப்பட அதற்காக குரல் கொடுக்க அதிகாரமிக்க ஒரு கிழட்டு லீக்கூட அருகில் இல்லாமல் போனது வேதனைக்குரியதே.

http://www.alaikal.com/news/?p=87797

siriya_president.jpg

"அரபு லீக்கில், சிரியாவின் உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது. இன்னும் மூன்று நாட்களில், அரபு லீக் ஒப்பந்தத்தை சிரியா நடைமுறைப்படுத்தாவிட்டால், சிரியா மீது பல பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்,' என, அரபு லீக் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரபு லீக்கின் இந்த நடவடிக்கையால் கோபம் அடைந்த சிரியா அதிபர் அசாத் ஆதரவாளர்கள், டமாஸ்கசில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தை நேற்று தாக்கி சேதப்படுத்தினர்.

8 மாதங்களாக... : சிரியாவில், அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிரான போராட்டங்கள் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகின்றன. இப்போராட்டங்களில், ராணுவ வன்முறைக்கு, 3,500 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

அமைதி ஒப்பந்தம்: சிரியாவில் அமைதியைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரபு லீக், ஒரு ஒப்பந்தத்தை தயாரித்தது. அதன்படி, உடனடியாக ராணுவ வன்முறையைக் கைவிட வேண்டும். சிரியாவில் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ராணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். இரண்டு வாரங்களில் அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் பேச்சு நடத்த வேண்டும். வெளிநாட்டு ஊடகங்களை சிரியாவுக்குள் அனுமதிக்க வேண்டும்.

ஒப்புதலை மீறிய ராணுவம்: முதலில் இந்த ஒப்பந்தத்திற்கு சிரியா ஒப்புக் கொண்டது. கையெழுத்திட்டதாகக் கூறப்பட்ட மறுநாளே, ராணுவம் மீண்டும் மக்கள் மீது தாக்குதல் நடத்தத் துவங்கியது. இதனால் அரபு லீக்கில் இருந்து சிரியாவை நீக்கக்கோரி மக்கள் போராடத் துவங்கினர்.

அரபு லீக் கூட்டம் : இந்நிலையில், நேற்று முன்தினம், எகிப்து தலைநகர் கெய்ரோவில், அரபு லீக் கூடியது. மொத்தம், 22 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. சிரியாவில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலை குறித்தும், சிரியா அரபு லீக்கின் ஒப்பந்தத்தை மீறியது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இறுதியில், சிரியாவின் உறுப்பினர் அந்தஸ்தை நீக்குவது என முடிவு செய்யப்பட்டது. லீக்கில் மொத்தம் உள்ள, 22 நாடுகளில்,சிரியாவின் உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு, 18 நாடுகள் ஆதரவாகவும், மூன்று நாடுகள் எதிராகவும் ஓட்டளித்தன. ஈராக் மட்டும் ஓட்டளிக்கவில்லை.

கடும் எச்சரிக்கை : இந்த முடிவை அறிவித்த கத்தார் பிரதமர் ஹமாத் பின் ஜாசேம் அல் தானி, "சிரியாவின் உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது. இன்னும் மூன்று நாட்களில் (நவம்பர் 16ம் தேதிக்குள்) ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், பொருளாதார மற்றும் அரசியல் தடைகள் விதிக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

மகிழ்ச்சி, கோபம் : அரபு லீக்கின் இந்த முடிவு வெளியான உடன், சிரியாவில் அதிபருக்கு எதிராகத் திரண்ட மக்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். ஆனால், தலைநகர் டமாஸ்கசில் உள்ள சவுதி அரேபியத் தூதரகம் மீது அதிபர் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த முடிவை ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை வரவேற்றுள்ளன.

என்ன காரணம்? : சிரியா மீது அரபு லீக் உடனடியாகப் பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும் என்றாலும், தற்போதைக்கு அந்நாட்டிற்கு ஒரு கடும் எச்சரிக்கையை மட்டும் விடுத்தால் போதுமானது என்று கருதியதால் தான், மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் வேலை : அரபு லீக்கிற்கான சிரிய தூதர் யூசுப் அகமது கூறுகையில், "அரபு லீக் ஒப்பந்தத்தை சிரியா ஏற்கனவே நடைமுறைப்படுத்தி விட்டது. அதன் பின்னும், 125 போலீசார் போராட்டத்தில் பலியாகியுள்ளனர். இந்த நீக்கம் சட்டவிரோதமானது. இதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளது. இந்த முடிவு, லிபியாவை போல சிரியாவிலும் அன்னிய ஊடுருவலுக்கு வழிவகுக்கிறது' என்றார்.

  • தொடங்கியவர்

சர்வாதிகாரி ஆஸாட்டுக்கு அரபு லீக் மூன்று நாட்கள் அவகாசம்

சிரியாவில் பொது மக்கள் மீது தாக்குதலை நடாத்தி சராசரி நாளுக்கு 50 பேர் வீதம் கொன்று குவித்துவரும் சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டுக்கு வெறும் மூன்றே மூன்று நாட்கள் மட்டும் அவகாசம் கொடுத்துள்ளது.

நேற்றுக் கூடிய அரபு லீக். வரும் மூன்று தினங்களுக்குள் பொது மக்கள் மீது நடாத்தும் அத்தனை தாக்குதல்களையும் நிறுத்தி, கொலைகார இராணுவத்தை பின்வாங்கச் செய்ய வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளது. செய்யத் தவறினால் சிரியாவிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க நேரிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அறிவித்தலை அரபுலீக்கின் 22 நாடுகளின் சார்பில் கட்டார் பிரதமர் ஜசீம் அல்தானி அறிவித்துள்ளார். அரபுலீக் விடுத்துள்ள எச்சரிக்கை உலகத்தின் வெத்துவேட்டு நாடுகள் பலதிற்கு ஆச்சரியத்தை எற்படுத்தியுள்ளது. தமது பிராந்தியத்தில் எவ்வளவோ பேரழிவுகள் நடைபெற ஊமைகளாக இருந்த இவர்கள் தங்களுடைய இயலாமை மிக்க அறிவை எண்ணி வருந்த அரபுலீக்கின் குரல் ஒரு தூண்டுதலாக இருந்துள்ளது.

http://www.alaikal.com/news/?p=88143

  • தொடங்கியவர்

சிரியாவுக்கு ஆதரவாக ரஸ்யா புதிய இராஜதந்திர சிக்கல்

சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டை பதவியிறக்க மேலை நாடுகள் கொண்டுள்ள விருப்பத்திற்கு ரஸ்யா முக்கிய வில்லனாக களமிறங்கும் என்று இன்றைய மேலைத்தேய செய்திகள் தெரிவிக்கின்றன. ரஸ்யாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் புற்றின் வெற்றி பெற்று நாட்டின் அதிபராக பதவியேற்றால் சிரிய விவகாரத்தில் நேரடியாக தலையிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மானிட படுகொலைகளை தொடர்ந்து செய்துவரும் ஒரு சர்வாதிகாரிக்கு முதல் தடவையாக ஒரு நாடு ஆதரவு கொடுத்துள்ளது என்றால் அது ரஸ்யாதான். ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் சிரியாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தடைகளை வீட்டோ அதிகாரத்தை பாவித்து தடுத்துள்ளது ரஸ்யா. அத்துடன் நின்றுவிடாது கடந்த சில தினங்களாக சிரியாவுக்கு எதிராக மேலை நாடுகள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு எதிரான விமர்சனங்களை ரஸ்யா தெரிவித்து வருவதோடு, மேலை நாடுகளையும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளது.

அத்தோடு ஈரானுக்கு எதிராக வரவுள்ள தடைகளையும் கண்டித்துள்ளது. சோவியத் ரஸ்யா காலத்தில் பெற்ற கொள்கைகளின் அடிப்படையில் மறுபடியும் ரஸ்யா தனது கருத்துக்களை வடிவமைக்க ஆரம்பித்துள்ளது. இப்போதும் வடகொரியா, ஈரான், கியூபா, சிரியா போன்ற நாடுகளுடன் ரஸ்யா ஆழமான உறவைப் பேணி வருகிறது. தேர்தலில் வென்றதும் புதிய பலமான அணியை அமைத்து மறுபடியும் முதன்மை வல்லரசாக ரஸ்யாவை கொண்டுவர புற்றின் முயற்சிப்பார் என்றும் முன்னெதிர்வு கூறப்படுகிறது. ஆனால் மேலைநாடுகளோ பழைய பாணியை கைவிட்டு ரஸ்யாவை தம்முடன் இணைந்து செயற்பட வரும்படி அழைக்கின்றன. இணைவது இலாபகரமான விடயமல்ல என்பதை ஈராக், ஆப்கான் போரில் கண்டுள்ள ரஸ்யா எதிரணியில் நிற்பதே தனது முதன்மைக்கு அவசியம் என்ற நிலைப்பாட்டை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.

http://www.alaikal.com/news/?p=88760

  • தொடங்கியவர்

சிரியாவின் மீது அரபு நாடுகளின் லீக் தடை விதிப்பு

சிரியாவின் மீது தடைகளை விதிப்பதற்கு அரபு நாடுகளின் லீக் நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சொத்துக்களை முடக்குதல், முதலீடுகளை தடுத்தல் என்பனவும் இவற்றில்அடங்கும்.

சிரிய அரசாங்கத்துக்கு எதிராக பல மாதங்களாக பாரிய ஆர்ப்பாட்டங்கள் தொடரும் நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குவதற்கு சிரிய அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளினால் சுhர் 3500 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அடக்குமுறை குற்றச்சாட்டின் காரணமாக சிரியாவை இம்மாத முற்பகுதியில் தனது அங்கத்துவத்திலிருந்து அரபு லீக் இடைநிறுத்தியது.

இந்நிலையில் சிரியாவின் நிலைமையை அவதானிப்பதற்கு அரபு லீக் நாடுகளைச் சேர்ந்த சுமார் 4000 கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை சிரியா நிராகரித்த பின்னணியில் இத்தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எகிப்தின் கெய்ரோ நகரில் கூடிய அரபு லீக் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையிலான இத்தடைகளை விதிக்கும் தீர்மானத்தை அங்கீகரித்தார். இத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அதற்கு ஆதரவாக 19 வாக்குகளும் எதிராக 3 வாக்குகளும் கிடைத்தன. கட்டார் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான ஷேக் ஹமட் பின் ஜாஸிம் அல் தானி இத்தடை குறித்த விபரங்களை கெய்ரோவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்டார்.

- சிரிய மத்திய வங்கியுடனான கொடுக்கல் வாங்கல்களை இடைநிறுத்துதல்.

- சிரியாவில் அரபு நாடுகளின் அரசாங்கங்களால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கான நிதியை நிறுத்துதல்

- சிரியாவின் சிரேஷ்ட அதிகாரிகள் ஏனைய அரபு நாடுகளுக்கு பயணம் செய்தற்கு தடை விதித்தல்

- ஜனாதிபதி பஷார் அல்அஸாத் தலைமையிலான சிரிய அரசாங்கத்தின் சொத்துக்களை முடக்குதல் ஆகியன இத்தடைகளில் அடங்கும்.

அரபு லீக்கின் ஸ்தாபக நாடுகளில் ஒன்றான சிரியா, இத்தடைத் தீர்மானங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இது அரபு ஐக்கியத்தின் மீதான துரோகம் எனவும் கூறியுள்ளது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/31602-2011-11-27-18-52-31.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.